ஆயிரம் கிளைகள்.
நூற்றுக்கணக்காண வருடங்களாக,
ஆணி வேரிலிருந்து ஆயிரமாயிரம் கிளைகளாகப் பிரிந்து,
கல்லுடனும் மண்ணுடனும் இழைந்து உறவாடி ஏற்படுத்திக்கொண்ட பந்தம்,
சாலையோரத்தில்..
இவை இருந்த இடத்தில் இன்று (செங்)கல் முளைத்துவிட்டது!!
Simple blog on things I learn and enjoy.
நூற்றுக்கணக்காண வருடங்களாக,
ஆணி வேரிலிருந்து ஆயிரமாயிரம் கிளைகளாகப் பிரிந்து,
கல்லுடனும் மண்ணுடனும் இழைந்து உறவாடி ஏற்படுத்திக்கொண்ட பந்தம்,
சாலையோரத்தில்..
இவை இருந்த இடத்தில் இன்று (செங்)கல் முளைத்துவிட்டது!!
நாம் அமெரிக்கால இருந்த காலங்கள்ல ரொம்பவே மிஸ் பண்ணினது சென்னை டிசம்பர் சீசனை. எனக்குத் தெரிஞ்சவங்க யாரவது கச்சேரிக்குப் போய்ட்டு வந்தா அவங்களைத் தொலைபேசில கூப்டு, ‘என்னென்ன கீர்த்தனைகள் பாடினாங்க, புதுசா என்ன பாடினாங்க, எந்த ராகம் மெயின், எது சப் மெயின், ராகம் தானம் பல்லவியா, துக்கடா.. தில்லானா..’-னு கேள்வியா கேட்டுத் தொளைப்பேன். ஜெயா டிவி-ல ‘மார்கழி மகா உற்சவம்’ ஒளிபரப்ப ஆரம்பிச்சப்புறம், டிசம்பர் சீசன் சென்னையைத் தாண்டி தமிழ்நாடு முழுக்க பரவின மாதிரி இருந்துச்சு. [...]
Filed under General Posted on January 5th 2010
பல மருத்துவ சின்ரோம்கள் மாதிரி ஞாயிறு மாலை சின்ரோம்னு ஒன்னு இருக்கறதாகத்தான் தோனுது. அப்படி ஒரு வெறுமை ஞாயிறு மாலைகள்ல சில நேரம் இருக்கும். அதுவும் தனியா இருக்கும்போது அதிகமாயிருக்குமோ என்னவோ. இன்னிக்கு மாலைல அப்படி இருக்கும்போது அதுக்கு என்னதான் காரணமா இருக்கும்-னு யோசிக்கறேன்.
அடுத்தநாள் காலைல அலுவலகம் போகணுமே-ங்கற கவலையா?
வீட்டையும் உறவுகளையும் விட்டு வெகுதூரம் வந்திருக்கோமே-ங்கற உணர்வா?
சனி ஞாயிற்றுக்கிழமைகள்ல கடை கடையா ஏறி அலைஞ்ச களைப்பா?
மனதளவுல மட்டும் இல்லை. உடலளவுலையும், தலைக்குள்ள தண்ணீர் புகுந்துகிட்ட மாதிரி ஒரு [...]
Filed under General Posted on October 26th 2009
முந்தாநாள் இரவு, ஒரு 8 மணி இருக்கும், அலுவலகத்துல இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வர்ற வழில ஒரு வண்டில பெரிய பிள்ளையார உக்கார வெச்சு ஊர்வலமா வந்துட்டு இருந்தாங்க. அதுல மைக் வெச்சு இப்டி சொல்லிட்டு வந்தாங்க.
“அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே,
ஆழ்வார்திருநகர், 11வது தெரு, காய்கறி மார்க்கெட்டைச் சேர்ந்த, வக்ரதுண்ட மகா கணபதி, உங்கள் வீடுகளை நோக்கி ஊர்வலமாக வந்துகொண்டிருக்கிறார். அனைவரும் வந்து அருள் பெற்றுக்கொள்ளுமாரு கேட்டுக்கொள்கிறோம்!! .
Filed under General Posted on September 2nd 2009
வேண்டுதலுக்காக மொட்டை ஏன் அடிக்கறாங்க? சாமிக்கு ஏன் முடியைக் கொடுக்கணும்? உண்டியல்ல காசு போட்டா அதுல ஒன்னு ரெண்டு சதவீதம் கோவிலுக்குப் போகுது. ஆடு கோழி பலி கொடுத்தா பிரியாணி கெடைக்குது. முடியைக் கொடுக்கறதால என்ன பயன்?
