Archive for May, 2005

புத்தகம் வாங்கவே காசில்ல!!!

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின். பொருள்: மன உறுதியும், வெற்றிபெறவேண்டும் என்கிற துடிப்பும் அதிகமாகக் கொண்டவர்களுக்கு, இல்லாமை ஒரு குறையோ, இழிவோ இல்லை. இந்த குறள ரெண்டு விதமா பாக்கலாங்க. விதம் ஒன்னு: செலபேர பாத்திருக்கேங்க. அவங்களோட வேலைய ஒழுங்கா செய்யாம இருக்கறதுக்கு ஏதாவது ஒரு கொறைய காரணமா சொல்லுவாங்க. உதாரணமா… ‘என்னப்பா, நல்லா படிக்கிறியா?’ ன்னு கேட்டா, ‘எங்க, புத்தகம் வாங்கவே காசில்ல’ ‘எங்க, எங்க வீட்ல கரண்டே இருக்கறதில்ல’ அப்படின்னு [...]

Read Full Post »

நீ நம்ம கச்சியா??

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. பொருள்: ஒரு நல்ல அரசருக்கு அல்லது அரசுக்குத் தேவை, பயம் இல்லாமை, அனைவருக்கும் உதவி செய்யும் குணம், நல்ல அறிவாற்றல், செயல்களை முன்னின்று செய்து வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் ஊக்கம் ஆகிய இந்த நான்கும் ஆகும். அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இந்த பண்பெல்லாம் இருந்தா நல்லா இருக்கும்-ங்க. வல்லரசு நாடுகளே எதிர்த்தாலும் பயப்படாம செஞ்ச நியூக்ளியர் சோதனை. சுனாமி மாதிரி பேரழிவு ஏற்பட்டப்போ நம்ம நாட்டோட இல்லாம, பக்கத்து [...]

Read Full Post »

Amar Jawan!!!

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். பொருள் : தன்னுடைய இன்பத்தைத் தேடாமல், தான் மேற்கொண்டுள்ள செயல்களில் வெற்றியைத் தேடும்குணமுடையவர்கள், தன்னைச் சுற்றியிருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பங்களை போக்குபவர்களாகவும், அவர்களைத் தாங்கும் தூண்போலவும் இருக்கின்றனர். தன்னோட லாபத்தப் பாக்காம, தான் செய்யற காரியத்துல கவனம் செலுத்தறவங்க யாருன்னு யோசிச்சுப் பாத்தேன். மொதல்ல ஞாபகத்துக்கு வந்தவங்க படை வீரர்கள்தாங்க. தன்னோட உயிரைப் பத்திக்கூட கவலைப்படாம தன் நாட்டுக்காக உழைக்கற [...]

Read Full Post »

ஈகோ.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். பொருள் : ஒருவர் நமக்கு மோசமான ஒரு துன்பத்தைச் செய்தாலும், அதற்கு முன்னர், எப்பொழுதாவது, அவர் நமக்கு செய்த ஒரேஒரு நல்ல விஷயத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தால், அவர் மீது எழும் கோபம் குறைந்துவிடுகிறது. அவர் செய்த துன்பத்தினால் ஏற்பட்ட ‘வலி’யின் வலிமையும் குறைந்துவிடுகிறது. சொந்தக்காரங்களுக்குள்ள வர்ற சண்டைகள்-லாம் பாத்திருக்கீங்களா?? ஒன்னுக்குள்ள ஒன்னா இருப்பாங்க. திடீர்ன்னு ஒருநாள் சண்டை போட்டுப்பாங்க. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் பரம எதிரிகளா [...]

Read Full Post »

கடவுளே காப்பாத்து!!!

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். பொருள் : ‘கடவுளே காப்பாத்து’ என்று கடவுளை அழைப்பதால் நடக்காத செயல்கள்கூட, முயற்சியுடன் உழைப்பவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருகின்றன. எங்க ஊர்ல ஒரு கத சொல்லுவாங்க. ஒரு ஊர்ல ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். சுனாமி வந்த மாதிரி. வீடுகளல்லாம் அடிச்சுகிட்டு போய்டுச்சாம். இது மாதிரி வெள்ளம் அடிச்சுகிட்டு போனப்போ, ஒருத்தன் மட்டும் வீட்டு கூரைல உக்காந்திருந்தானாம். அந்த வழியா மரக்கட்டைகள பிடிச்சுகிட்டு போனவங்கள்லாம் ‘வாப்பா, இந்த [...]

