Archive for April, 2005

மாற்றங்கள்.

மூலக்கதை Dr. Spencer Johnson எழுதிய ‘Who Moved My Cheese?’. கோடையின் வெப்பம் வாட்டிக்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையின் மதிய வேளையில், மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்று தயாராகிக்கொண்டிருந்தது. தன்னுடன் பள்ளியில் படித்த, இன்னும் தொடர்பில் உள்ள நண்பர்களையெல்லாம் விருந்திற்கு அழைத்திருந்தான், ‘அமாவாச’, ‘தயிர்சாதம்’, ‘சீனி’ என்றெல்லாம் பள்ளிக் காலங்களில் அழைக்கப்பட்ட ‘சீனிவாசன்’. இப்பொழுது அமெரிக்காவில் கம்பெனி ஒன்றின் இயக்குனராக இருக்கின்றான். யார் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு காத்திருந்தான் சீனிவாசன். [...]

Read Full Post »

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். பொருள் : மற்றவர்களுடைய குறைகளை மறைத்து நிறைகளை மட்டும் காண்பதுதான் பெருமைக்குரிய குணமாகும். மற்றவர்களின் குறைகளை மட்டும் காண்பது சிறுமைக்குரிய செயலாகும். கொற சொல்றது ரொம்ப ஈசி-ங்க. யார வேணாலும் எப்போ வேணாலும் கொற சொல்லலாம். ‘குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்’-னு ‘திருவிளையாடல்’ சினிமா-ல ‘தருமி’ நாகேஷ் சொல்றமாதிரி, குத்தம் சொல்றவங்க எல்லா எடத்துலயும் இருக்காங்க. ஆனா கொற சொல்றதால என்னங்க லாபம்? ஒருசில இடங்கள்-ல, [...]

Read Full Post »

துன்பத்துக்கே துன்பம்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். பொருள் : தமக்கு வரும் துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர்கள், அவர்களுக்கு வந்தத் துன்பத்துக்கே துன்பம் அளித்துவிடுகிறார்கள். துன்பம் வந்தாலும் பயப்படாம தைரியமா இருக்கணும்-னு வள்ளுவர் சொல்றாரு. ஆனா, செலபேர் இருக்காங்க, துன்பம் வர்றதுக்கு முன்னாடியே பயப்படுவாங்க. இப்படி ஆய்டுமோ, அப்படி ஆய்டுமோ-னு நெனச்சு நெனச்சே அவங்களுக்கு பிபி(BP) ஏறிடும். தான் பயப்படறது இல்லாம தன்னச்சுத்தி இருக்கறவங்களிடமும் பயத்தப் பரப்புவாங்க. நமக்கு வற்ற துன்பத்தப் பாத்து பயப்படாம இருந்தாலே [...]

Read Full Post »

வாய்ச்சொல்லில் வீரன்?

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். பொருள் : எதையும் வாயால் சொல்வது எல்லோருக்கும் மிகவும் எளிமையானது. ஆனால் சொன்னபடி நடப்பது மிகவும் கடினமானது. நடமுறைக்கு ஒத்துவராத விஷயங்கள ரொம்ப வெவரமா பேசரவகங்களப் பாத்து ‘வாயாலயே கோட்ட கட்றான் பாரு’-னு எங்க ஊர்ல சொல்லுவாங்க. ‘வாய்ச்சொல்லில் வீரன்’ அப்படி-னு பாரதியார்கூட சொல்லுவாரு. அது மாதிரி, ‘நான் அதப் பண்ணுவேன், இதப் பண்ணுவேன்’-னெல்லாம் வெரும் வார்த்தைல ரொம்ப பேர் சொல்லுவாங்க. ‘நடைமுறைல செய்’-னு சொன்னா ‘ஜகா’ [...]

Read Full Post »

ஆட்டம் பாட்டம்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். பொருள் : இன்பம் வரும்பொழுது ஆட்டம் போடாதவர்கள் (‘ஆடம்பரம் மற்றும் அகந்தை’யில் குதிக்காதவர்கள்), துன்பம் வரும்பொழுதும் துவண்டு போய் விடுவதில்லை. கைல நாலு காசு வந்துட்டா சிலபேர் ஆடற ஆட்டம் தாங்க முடியாதுங்க. மத்தவங்க யாரையும் மதிக்கமாட்டாங்க. நெறைய நண்பர்கள சேர்த்துப்பாங்க. ஒரே ஆட்டம்தான். அதேபோலதான் சிலருக்கு அதிகாரம் வந்துட்டா தலகால் புரியாம ஆட்டம் போடுவாங்க. காசோ, அதிகாரமோ போனப்புறம் அவங்க இருக்கற இடம் தெரியாம காணாம [...]