‘முருகா! என் புள்ளை எப்படியாவது பத்தாவது பாஸ் பண்ணிட்டா, பழநி-க்கு வந்து அவனுக்கு மொட்டை போடறேன்பா!’. உடல் நலம் இல்லாதபோது வேண்டப்படும் வேண்டுதல்கள்தான் அதிகமா இருக்கும்னு நெனைக்கறேன். என் மகனை எப்புடியாவது காப்பாத்திடு, மகளை குணப்படுத்திடு இப்டி பல [...]
Filed under General Posted on August 28th 2009
மொதல் மொதலா H1B விசால அமெரிக்கா போனப்போ, அமெரிக்கா எந்தத் திசைல இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது. வட அமெரிக்கா தென் அமெரிக்கா கண்டங்கள்னு எப்போவோ படிச்சிருக்கேனே தவிர, அதெல்லாம் மேப்ல எங்க இருக்குன்னு தெரியாது. அங்க மக்கள் எப்டி இருப்பாங்க, எப்டி பழகுவாங்க, எப்டி பேசுவாங்க, என்னென்ன மொழிகள் பேசறவங்கல்லாம் அமெரிக்கால இருக்காங்க, என்ன சாப்டுவாங்க எதுவும் தெரியாது. சாம்பிளுக்குக்கூட ஒரு பீஸ்ஸா சாப்டது கிடையாது. சபரிமலை சாஸ்தாவைத் தெரியுமே தவிர, பாஸ்த்தா-ன்னு ஒன்னைக் கேள்விப்பட்டது கூட [...]
Filed under
General
சிறுகதை முயற்சிகள்
Posted on
August 17th 2009
India is grappling with a swine flu epidemic. There is heightened panic among people following reports of growing number of HIN1 cases and the recent death of a school child in Pune.
Here’s an FAQ on the dreaded virus:
How do people become infected with influenza A (H1N1)?
Outbreaks in humans are now occurring from human-to-human [...]
Filed under General Posted on August 10th 2009
‘செட்டியாரே, கோல்டு பேப்பர் ஒன்னு, பச்சை பேப்பர் ஒன்னு, செகப்பு ஒன்னு’. ஆடிப்பெருக்கு அன்னிக்கு சப்பரத்துல/சப்பரதட்டில ஒட்றதுக்காக இப்டி பல வண்ணங்கள்ல பேப்பர் வாங்குவோம். பெரிய ஆளுயர சப்பரத்துல இருந்து தீப்பெட்டில செய்யற ‘மினி சப்பரம்’ வரைக்கும் வீதி நிறைய ஓடிட்டே இருக்கும். ஆடிப்பெருக்குக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடில இருந்தே சப்பரம் செய்யற வேலைகள் ஆரம்பமாய்டும். முந்தின வருஷம் பரண்ல போட்ட சப்பரத்தை எடுத்து ஆசாரிட்ட கொடுத்து சரி செஞ்சு தரச்சொல்லி அப்பாவை நச்சரிக்கணும், தீப்பெட்டி சப்பரத்துக்காக [...]
Filed under General Posted on August 3rd 2009
எட்டு கால்கள்
சுமந்த மேனி
எண்ணூறு கால்களில்.
எறும்புத் தோள்களில்
இறந்த சிலந்தி.
Filed under General Posted on July 29th 2009
‘என்னங்க, என் ச்சப்பல்ல குஷன்லாம் சுத்தமா போய்டுச்சுங்க, போட்டுட்டு நடந்தாலே காலை வலிக்குதுங்க’ என்று ஆரம்பித்தாள் என் மனைவி.
‘முருகா!! நாட்ல நல்லவங்களுக்கு மட்டுமே ஏம்பா சோதனைகளை கொடுக்கற?’ என்றேன் நான்.
கிரைண்டர் ஸ்லோவா ஓடுது, மிக்ஸில சட்னி சரியா அரைபட மாட்டேங்குது, ஃப்ரிட்ஜ்ல ஃப்ரீஸர் டீ-ஃப்ராஸ்ட் ஆகவே மாட்டேங்குது இப்டி எதுல என்ன ப்ரச்சனை வந்தாலும் உடனே புதுசா ஒன்னு வாங்கிடணும் என் மனைவிக்கு. அதுவரைக்கும் அர்ச்சனைதான். ஒவ்வொரு முறை சட்னி அறைபடும் போதும் என் காதுகளும் அறைபடும். [...]
Filed under
General
சிறுகதை முயற்சிகள்
Posted on
July 17th 2009