Archive for the 'பிடித்த பாடல்கள்' Category

பகைவனுக் கருள்வாய்

பாரதியாரோட இந்தப் பாட்டை கர்னாடக இசைப் பாடலா பல முறை கேட்ருக்கேன். ஆங்ங்ங்.. Ok.. பகைவனுக்கருள்வாய்.. ராகமாலிகை.. பாரதி பாட்டு..அப்டின்னு கேட்ருக்கேனே தவிர.. பகைவனுக்கு போயி ஏன் அருள் பண்ண சொல்றாரு-ன்னு ஒரு நாளும் யோசிச்சதில்லை.. இன்னைக்கு இந்தப் பாடலை கேட்டப்போ தோனிச்சு. வெற என்னதான் சொல்றாரு-ன்னு கவனிச்சு கேட்டு உருகிப் போனேன். முக்கியமா இந்த வரிகள். வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ? – நன்னெஞ்சே தாழ்வு பிறர்க்கெண்ணத் தான் அழிவான் என்ற சாத்திரம் [...]

Read Full Post »

கிராமம் இருந்த இடம்.

அடுத்ததா நான் படிச்சுகிட்டு இருக்கறது நவீன இலக்கியவாதி, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதின புத்தகங்களான, ‘துணையெழுத்து’ மற்றும் ‘கதாவிலாசம்’. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்குற புத்தகங்கள். இலக்கியவாதிகள்னாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜியா இருக்கும். சங்க இலக்கியங்கள பத்தி புரியாத பாஷைல பேசறவங்க-ங்கற நெனைப்புதான் வரும். ஆனா இலக்கியவாதி-ங்கறவங்க அந்தந்த கால கட்டங்கள்ல வாழற மக்கள, அவங்களோட வாழ்க்கைய பதிவு செய்யறவங்க-ன்னும், இந்த காலத்து இலக்கியவாதிகளையெல்லாம் நவீன இலக்கியவாதிகள்-ன்னு சொல்றாங்க-ன்னும் சொல்லி இந்தப் புத்தகங்கள படிக்க கொடுத்தான் என் தம்பி. (இதுக்கு [...]

Read Full Post »

ஹக்கூனா மட்டாட்டா.

Lion King படத்துல வர்ற ஒரு வசனம் இது, ஹக்கூனா மட்டாட்டா. ‘That means no worries’-ன்னு அந்த படத்துலயே சொல்லுவாங்க. ‘சிம்பா’ சிங்கக்குட்டியோட நண்பர்கள் சிம்பாக்கு சொல்லிக் கொடுத்து, ஹக்கூனா மட்டாட்டா-ன்னு ஒரு பாட்டே பாடுவாங்க. அதே மாதிரி ‘No Worries’ வகை தமிழ் பாட்டு இது. ‘ஆறு’ படத்துல வர்ற இந்த ‘ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு மாமே’ பாட்டு. தேர்தல் அறிக்கைகள பாத்து டென்ஷன், கூட்டணி குழப்பங்கள பாத்து டென்ஷன், [...]

Read Full Post »

ஒரு(புத்தகம்-கவிதை-குறள்-உரையாடல்)

போன சில வாரங்கள்ல “கற்பனைக்கும் அப்பால்…”-ங்கற புத்தகத்த படிச்சேன். இது சுஜாதா எழுதிய அறிவியல் தொடர்களோட ஒரு தொகுப்பு. இதுல மில்க்கி வே, காலக்ஸி, ப்ரபஞ்சம் பத்தியெல்லாம் அவர் படிச்ச புத்தகங்களோட சாரத்த எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதி.. நாம் இரவில் வானில் காணும் நட்சத்திரங்களில் பெரும்பாலானவை ‘மில்க்கி வே’ எனப்படும் நட்சத்திரக் குடும்பத்தை சேர்ந்தவை. இதில் சூரியனும் ஒரு நட்சத்திரம். இதற்கு மிக அருகாமையில் உள்ள நட்சத்திரமே சுமார் நான்கு ஒளி வருட தூரத்தில் [...]

