Archive for the 'சிறுகதை முயற்சிகள்' Category

கதையில் அமைத்து எழுது!!

ஒரு கதைய புத்தகத்துலயோ, நாவலாகவோ, இல்லை, வார இதழ்களிலோ படிக்கறதுக்கும், இணையத்துல படிக்கறதுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. இணையத்துல படிக்கும்போது ஒரு எக்ஸ்ட்ரா டைமென்ஷன் இருக்கு-ன்னு நெனைக்கறேன். புத்தகத்துலயோ, வாராந்திர இதழ்கள்லயோ கெடைக்க முடியாத ஒரு டைமென்ஷன். நான் எந்த டைமென்ஷன சொல்றேன்னு இந்தப் பதிவோட முடிவுல இன்னும் கொஞ்சம் பெட்டரா புரியும். பள்ளிக்கூட நாட்கள்ல, தமிழ்த் தேர்வுகள்ல, ஒரு வார்த்தை கொடுத்துட்டு அதை ‘வாக்கியத்தில் அமைத்து எழுது’-ன்னு சொல்லுவாங்க. வாக்கியத்தில் அமைத்து எழுது: ‘ஒளிர்கிறது’ [...]

Read Full Post »

கதை ஒன்று சொல்லவா?.

அழகிய தீயே-ங்கற படத்துல நாலு நண்பர்கள் இருப்பாங்க. அதுல சிலபேர் சினிமா துறைல இருப்பாங்க. ‘வரிசையா வெஸ்டர்னைஸ்டு படங்களா வருது ஒரு நல்ல கிராமத்து கதைய படமா எடுக்கணும்’-னு ஒருத்தர் சொல்லுவாரு. இன்னொருத்தர் அதுக்கு கதை சொல்லுவாரு. எடுத்தொன்ன ஒரு சின்ன கிராமத்த காட்றோம். அங்க ஒரு பொண்ணும் அவங்க அம்மாவும் இருக்காங்க. அந்தப் பொண்ணுக்கு அவங்க மாமன் மகனையே கல்யாணம் பண்ணி வெக்கணும்-னு அவங்க அம்மா ட்ரை பண்றாங்க. அதுல அந்தப் பொண்ணுக்கு இஷ்டமே இல்ல. [...]

Read Full Post »

திருமணம் 1.0

ஆகாஷுக்கு காலை முதலே பரபரப்பு பற்றிக்கொண்டது. இந்தத் ‘திருமண’த்திற்காக அவன் பல நாட்களாக காத்திருந்தான். ஒரு மாதம், முப்பது நாட்கள். இருபத்தொன்பது நாட்கள் என கவுண்ட் டவுன் ஆரம்பித்து, இன்று இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றது. ஷார்ட்ஸ், ஜாக்கெட், ஹெட் போன், க்ளௌஸ் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு தயாரானான். தான் தேர்ந்தெடுத்த மணப்பெண் ஐஸ்வர்யாவின் படத்தை எடுத்துப் பார்த்தான், கன்னத்தை தட்டினான். அலங்கரிக்கப்பட்ட குதிரையில், திருமண மண்டபத்தின் வாசலில், பட்டு வேஷ்டி பட்டு சட்டை [...]

Read Full Post »

பாவம். கொடூரன். (U)

‘வணக்கம்-ங்க. நல்லா இருக்கீங்களா? ‘ ‘என் பேரு, ஹூவர்.(Hoover)!. நைஸ் டு மீட் யூ!!’ ‘இன்னிக்குதான் நான் விடுதலை அடைஞ்சேன். இவ்ளோ நாளா ஒரு கொடூர முதலாளி கிட்ட மாட்டிக்கிட்டு நான் பட்ட அவஸ்தைகள்ல இருந்தும், கொடுமைகள்ல இருந்தும் இன்னிக்குதான் விடுதலை. அந்த மகிழ்ச்சிய உங்க கிட்ட பகிர்ந்துக்கறதுல ரொம்ப சந்தோஷம்.’ ‘வண்டி வர்றதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. அதுக்குள்ள, என்னோட கதைய சுறுக்கமா சொல்றேன்.’ ‘என்னோட முழுப்பேரு ஹூவர் விண்ட்டணல்.(Hoover Windtunnel). பொறந்த ஊரு, [...]

Read Full Post »

விதை.

‘சன்னதி தெருல ஏதோ கூட்டம் நடக்கப்போறதா பேசிக்கறா, அந்த வழியா போகாத’ ‘வடக்கு வீதி வழியா சுத்தீண்டுபோயி, மேலவாசல் தேரடி வழியா உள்ள போ!!’ ‘பூஜைய முடிச்சுண்டு போன வழியாவே திரும்ப வந்துடு’ ‘வழில யார் என்ன கேட்டாலும் பதில் பேசாத’ ‘யாராவது எதாவது கோஷம் போட்டுண்டு போனான்னா, அந்தப் பக்கம் போகாத, திரும்பி ஆத்துக்கே வந்துடு’ ‘தலைய நன்னா சீவி முடிஞ்சுண்டு, நெத்திக்கு இட்டுண்டு போ!’ ‘போலீஸ்காராள பாத்தா நமஸ்காரம் சொல்லிட்டு போ. அவாள பாத்தா [...]