Read Full Post »

தீ தீ தீ!!!

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். பொருள் : தீய செயல்கள் மிகுந்த தீமையை அளிப்பதால் அவை தீயைவிட அதிகமாக அஞ்சப்படுகின்றன. இதுமாதிரி குறளெல்லாம் நாம மறந்துட்டோமா?? ஏன் இவ்ளோ திருட்டு, கொலை, கொள்ளையெல்லாம் நடக்குது?? அதெல்லாம் தீயைவிட அதிகமான தீமையை கொடுக்கும்-னு சொல்லித்தரலியோ?? அடுத்த தலைமுறைக்காவது சொல்லித்தருவோமா??

Read Full Post »

தேவையில்ல Pharmacy!!!

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். பொருள்: சாப்பிட்ட உணவு செரித்துவிட்டதா என்பதை அறிந்து, அப்படிச் செரித்தபின், மீண்டும் பசிக்கும்பொழுது சாப்பிட்டால், நமக்கு, உடல் நலக்குறைவுகளும் ஏற்படுவதில்லை, மருந்துகளும் தேவைப்படுவதில்லை. இத நாம பலபேரு செய்யறதில்லங்க. எத்தன பேரு பசிச்சு சாப்டறோம்? காலைல காபி, கொஞ்ச நேரத்துல சாப்பாடு, ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சு மீண்டும் காபி (அ) டீ. மதியம் பசிக்குதோ இல்லயோ சாப்பாடு. சாயந்திரம் சும்மா கொஞ்சம் ஸ்நாக்ஸ், காபி, டீ. [...]

Read Full Post »

உன்னைக்கேளாய் நீயாரு!!

தேஸம் படத்துல வர்ற பாட்டு. A.R.ரகுமான் இசைல, ஹரிஹரனும், T.L. மகாராஜனும் பாடின பாட்டு!! ஹிந்திப் பாடலுக்கு போடப்பட்ட tune-க்கு எழுதுன பாட்டுன்னாலும் சிறப்பா எழுதியிருக்காரு பாடலாசிரியர் வாலி. எனக்கு பிடிச்ச இந்தப் பாட்ல இருந்து சில வரிகள்.. உன்னைக்கேளாய் நீயாரு உன்னைக்கேளாய் நீயாரு உண்மைக் கண்டார் யார்யாரு கூறாய்!! உள்ளக்கண்ணால் நீ பாராய்! உன்னை வென்று நீ வாராய்!! பாதையெல்லாம் போகுமே சீராய்!! அங்கங்கே மேடும் உண்டு! அங்கங்கே பள்ளம் உண்டு! அதைவெல்லும் உள்ளம் செல்லும் [...]

Read Full Post »

மறதியும்கூட நல்லதே!!

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. பொருள் : ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறந்துவிடுவது நல்லதல்ல. அவரே நமக்கு ஒரு தீமை செய்துவிட்டால் அதை அன்றே மறந்துவிடுவது மிகவும் நல்லது. பெரும்பாலான தமிழர் ரத்தத்துல ஊரிய விஷயம்ங்க, இந்த நன்றி மறவாமை. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’-ன்னு ஔவையார் கூட சொல்லியிருக்காங்களே!! ஒரு பேச்சுக்கு, நீங்க கிரிக்கெட் வெளயாடறீங்க-ன்னு வெச்சுக்கங்க. உங்க நண்பர் உங்கள கிளீன் போல்ட் பண்ணி அவுட் (out) ஆக்கிடறார்ன்னு வெச்சுக்கோங்க. [...]

Read Full Post »

Happy Mother’s Day!!!

எங்கள் அன்னைக்கு எங்கள் இனிய அன்னையர் தின வணக்கங்கள். சரவணன், சதீஷ், பிரகாஷ், சுபா.

Read Full Post »