Archive for the 'பிடித்த புத்தகங்கள்' Category

கிராமம் இருந்த இடம்.

அடுத்ததா நான் படிச்சுகிட்டு இருக்கறது நவீன இலக்கியவாதி, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதின புத்தகங்களான, ‘துணையெழுத்து’ மற்றும் ‘கதாவிலாசம்’. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்குற புத்தகங்கள். இலக்கியவாதிகள்னாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜியா இருக்கும். சங்க இலக்கியங்கள பத்தி புரியாத பாஷைல பேசறவங்க-ங்கற நெனைப்புதான் வரும். ஆனா இலக்கியவாதி-ங்கறவங்க அந்தந்த கால கட்டங்கள்ல வாழற மக்கள, அவங்களோட வாழ்க்கைய பதிவு செய்யறவங்க-ன்னும், இந்த காலத்து இலக்கியவாதிகளையெல்லாம் நவீன இலக்கியவாதிகள்-ன்னு சொல்றாங்க-ன்னும் சொல்லி இந்தப் புத்தகங்கள படிக்க கொடுத்தான் என் தம்பி. (இதுக்கு [...]

Read Full Post »

வெற்றிப் பாதை..

நான் இது வரைக்கும் படிச்ச புத்தகங்கள்ல/தொடர்கள்ல மிகவும் விரும்பிப் படிச்சது காந்தியடிகளோட ‘சத்திய சோதனை’தான். காந்தியடிகள் மேல, இந்தப் புத்தகத்த படிக்கறதுக்கு முன்னாடியே நெறைய மரியாதை இருந்துது. அது பல மடங்கு அதிகமாயிடுச்சு-ன்னுதான் சொல்லணும். அவரைப் பத்தி மட்டும் இல்ல. சுதந்திரப் போராட்ட காலத்துல மக்களோட மனநிலை, மற்ற தலைவர்களோட விடுதலை விஷன், அந்தக் காலத்துல ஒரு குஜராத்தி இளைஞனோட வேலை வாய்ப்புகள், பாரிஸ்டர் படிக்கறவங்களோட பழக்க வழக்கங்கள், சிறுவர் திருமணத்தோட(பால்ய விவாகம்) விளைவுகள், அந்தக் காலங்கள்ல [...]

Read Full Post »

இந்தியப் பெருமிதம். 1.

‘அந்த நாட்ல அத கண்டுபிடிச்சான், இந்த நாட்ல இத கண்டுபிடிச்சான்’-ன்னு மத்த நாட்டு கண்டுபிடிப்புகளோட பெருமைய பேசறவங்கள பாத்திருக்கோம். அவங்க இந்தியாவோட இந்தியர்களோட கண்டுபிடிப்புகள கண்டுக்கவே மாட்டாங்க! விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும், கணித ஆராய்ச்சிகளுக்கும் இந்தியர்களோட பங்கு ஏராளம். Infact, இந்தியர்களோட பங்கு ஸ்ட்ராங்கான அடித்தளம்-ன்னுகூட சொல்லலாம். இந்தியர்களோட பங்கு பத்தி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ‘எழுச்சி தீபங்கள்’ புத்தகத்துல சொல்ற விஷங்கள எழுதறேன். தங்களுக்கு பிடிச்ச தலைவர் பேர, மகனுக்கோ, நடிகை பேர மகளுக்கோ வெக்கறவங்கள [...]

Read Full Post »

டாலர் தேசம்.

எனக்கும் வரலாற்றுக்கும் கொஞ்சம் நஞ்சம் இல்ல, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம். ஆறாவது படிச்ச காலத்துல இருந்தே வெறும் பாஸ்மார்க் மட்டுமே வாங்கி பாஸ் பண்ணிட்டுதான் வந்தேன். அசோகர் எந்த வருஷம் மரம் வெச்சாரு, எந்த வருஷம் ரோடு போட்டாரு-ன்னு ஞாபகம் வெச்சுக்கறதோ, ஔரங்கசீப், எத்தன சீப்பு வெச்சிருந்தார்னோ ஞாபகம் வெச்சுக்கறது ரொம்ப பேஜாரான விஷயம் எனக்கு. எப்டியாவது வரலாறு புவியியல்ல பாஸ்பண்ண வெச்சுடு, மறக்காம வந்து தேங்கா ஒடைக்கறேன்-னு புள்ளையார்கிட்ட வேண்டிக்கிட்டு, மறக்காம போயி பலதடவ தேங்கா ஒடைச்சிருக்கேன். [...]