Read Full Post »

மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் – தமிழில்

(http://thenkoodu.com போட்டிக்காக!!) நீண்ட நாட்களுக்குப் பிறகு பீட்டரும், ஜானத்தனும் சந்தித்துக்கொண்டார்கள். இருவர் முகத்திலும் ஆச்சரியம் கலந்த சந்தோஷ மின்னல்கள் தெரித்து அடங்கின. பீட்டர் பேச்சை தொடங்கினான். ‘ஹே மச்சான் எப்டி இருக்க? ரொம்ப நாளாச்சுடா உன்ன பாத்து!’ ஜானத்தன், ‘ஹேய், நீ எப்டி இருக்க பீட்? அப்பா!! உன்னப் பாத்து பல வருஷம் ஆயிருச்சில்ல?’ பீட்டர் கொஞ்சம் சோகமான குரலில், ‘போன வருஷம் உனக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்-ல சீரியஸா இருந்ததா கேள்விப்பட்டேன். அப்பவே வந்து [...]

Read Full Post »

ப்ரமோஷன்.

காட்சி – 1: கார்த்திகேயன் வீடு / நள்ளிறவு. தூக்கிக்கொண்டிருந்த கார்த்திகேயன் அலறியடித்துக்கொண்டு எழுத்துகொள்கிறான். முகமெல்லாம் வியர்த்திருக்கிறது. அருகில் படுத்துறங்கிக்கொண்டிருந்த மனைவி மேகலா பதற்றம் சிறிதும் இல்லாமல் எழுந்து விளக்கை போடுகிறாள். அருகில் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்து அவனிடம் கொடுத்தபடி, மேகலா : என்ன திரும்பவும் அதே கனவா? கார்த்திகேயன் தண்ணீரை வாங்கி குடித்தபடி, கார்த்திகேயன் : ம்ம்ம்ம்ம் மேகலா : அதேமாதிரி பாலைவனமா? கார்த்திகேயன் : ம்ம்ம்ம்ம் கார்த்திகேயன் முகத்தில் இன்னும் பயத்தின் ரேகைகள் [...]

Read Full Post »

கனவு.

‘கோகிலாட்ட சீக்கிரம் காஃபிய கொடுத்து அனுப்புங்க!!’ உரத்த குரலில் சொன்னார் கோகிலாவின் அப்பா. பெண் பார்க்க வந்த மனோகரும் அவனது மாமா மாயியும் சோபாவில் உட்கார்ந்திருந்தார்கள். உறவினர் பெருசுகள் சில தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் உட்கார்ந்திருந்தன. கோகிலாவின் உறவுக்காரச் சிறுவன் ஒருவன் ஓடிப்போய் மனோகரின் மடியில் ஏறிக்கொண்டான். வெட்கம், எதிர்பார்ப்பு, பதற்றம், அவசரம் என மாறுபட்ட உணர்ச்சிகள் மனோகரின் முகத்தில் வந்து வந்து போயின. முந்தின இரவு கண்ட கனவை ஒரு முறை அசைபோட்டுக்கொண்டான். அனைவருக்கும் காஃபி [...]

Read Full Post »

சிறுகதை எழுதுவது எப்படி?

‘முத்தம்மாவின் முதல் முத்தம்’, ‘சங்கரன் B.E, என் காதலன்’, ‘ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா??’, ‘காதல் போயின் சாதல்’ இப்படி, கிராமத்துக் காதல், ஊரைவிட்டு ஓடிய காதல், கல்லூரிக் காதல் என பலவகைப்பட்ட காதல் கதைகளில், பலபேரை காதலிக்க வைத்த எனக்கு, என் சொந்தக் காதல் கதையை எழுதும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ஜானகி. அவளை நான் முதன் முதலில் சந்தித்தது என் வீட்டில்தான். அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து அப்போது ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. வீட்டுப்பொருட்கள் யாவும் [...]

Read Full Post »

அறிவுரை.

ஒனக்கு கடவுள் மாதிரி பலபேரு பல நேரங்கள்ல பலமாதிரி அறிவுரைகள் சொன்னாலும் உன் மண்டைல ஏறவே ஏறாது. பட்டப்புறமாவது புத்தி வருதா?? அதுவும் கெடையாது!! இப்டிதான் படிக்கற வயசுல புத்தகத்த எடுத்து வெச்சு படிடா படிடா-ன்னு அப்பா சொல்லிட்டே இருந்தாரு. கேக்காம ஊர சுத்துன. பத்தாவது ஃபெயில் ஆனப்புறமாவது புத்தி வந்துச்சா?? இல்ல!! ‘அட்டெம்ட்டு எழுதி பாஸ் பண்ணினா பாலிடெக்னிக்ல சீட்டு வாங்கித் தர்றேன்’-ன்னு கணக்கு வாத்தியார் சொன்னாரு!! கேட்டியா?? ‘ரசிகர் மன்றம், சினிமா போஸ்டர் ஒட்றதுன்னு [...]

Read Full Post »