Archive for the '35 days in Indian shoes' Category

மனிதருள் மாணிக்கம்.

நான் இந்தியா போன .·.ப்ளைட்ல ஏற வெய்ட் பண்ணிட்டு இருந்தப்போ, manic (மாணிக்கம்)-ன்னு ஒருத்தர சந்திச்சேன். எந்த ஊருக்கு போறீங்க? எங்க வேலை பாக்கறீங்க-ன்னு சாதாரணமா பேசிட்டு இருந்தோம். ஏதோ Business பண்றதா சொன்னாரு. ‘Amway’ வா இருக்குமோன்னு நெனைச்சு கொஞ்சம் தள்ளி உக்காந்தேன். நல்லவேல, இல்ல. சாதாரணமா பேசிட்டு இருந்தவரு திடீர்னு உணர்ச்சிவசப்பட்டு பேசினாரு. ‘இந்தியால லஞ்சம் எப்போ ஒழியுதோ அப்போதான் ‘அந்த’ நாடு உறுப்படும்’-ன்னாரு. ‘ஆமாங்க’-ன்னு தலையாட்டினேன். கொஞ்ச நேரத்துல .·.ப்ளைட்ல ஏறிட்டோம். அடுத்து [...]

Read Full Post »

உதிரிப் பூக்கள்.

நான் இந்தியால இருந்தப்போ நடந்த மற்ற முக்கியமான நிகழ்ச்சிகள். திருவாசகம் in சிம்.·.பனி. இளையராஜா ரசிகர்களால ரொம்ப எதிர்பாக்கப்பட்ட ‘சிம்.·.பனியில் திருவாசகம்’ CD-ய ஜுன் முப்பதாம் தேதி ‘மியூசிக் அகாடமி’ல வெளியிட்டாங்க. பாலமுரளி கிருஷ்ணா, ரஜினி, கமல், பாரதிராஜா, AR ரகுமான், MSV உள்பட நெறைய VIPக்கள் வந்திருந்தாங்க. வெளியீட்டுவிழா, மறுநாள் ‘தமிழன் TV’ சேனல்லயும், ‘SS Music’ சேனல்லயும் ஒளிபரப்பாச்சு. இளையராஜா ரொம்ப எமோஷனலாவும், Excited-ஆகவும் இருந்தாரு. பாலமுரளி கிருஷ்ணா உள்பட, CDய கேட்ட பலபேர் [...]

Read Full Post »

தமிழ் முதலைகள்.

என் நண்பன் ஒருத்தன், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னைல ஒரு வீடு வாங்கியிருக்கான். அஞ்சாவது மாடில வீடு. சுமார் நானூறு ஐநூறு வீடுகள் இருக்குற காம்ப்ளெக்ஸ் அது. எல்லாமே ஆறு மாடிகள் கொண்ட கட்டிடங்கள். ரெண்டு வருஷம் கழிச்சு இப்போதான் தெரியுது எல்லா கட்டடங்கள்லயும் நாலு மாடி வரைக்கும் கட்றதுக்குத்தான் கவர்மெண்ட்ல இருந்து பர்மிஷன் வாங்கியிருக்காங்க. அதுக்கு மேல ரெண்டு மாடிக்கு பர்மிஷன் வாங்கவே இல்ல. காம்ளெக்ஸ சுத்தியும் இருக்குற Road, நூறடி Road-ஆ இல்லன்னா ஆறுமாடிக்கு [...]

Read Full Post »

கேப்டன் ட்ரீம்.

அரசியல் போஸ்டர்கள்ல அதிகமான, அனேகமான போஸ்டர்கள் கேப்டனுக்காத்தான். கேப்டன் விஜயகாந்த் புதுக் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. கட்சி பேரு தெரியல. ஆனா கொடி ரெடி. செப்டம்பர்ல மதுரைல மாநாடு நடத்தறாரு. அதுக்கான போஸ்டர்கள்தான் எங்க பார்த்தாலும். போஸ்டர்கள்ல அதுக்குள்ள மாநிலச் செயலாளர், மாவட்டச் செயலாளர் அப்டின்னு நெறைய பேரு இருக்காங்க. தமிழ்நாட்டுக்கு இன்னொரு அரசியல் கட்சி தேவையா?? இல்ல மக்களுக்கு சேவை செய்யற கட்சி தேவையா?? ரெண்டுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு. இன்னொரு அரசியல் கட்சி, பத்து பதினைஞ்சு [...]