Read Full Post »

ஒரு(புத்தகம்-கவிதை-குறள்-உரையாடல்)

போன சில வாரங்கள்ல “கற்பனைக்கும் அப்பால்…”-ங்கற புத்தகத்த படிச்சேன். இது சுஜாதா எழுதிய அறிவியல் தொடர்களோட ஒரு தொகுப்பு. இதுல மில்க்கி வே, காலக்ஸி, ப்ரபஞ்சம் பத்தியெல்லாம் அவர் படிச்ச புத்தகங்களோட சாரத்த எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதி.. நாம் இரவில் வானில் காணும் நட்சத்திரங்களில் பெரும்பாலானவை ‘மில்க்கி வே’ எனப்படும் நட்சத்திரக் குடும்பத்தை சேர்ந்தவை. இதில் சூரியனும் ஒரு நட்சத்திரம். இதற்கு மிக அருகாமையில் உள்ள நட்சத்திரமே சுமார் நான்கு ஒளி வருட தூரத்தில் [...]

Read Full Post »

சுஜாதாவின் ‘பதினாலு நாட்கள்’.

நான் இந்தியால இருந்தப்போ, ‘முப்பத்தஞ்சு நாட்கள் இந்தியா ட்ரிப்’-ப பத்தி Blog எழுதணும்-ன்னு ஒரு thought எப்பவும் மனசுல ஓடிட்டெ இருந்துச்சு. ஒருநாள் ஒரு புக் ஸ்டோர் போனப்போ, சுஜாதா அவர்கள் எழுதின ‘பதினாலு நாட்கள்’ புத்தகம் பளிச்-ன்னு கண்ல பட்டுது. சரி, முப்பத்தஞ்சு நாள் பத்தி எழுதறதுக்கு இந்தப் ‘பதினாலு நாட்கள்’-ல இருந்து ஏதாவது ஐடியா கடைக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன். ஆனா, இந்தப் ‘பதினாலு நாட்கள்’ ஒரு சந்தோஷமான டூர் பத்தியோ, ஒரு ஜாலியான சுற்றுலா [...]

Read Full Post »

மாற்றங்கள்.

மூலக்கதை Dr. Spencer Johnson எழுதிய ‘Who Moved My Cheese?’. கோடையின் வெப்பம் வாட்டிக்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையின் மதிய வேளையில், மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்று தயாராகிக்கொண்டிருந்தது. தன்னுடன் பள்ளியில் படித்த, இன்னும் தொடர்பில் உள்ள நண்பர்களையெல்லாம் விருந்திற்கு அழைத்திருந்தான், ‘அமாவாச’, ‘தயிர்சாதம்’, ‘சீனி’ என்றெல்லாம் பள்ளிக் காலங்களில் அழைக்கப்பட்ட ‘சீனிவாசன்’. இப்பொழுது அமெரிக்காவில் கம்பெனி ஒன்றின் இயக்குனராக இருக்கின்றான். யார் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு காத்திருந்தான் சீனிவாசன். [...]

Read Full Post »

ஏழு நல்ல பழக்கங்கள். (‘Seven habits of Highly Effective People’ )

ஏழு நல்ல பழக்கங்கள். சின்ன வயசுலருந்து “நல்ல விஷங்கள தெரிஞ்சுகோடா.. நல்ல பழக்கங்கள கத்துகோடா/வளத்துகோடா”-னு அம்மாவும் பாட்டியும் சொல்லி சொல்லி…. முப்பதாவது வயசுல நல்ல பழக்கம்-னா என்ன-னு படிக்க ஆரம்பிச்சிறுக்கேன். : ) சமீபத்துல ‘seven habits of highly effective people’-ங்கற புத்தகம் படிச்சேன். சிறந்த ‘ஏழே ஏழு’ பழக்கங்கள் பத்தி முன்னூறு பக்கங்களுக்கும் மேலாக விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் கோவெ (Covey). பலதரப்பட்ட வாசகர்களுக்காக எழுதியதுனால எல்லாவற்றையும் மிகவும் விரிவாக விளக்கி இருக்கிறார். மேலும், [...]

Read Full Post »