Archive for the 'சிறுகதை முயற்சிகள்' Category

அக்கரைக் கருப்பு.

மொதல் மொதலா H1B விசால அமெரிக்கா போனப்போ, அமெரிக்கா எந்தத் திசைல இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது. வட அமெரிக்கா தென் அமெரிக்கா கண்டங்கள்னு எப்போவோ படிச்சிருக்கேனே தவிர, அதெல்லாம் மேப்ல எங்க இருக்குன்னு தெரியாது. அங்க மக்கள் எப்டி இருப்பாங்க, எப்டி பழகுவாங்க, எப்டி பேசுவாங்க, என்னென்ன மொழிகள் பேசறவங்கல்லாம் அமெரிக்கால இருக்காங்க, என்ன சாப்டுவாங்க எதுவும் தெரியாது. சாம்பிளுக்குக்கூட ஒரு பீஸ்ஸா சாப்டது கிடையாது. சபரிமலை சாஸ்தாவைத் தெரியுமே தவிர, பாஸ்த்தா-ன்னு ஒன்னைக் கேள்விப்பட்டது கூட [...]

Read Full Post »

நம்பகம்.

‘என்னங்க, என் ச்சப்பல்ல குஷன்லாம் சுத்தமா போய்டுச்சுங்க, போட்டுட்டு நடந்தாலே காலை வலிக்குதுங்க’ என்று ஆரம்பித்தாள் என் மனைவி. ‘முருகா!! நாட்ல நல்லவங்களுக்கு மட்டுமே ஏம்பா சோதனைகளை கொடுக்கற?’ என்றேன் நான். கிரைண்டர் ஸ்லோவா ஓடுது, மிக்ஸில சட்னி சரியா அரைபட மாட்டேங்குது, ஃப்ரிட்ஜ்ல ஃப்ரீஸர் டீ-ஃப்ராஸ்ட் ஆகவே மாட்டேங்குது இப்டி எதுல என்ன ப்ரச்சனை வந்தாலும் உடனே புதுசா ஒன்னு வாங்கிடணும் என் மனைவிக்கு. அதுவரைக்கும் அர்ச்சனைதான். ஒவ்வொரு முறை சட்னி அறைபடும் போதும் என் [...]

Read Full Post »

காதல் கொசுக்கள்.

என் காருக்குள்ள ஒரு ஜோடி காதல் கொசுக்கள் இருந்துச்சு. ரொம்ப அன்யோன்யமான கொசுக்கள். அன்றில் பறவைகள் போல ஒன்ன விட்டு ஒன்னு பிரியவே பிரியாத கொசுக்கள். சேர்ந்தேதான் பறக்கும் சேர்ந்தேதான் உக்காரும், சேர்ந்தேதான் கடிக்கும், சேர்ந்தே எஸ்கேப் ஆய்டும். கார்ல காதல் பாட்டுகள் போட்டுட்டா சேர்ந்து கூடவே பாடிக்கிட்டு சுத்திச் சுத்தி பறந்து வரும். ‘கண்கள் இரண்டால்’ பாட்டு போட்டா டபுள் குஷியாய்டும். தீபாவளிக்காக சென்னைல ஊருக்குப் போக நாங்க எல்லோரும் தயாரானப்போ அதுங்களும் தயாராய்டுச்சு. சிட்டி [...]

Read Full Post »

கிருஷ்ணாவின் மனைவி.

கிருஷ்ணாவின் மனைவி, இனிமே ‘கிம’-ன்னு சுறுக்கமா அழைக்கப்படப்போற இவங்க நல்லா தமிழ் பேசுவாங்க. பெப்ஸி உமா மாதிரி அழகான கனீர் குரல். அமேரிக்கால, நியூ யார்க் நகரத்துல வேலை செய்யறாங்க. ‘கிம’ வேலை பாக்கற அலுவலகத்துல அவங்கள ரொம்ப வேலை வாங்கறாங்க. காலைல 9.30 மணிக்கு அலுவலகத்துக்குள்ள போனா, மதியம் சாப்பாட்டு இடைவேளையைத் தவிர, மாலை 5.30 மணி வரைக்கும் வேலை வேலை வேலைதான். வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போனதுக்குப்போனதுக்கு அப்புறமும் அலுவலக வேலைக்காக ‘லாகான்’ பண்ணி [...]

Read Full Post »

செந்தில்கள். (Updated)

பள்ளிக்கூட நாட்கள்ல இருந்தே இந்த செந்தில்கள் என்னை விட்டதே இல்லை. செந்தில், செந்தில் குமார், செந்தில் குமரன், செந்தில் வேலன் இப்டி பல பெயர்கள்ல கூடவேதான் வந்துகிட்டு இருக்காங்க. சில நேரம், ஒரே வகுப்புலயே ரெண்டு செந்தில் குமார்களும் இருந்திருக்காங்க. அதுவும் ஒரே இனிஷியலோட. பல்லு எடுப்பா இருக்கற ஒருத்தனை ‘பல்லு செந்தில்’ன்னும் சந்தனப் பொட்டு வெச்சிருக்கற செந்திலை ‘சந்தனப் பொட்டு செந்தில்’ன்னும் அடையாளம் வெச்சுக்க வேண்டியிருக்கும். சில செந்தில்கள் ரொம்ப நல்லா படிச்சு எனக்கு வேட்டு [...]

Read Full Post »

ப்ராக்டிகல்.