Read Full Post »

சத்தான சாப்பாடு vs அதிகமான சாப்பாடு.

அற்றால் அளவறிந்து உண்க அ.·.துடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. பொருள் : உணவு உண்ணும் பொழுது உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தும், ‘தேவையான அளவு மட்டும்‘ உட்கொண்டும் இருந்தால், நீண்ட நாட்கள் ஆரோக்யமாக வாழ முடியும். நாம சாப்பிடும் பொழுது, தேவையான அளவோட நிறுத்தறோமா?? சுவைக்காக, இன்னும் ரெண்டு இட்லி, இன்னும் ரெண்டு தோசை, இன்னும் கொஞ்சம் சாம்பார் சாதம்-னு அடுக்கிட்டே போறோம். உடல் பலத்துக்கும் சாப்பிடுற சாப்பாட்டோட அளவுக்கும் தொடர்பு இருக்கறதா தப்பா நெனச்சுட்டு இருக்கோங்க. [...]

Read Full Post »

சுனாமி.. சுனாமி..

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். பொருள் : அறிவுடையவர்களுக்கு வரும் துன்பம், வரும்பொழுது பெரிய சுனாமி வெள்ளம்போல் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வழிகள் பற்றி அவர்கள் நினைக்கும் பொழுதே பலமிழந்து விடுகிறது. நமக்கு வர்ற துன்பத்தைப் பாத்து பயப்படும்போதுதாங்க துன்பம் இன்னும் பெருசாகுது. எப்போ ‘எப்படி சமாளிக்கறது’-ன்னு யோசிக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போவே துன்பத்தோட பலம் பாதி போய்டுச்சுங்க.

Read Full Post »

சிரிப்பே சிறப்பு!!!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அ.·.தொப்ப தில். பொருள் : துன்பம் வரும்பொழுது சிரி. துன்பத்தைப் போக்குவதற்காண வழிகளில், சிரிப்புக்கு இணையான இன்னொன்று இல்லை. துன்பம் வரும்போது சிரி-ன்னா, அடுத்தவருக்கு ஒரு துன்பம் வரும்போது அவரப் பாத்து சிரிக்கறது இல்லங்க!! துன்பம் வரும்போது, அந்தத் துன்பத்தயேப் பாத்து சிரிக்கறது. எப்போ துன்பத்தப் பாத்து பயப்படாம, ‘தில்’லா சிரிக்கிறோமோ, அப்போவே துன்பத்தப் போக்கறதுக்காண சக்தி பாதி வந்துடுது, போக்கறதுக்காண வழி ஈசியா தெரிங்சுடுங்க.

Read Full Post »

சின்னச் சின்ன வார்த்தைகள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். பொருள் : நாம் பேசும்பொழுது யாருக்காவது ஏதாவது பயனளிக்கும் விஷயங்களை மட்டும் பேசவேண்டும். யாருக்குமே பயனளிக்காத விஷயங்களை விஷயங்களை பேசுவ பேசாதீர்கள். நம்ம சொல்ற சின்ன வார்த்தைகூட செலபேருக்கு பெரிய பலமா இருக்கலாம். அதேமாதிரி, சில வார்த்தைகள் பெரிய தடங்களா ஆயிடலாம், மன வருத்தத்த ஏற்படுத்திடலாம். நம்ம சொல்ற வார்த்தைகள் பயன் தருதா? இல்ல பாதகமாகுமா-னு பாத்து சொல்லணுங்க. கோவத்துல சொல்ற வார்த்தைகள் பெரும்பாலும் பயனில்லாத சொற்களாதாங்க [...]

Read Full Post »

Right things at Right time.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. பொருள் : ஒரு செயலைச் செய்ய, சரியான நேரம் வரும்வரை, கொக்குபோலக் காத்திருக்க வேண்டும். சரியான நேரம் வாய்க்கும்பொழுது கொக்கு, மீனைக் குறிதவறாமல் சரியாக குத்துவதுபோல செயல்பட்டு செய்து முடிக்க வேண்டும்.

Read Full Post »