Archive for March, 2005

அறம் செய விறும்பு.

5.25. மற்றவர்களுடன் கருத்து வேறுபாடுகளோ, வழக்குகளோ வந்தால், கருத்து வேறுபாடு கொண்டவர்களிடமே பேசி உடன்பாடு செய்துகொள்ளுங்கள். வழக்கென்று போகும்பொழுது நீங்கள் நடுவரிடம் ஒப்படைக்கப்படுவீர்கள். நடுவர் உங்களை காவலிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். 5.26. உங்கள் கையில் இருக்கும் கடைசி காசு தீரும்வரை அங்கிருந்து வெளியேற முடியாது. 5.29 உங்கள் வலது கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே [...]

Read Full Post »

நெருடல்கள்.

நான் படித்தவரை, மறைநூல்கள் பெரும்பாலும், ‘தவறு செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் நரகம் நிச்சயம் என்றே கூறுகின்றன’. நல்லதைச் செய்யுங்கள் என்பதைவிட, தீமையை செய்தால் நரகம் என்பதையே அதிகமாக வலியுறுத்துகின்றன. நரகத்தில் அளிக்கப்படும் தண்டனைகள் பற்றி பயப்படும் விதமாக விவரித்துக்கூறி, மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி அதன் மூலம் அமைதியை நிலைநாட்டும் விதத்திலேயே அமைந்திருக்கின்றன. அமைதியை நிலைநாட்டும் எண்ணம் சரிதான். இருந்தாலும் நரகத்தின் மீது ஏற்படுத்தும் பயத்தினால் அடைய நினைப்பது சரியா என்றுதான் தெரியவில்லை. உலகில் நல்லவர்களாக இருப்பவர்களில் எத்தனைபேர் [...]

Read Full Post »

10-Point Oath. By Mr.Kalam.

Our President Mr.Kalam, who spoke to students assembled at the Indira Gandhi Centre for Atomic Research, asked them to take a 10-point oath, for attaining “enlighted citizenship”: I will love whatever profession I take up and I will try to excel in it. From now onwards, I will teach at least 10 persons to read [...]

Read Full Post »

சமையல் vs கணக்கு.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். பொருள் : எந்த வேலையை, எந்த செயல்முறையில் செயல்படுத்தி, யாரால் சிறப்பாக முடிக்கமுடியும் என்று ஆராய்ந்து, அந்த வேலையை அவரிடம் கொடுக்க வேண்டும். எல்லா வேலையையும் எல்லாராலும் சிறப்பா செய்ய முடியறதில்லங்க. சிலபேர் நல்லா பாடுவாங்க. சிலபேர் நல்லா சமைப்பாங்க. சிலபேர் சிரிக்க சிரிக்க நல்லா பேசுவாங்க, சிலபேர் கணக்கு நல்லா போடுவாங்க, சிலபேருக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும். நல்லா பாடறவங்களப்போய் சமைக்க சொன்னா எப்படிங்க [...]

Read Full Post »

பரிகாசம் – சந்தேகம்.

49:11. ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினரைப் பார்த்து பரிகாசம் செய்ய வேண்டாம். நம்மால் பரிகாசத்திற்கு உள்ளாகுபவர், நம்மைவிட மேலானவராக இருக்கலாம். அதேபோல், பெண்களும், மற்ற பெண்களைப்பற்றி அவதூறு பேசவேண்டாம். நம்முள் ஒருவருக்கொருவர் பழித்துக்கொள்ளவோ, தீய சொற்களைப் பயன்படுத்தி அழக்கவோ வேண்டாம். இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மற்றவர்களை தீய சொற்களால் அழைப்பது தவறு. 49:12. மற்றவர்கள் மீது சந்தேகப்படும்படியான எண்ணங்களை தவிர்ப்போம். அவை ஒருபோதும் நன்மை பயப்பதில்லை. மற்றவர் குறைகளை ஆராய்ந்துகொண்டிருப்பதிலேயும் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதிலுமே [...]

Read Full Post »

உண்மையில் உயர்ந்தவர்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். பொருள் : ஒருவர், உயர்ந்த பதவியில் இருந்தாலும், நிறைய செல்வங்கள் பெற்றிருந்தாலும், பண்புடையவராக இல்லையேல் உயர்ந்தவராக கருதப்படுவதில்லை. அதேபோல் பண்புடைய ஒருவர், ஏழையாக இருந்தாலும், உயர்ந்த பதவியில் இல்லாவிட்டாலும், தாழ்ந்தவராகக் கருதப்படுவதும் இல்லை. தகாத செயல்கள் செய்த மிகப்பெரிய ஓட்டலதிபர்கள், பாலியல் பலாத்காரங்கள் மற்றும் பல விவகாரமான செயல்கள் செய்த ‘மத’த் தலைவர்கள், ‘வருமான வரி செலுத்தாத’ மிகப் பிரபலமான நடிகர்கள், கோடிகோடியாக ‘லஞ்சம்’ வாங்கி மக்களை [...]

Read Full Post »

A Poison Tree by William Blake.

I was angry with my friend: I told my wrath, my wrath did end. I was angry with my foe; I told it not, my wrath did grow. And I water’d it in fears, Night & morning with my tears; And I sunned it with my smiles And with soft deceitful wiles. And it grew [...]

Read Full Post »

அமைச்சர் = ஜால்ரா. அரசு = ???

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும். பொருள் : ஒரு அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அந்தத் தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கும் வழிகளை எடுத்துரைக்கும், நல்ல அமைச்சர்கள் இல்லாத அரசு, கெடுப்பவர்கள் யாரும் இல்லாவிட்டாலும் தானாகவே கெட்டுவிடும். இப்பல்லாம் அமைச்சர்கள் ‘ஜால்ரா’ அடிச்சாதான் அமைச்சர்களா இருக்க முடியுது. மத்தவங்கல்லாம் அமைச்சர்களா ஆகவே முடியாது. அப்படியே ஆனாலும், தவறுகளை சுட்டிக்காட்டினால், அடுத்த நாள் அமைச்சர்களாக இருக்க முடியாது!!

Read Full Post »

Words travel. Moods won’t.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. பொருள் : யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாமல், உண்மை என்ன என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும். இந்த அர்த்தம் என் அப்பா சொல்லிக்கொடுத்ததுங்க.. ஆனா அதுக்கும் மேல இந்தக் குறளுக்கு வேற சில உட்பொருள் இருக்குன்னுதான் நெனைக்கறேன். உட்பொருள் 1 : ‘உனக்கு நேரமே சரியில்ல, உனக்கு இன்னும் ஆறுமாசத்துல ஒரு பெரிய கண்டம் இருக்கு’ அப்படினு யாரோ சொன்னாங்க-னு.. அப்படியே நம்பிட்டு, ‘ஓவரா [...]

Read Full Post »

உடையார், முதலியார் & செட்டியார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். பொருள் : பெரிய பணக்காரர் ஒருவரிடம், பணமில்லாதவர், பணம் வாங்கும்பொழுது எப்படித் தாழ்ந்து வாங்குவாரோ, அதைப்போல அறிவிற் சிறந்தவர்களிடம் தாழ்ந்து நின்று கற்றுக்கொண்டு, தனது அறிவை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளாதவர்கள் கல்லாதவர்களாகவே கருதப்படுகிறார்கள். ‘உடையார் முன்னாடிதான் அப்படி நிக்கணுமா?? முதலியார், செட்டியார் முன்னாடில்லாம் நிக்கவேணாமா??’

Read Full Post »