1 ‘ப்ராக்டிக்கலா யோசிச்சுப்பாரு கலை. கல்யாணம் பண்ணிக்காம ஒரு பொண்ணால ஒரு லெவலுக்கு மேல வாழ்க்கை நடத்தறது ரொம்பக் கஷ்டம்’ என்று ஆரம்பித்தாள் சுபா. ‘கல்யாணத்தைத் தவிர வேற ஏதும் பேச மாட்டியா? வீட்லதான் இதையே பேசி தொல்ல பண்றாங்கன்னா நீயுமா?’ கலை என்கிற கலையரசியும் சுபா என்கிற சுபஸ்ரீயும் ஒரு இந்திய நிறுவனத்திற்காக, அமெரிக்காவில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். ஒரே நாளில் வேலையில் சேர்ந்து, ஒரே தொழில்நுட்பத்தில் வேலை செய்து, ஒரே நாளில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா [...]

Read Full Post »

காளை மனம்.

‘குமாரூ, வெளிய களம்பிடாதடா. கொஞ்சம் ரேசன் கடை வரைக்கும் போவணும்டா’ குமாரின் அம்மா கெஞ்சலாக சொன்னாள். ‘ஒனக்கு நேரங்காலமே தெரியாது, வெளில போகும்போதுதான் இங்க போவணும் அங்க போவணும்-ப. நாளைக்கு பாத்துக்கலாம் போ!’ ‘இல்லடா, இன்னிக்கு அரிசி போடறாங்கடா. செத்த போய்ட்டு வந்துருடா!!’ ‘காலைலயே சொல்றதுக்கு என்ன?’ ‘இப்பதாண்டா அப்பா வந்து இருவது ரூவா குடுத்துட்டுப் போனாரு.’ ‘ரேசன் கடை க்யூலல்லாம் போயி நிக்க முடியாதும்மா!! அவரயே போவ சொல்றதுததான?’ கரெக்ட்டா எதிர் வீட்டு சுஜாதா ட்யூஷனுக்கு [...]

Read Full Post »

இ.கொ.வ.

“மொதல்ல காலைல வீட்டு வாசல்ல வர்ற வண்டிலயே காய்கறி வாங்கறதை நிறுத்துங்க. பக்கத்து தெருல ஒரு பெரிய காய்கறி கடை இருக்கு. தினமும் காலைல 7 மணிக்குள்ள போனா எல்லா காய்கறியும் ஃப்ரெஷ்ஷாவே கெடைக்குது. அங்கே போயி வாங்கினா என்ன? நாளைல இருந்து தினமும் அங்க போய் வாங்கிட்டு வாங்க! நடந்து போங்க!!” மருமகள் சொல்லிக்கொண்டிருந்தாள். “ஆமாம்மா, நாளைல இருந்து அங்கேயே வாங்கிட்டு வந்துடுங்கம்மா”. மகனும் ஆமோதித்துக்கொண்டிருந்தான். “நாளைல இருந்து காலைல காஃபியை நிறுத்தப்போறேன். கஞ்சி போட்டுத் [...]

Read Full Post »

எவ்ளோ சம்பளம்?

‘பொம்பளைங்க கிட்ட வயசைக் கேக்காத, ஆம்பளைங்ககிட்ட சம்பளம் எவ்ளோன்னு கேக்காத’-ன்னு ஏதோ ஒரு சினிமால மனோரமா ஆச்சி ஒரு வசனம் பேசறமாதிரி ஒரு ஞாபகம். ஆம்பளைங்க வாங்கற சம்பளம் ஒரு ப்ரைவசியான விஷயம். ஆனா எது ப்ரைவசியான விஷயமோ அதை தெரிஞ்சுக்கறதுல மக்களுக்கு ஆர்வம் அதிகமாய்டுது. சிலபேரு ‘என்ன சம்பளம் வாங்கறீங்க’-ன்னுகேக்கறதுக்கு ரொம்ப கூச்சப்படுவாங்க. சிலபேரு, ‘உங்க பேரு என்ன?’-ன்னு கேக்கறமாதிரி சதாரணமா கேப்பாங்க. ‘பையன் என்ன சம்பளம் வாங்கறாரு’-ன்னு பொண்ண கொடுக்கறவங்க கேட்டா ஒரு நியாயம் [...]

Read Full Post »

செல்வம். – ரீமிக்ஸ் சிறுகதை.

தமிழ் சினிமா உலகத்துல ரீமிக்ஸ் இப்போ ஒரு ஃபாஷனா ஆய்டுச்சு. பழைய படங்கள எடுத்து அப்டியே திரும்பவும் எடுக்கறது. பழைய பாடல்கள எடுத்து மாத்தறது-ன்னு இந்த ரீமிக்ஸ் கலாச்சாரம் பிரபலமாயிட்டு இருக்கு. நமக்கு (கொஞ்சம்) தெரிஞ்ச ஏரியால நாமும் ரீமிக்ஸ் பண்ணலாமே-ன்னு ஆரம்பிச்சேன். சுஜாதா சார் எழுதின சிறுகதை ஒன்ன எடுத்துகிட்டு அதை ரீமிக்ஸ் பண்ணினா எப்டி இருக்கும்-ன்னு ஆரம்பிச்சு போன மாசம் ரெண்டு மூணு நாள் ஒக்காந்து ஒரு கதை தயார் பண்ணினேன். ஆனா எங்க [...]

Read Full Post »