Read Full Post »

செப்டம்பர் 11. 2

மகாகவி பாரதியாரோட நினைவுநாள். அவரோட நினைவா அவரோட பாடல்கள்ல ஒன்னு. மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திடவேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்கவேண்டும் மண் பயனுறவேண்டும் வானகமிங்கு தென்படவேண்டும் உண்மை நின்றிடவேண்டும் ஒம் ஒம் ஒம் ஓம். ம்ம்ம்.. [...]

Read Full Post »

உன்னைக்கேளாய் நீயாரு!!

தேஸம் படத்துல வர்ற பாட்டு. A.R.ரகுமான் இசைல, ஹரிஹரனும், T.L. மகாராஜனும் பாடின பாட்டு!! ஹிந்திப் பாடலுக்கு போடப்பட்ட tune-க்கு எழுதுன பாட்டுன்னாலும் சிறப்பா எழுதியிருக்காரு பாடலாசிரியர் வாலி. எனக்கு பிடிச்ச இந்தப் பாட்ல இருந்து சில வரிகள்.. உன்னைக்கேளாய் நீயாரு உன்னைக்கேளாய் நீயாரு உண்மைக் கண்டார் யார்யாரு கூறாய்!! உள்ளக்கண்ணால் நீ பாராய்! உன்னை வென்று நீ வாராய்!! பாதையெல்லாம் போகுமே சீராய்!! அங்கங்கே மேடும் உண்டு! அங்கங்கே பள்ளம் உண்டு! அதைவெல்லும் உள்ளம் செல்லும் [...]

Read Full Post »

மகாகவியின் அறிவே தெய்வம்.

அறிவே தெய்வம் என்னும் மகாகவி பாரதியார் பாடல் இங்கே.. முதலில் படிப்பதற்கு சற்று கடினமாக இருந்தது. அதனால் ஒவ்வொரு நான்கு வரிக்கு முன்னும் நான் பிரித்துப் படித்த விதத்தையும் எழுதுகிறேன். அறிவே தெய்வம் (ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று தேடி அலையும் அறிவிலிகாள்!-பல ஆயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாம் எனல் கேளீரோ? ) ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளீரோ? (மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் [...]

Read Full Post »

மகாகவிக்கே சிவலோகம் இல்லை.

இறந்தபிறகு சொர்க்கம் போவோம். வைகுந்தம் பொவோம்-னெல்லாம் சொல்றவங்கள பித்த மனிதர்-னு மகாகவி பாரதியாரே சொல்றாருங்க. அவரப் பொருத்தவரைக்கும் சிவலோகம்-னு ஒன்னு இல்ல-ங்கறாரு. மகாகவி பாரதியார் பாடிய பாடல். ஒவ்வொரு நான்கு வரிக்கு முன்னும் நான் பிரித்துப் படித்த விதத்தையும் எழுதுகிறேன். சங்கு (செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார் பித்த மனிதர், அவர் சொ(ல்)லும் சாத்திரம் பேய் உரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம்! ) செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார் பித்த [...]

Read Full Post »

குமரேசன் இல்லவே இல்லை. (Another Poison Tree)

ஒரு சினிமால பார்த்திபன், ரம்பா பணியாரம் சாப்டறதப் பாத்து, விவேக்ட சொல்ற ‘புதுக்கவிதை’.. ‘ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஒரு ஸ்வீட் ஸ்டாலே ( ரெண்டு தட சொல்லணும்ல!! ) பணியாரம் சாப்பிடுகிறதே!!!’ இது மாதிரி.. எனக்கு ரொம்ப பிடிச்ச வில்லியம் ப்லேக் (William blake)-ன் ‘A poison tree’ பாடலைத் தழுவி.. நான் எழுதின ‘புதுக்கவிதை’ ( or ‘புதுவசனம்’ or எப்டி வேணாலும் சொல்லலாம்..) இங்கே.. குமரேசன் இல்லவே இல்லை. ————————————————————————- கணேசனிடம் ஒருநாள் கோபம் [...]

Read Full Post »

A Poison Tree by William Blake.

I was angry with my friend: I told my wrath, my wrath did end. I was angry with my foe; I told it not, my wrath did grow. And I water’d it in fears, Night & morning with my tears; And I sunned it with my smiles And with soft deceitful wiles. And it grew [...]

Read Full Post »