Read Full Post »

Traffic – தமிழர் விதிகள்.

ஊர்ல ஒவ்வொரு Traffic சிக்னல்கள்லயும் இப்போ டிஜிட்டல் கவுண்ட்டர்கள் இருக்கு. பாபா கவுண்ட்டௌன் மாதிரி ஒவ்வொரு சிக்னலும் கவுண்ட்டௌன் பண்ணுது. ரெட் சிக்னல் விழுந்த உடனே ஒரு கவுண்ட்டௌன் ஆரம்பிக்குது. 90, 89, 88, 87-ன்னு. க்ரீன் சினலுக்கும் அதே மாதிரி கவுண்ட்டௌன். அமெரிக்கா, கனடா மாதிரி நாடுகள்ல கூட இதுமாதிரி சிக்னல்கள நான் பாத்ததில்ல. ரெட் சிக்னல் விழுந்து 90, 89, 88-ன்னு கவுண்ட்டௌன் ஆரம்பிச்சதுமே, நெறைய பேர் கார் இன்ஜின, பைக் இன்ஜின Off [...]

Read Full Post »

அவசரம்.

நம்ம ஊர் மக்கள்ட்ட எப்பவும் ஒரு அவசரத்த பாத்தேன். நான் போன .·.ப்ளைட் சென்னை போயி எறங்குனதுல இருந்தே கவனிச்சேன். என் நண்பன் ஒருத்தன நாங்கல்லாம் கிண்டல் பண்ணுவோம். ‘ஏன்டா எப்பவும் கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்ட மாதிரி குதிக்கற’ன்னு. அதுமாதிரி, மக்கள்ட்ட ஒரு அவசரம் எப்பவும் ஒட்டிக்கிட்டே இருக்கு. ஒரு கடைல ஐஸ் க்ரீம் வாங்கறதா இருக்கட்டும், தியேட்டர்ல சமோசா வாங்கறதா இருக்கட்டும், Road-ல Bike ஓட்றதா இருக்கட்டும் எல்லாத்துலயும் ஒரு அவசரம். ஐஸ் க்ரீம் ஒரு [...]

Read Full Post »

தமிழர்கள்-தவசிகள்.

மனச பாதிச்ச விஷயங்கள்ல முக்கியமானதா சொல்லணும் நெனைக்கறது ‘போஸ்டர்’களைத்தான். சினிமா போஸ்டர்கள், வார இதழ்களின் விளம்பரங்கள், அரசியல் மீட்டிங் போஸ்டர்கள்-னு நெறைய போஸ்டர்கள். சினிமா போஸ்டர்கள்ல நடிகைகளோட கவர்ச்சிப் படங்கள். பெரிய பெரிய சைஸ்ல. மூலைக்கு மூலை. நடிகையின் மேல் தொடையோட மேல் பகுதிவரை தெரியற படத்த zoom பண்ணி மூலைக்கு மூலை பாத்தா easy-யா போயி மூளைல பதிஞ்சுடுது. அதுமட்டும் இல்ல, Adults only படங்களோட போஸ்டர்கள் வேற. ஒரு பெண் ரேப் செய்யப்படறது போல [...]

Read Full Post »

முப்பத்தைந்து நாட்கள் – நாற்பத்தைந்து டிகிரி.

போன மாசம் என் தம்பியோட கல்யாணத்துக்காக இந்தியா போயிருந்தேன். அமெரிக்கால, மே மாசம் வரைக்கும் நீண்ட நீநீநீநீளமான குளிர் காலத்தில இருந்து சுட்டெறிக்கற கோடைகாலத்துக்கு போய்ட்டு வந்தேன். இருவத்தஞ்சு, முப்பது டிகிரி செல்யியஸ்ல இருந்து போயி, நாப்பத்தஞ்சு டிகிரி வெய்யில்ல முப்பத்தஞ்சு நாள் இருந்தேன். பிடித்த குறள்கள் மாதிரி Blog எழுத ஆரம்பிச்சதுல இருந்தோ, இல்ல, 7 Habits மாதிரி புத்தங்கள படிச்சதுல இருந்தோ தெரியல, யாரையும் பத்தி கொற சொல்றதுக்கு முன்னாடி, அந்த எடத்துல நான் [...]

Read Full Post »