Archive for August, 2005

இவங்களைத் தெரியுமா? – இன்ஃபீரியர் அந்நியன். 2.

கணவன் மனைவிக்குள்ளயும், நண்பர்களுக்குள்ளயும் இந்த இன்ஃபீரியர் அந்நியன் வந்துட்டா நிம்மதிய வெரட்டிடுவான். ‘உன்னவிட உன் மனைவி ரொம்ப கலரா, அழகா இருக்கா’ ‘உன் மனைவியோட கம்ப்பேர் பண்ணிப் பாத்தா, நீ ரொம்ப அழகு கம்மி, கலர் கம்மி. அவ ஃப்ரெண்ஸ்ஸல்லாம் பாரு எவ்ளோ பார்ஷ்ஷா இருக்காங்க’ ‘நீயும் உன் மனைவியும் வெளில போனா தி.மு.க கட்சி ஊர்வலம் மாதிரி இருக்கு. நீ நல்ல கருப்பு, அவ சூப்பர் சேப்பு.’ இப்டின்னெல்லாம் கணவக்குள்ள இருக்கற இன்ஃபீரியர் அந்நியன் சொன்னான்-னு [...]

Read Full Post »

இவங்களைத் தெரியுமா? – இன்ஃபீரியர் அந்நியன்.

நம்மள சுத்தி இருக்கறவங்கள்ல நெறைய பேருக்கு இந்த இன்ஃபீரியர் குணம் இருக்கு. நெறைய பேர்ட்ட இந்த இன்ஃபீரியர் குணம் ஒரு அந்நியன் மாதிரி இருக்கான். அப்பப்போ வந்து போவான். இதுல நெறைய வகைகள் இருக்கறதாதான் தோணுது. எனக்கு தெரிஞ்ச சில வகைகள மட்டும் சொல்றேன். இன்ஃபீரியர் அந்நியன். நமக்குள்ளயே இருப்பான். ஒவ்வொரு காரியத்தப் பண்ண முதல் அடி எடுத்து வெக்கறதுக்கு முன்னாடியும், ‘இதெல்லாம் உன்னால முடியுமா? இதுக்கெல்லாம் ரொம்ப தெறம வேணும். நெறைய பணம் வேணும். உன்ட்ட [...]

Read Full Post »

இவங்களைத் தெரியுமா? – டாக்டர் ஆலினால்.

இவங்க MBBS, MD, BDS இதுமாதிரி எதுவும் படிக்காத டாக்டர்கள். இதெல்லாம் படிச்சிருந்தாதான் டாக்டரா ஆகமுடியுமா என்ன? காயம் பட்டா கழுவி சுத்தம் பண்ணணும், இரும்புக் காயம்-ன்னா Anti spetic போடணும், டெட்டால் போடணும்-ங்கற முதலுதவிகள் செய்யத்தெரிஞ்சிருந்தா கொஞ்சம் டாக்டர். ஒரிஜினல் டாக்டர்கள் எழுதற மருந்துகளோட பேரு புரிஞ்சுதுன்னா பாதி டாக்டர். எந்த வலிக்கு என்ன மாத்திரை எழுதறார்ன்னு ஞாபகம் வெச்சுக்க முடிஞ்சா முக்கா டாக்டர். இவங்களே மருந்து சொல்லி நாலு பேரு குணமாயிட்டா (எத்தனபேரு ‘குணா’ [...]

Read Full Post »

ராகம்?

இது என்ன ராகம்-ன்னு தெரியல. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன். Song Clip

Read Full Post »

இவங்களைத் தெரியுமா? – சுப்பீரியர் சுந்தரி

இவங்க தன்ன சுப்பீரியரா நெனைக்கறதுக்கு எதாவது ஒரு காரணம் எப்பவும் இவங்களுக்கு இருக்கும். கொஞ்சம் அதிகமா காசு, படிப்பு, அமெரிக்கா (அ) ஃபாரீன் வாசம், நுனி நாக்கு இங்லீஷ், அழகு, நீளமான தலைமுடி, நீலமான கண்ணு இப்டி ஏதாவது ஒன்னு. யாராவது தன்னப் பத்தி பெருமையா பேசினா இவங்களுக்கு ரொம்ப சந்தோஷமாய்டும். அடுத்தவங்கிட்ட பேசும்போது தன்னோட பெருமைகளப் பத்தி பேசறது இவங்களுக்கு அல்வா சாப்டற மாதிரி. சாதாரணமா பேசறப்போகூட அவங்க பெருமைக்கு ஒரு அழுத்தம் இருக்கும். உதாரணமா. [...]

Read Full Post »

இவங்களைத் தெரியுமா? – அட்வைஸ் அஞ்சுகம்.

நம்ம எல்லோரையும் சுத்தி இருக்கற சில ‘சிறப்பான’ குணங்கள் இருக்கறவங்களோட அடையாளங்கள சொல்றேன். உங்கள சுத்தியும் இப்படி யாராவது இருக்கறாங்களா-ன்னு சொல்லுங்க. அட்வைஸ் அஞ்சுகம். இவங்ககிட்ட நீங்க எதப் பத்தி பேசினாலும் உங்களுக்கு அட்வைஸ்ஸ அள்ளி வழங்குவாங்க. நீங்க கேக்கலன்னாகூட அவங்களே பேச்ச ஆரம்பிச்சு அட்வைஸ் வழங்க ஆரம்பிச்சுடுவாங்க. ‘ஓ!! டி வி வாங்கப் போறீங்களா, Panasonic வாங்குங்க. இப்போ இருக்கற TV க்கள்ல அதுதான் பெஸ்ட்.’ ‘மிக்ஸி வாங்கினா ABC-கம்பெனில வாங்கு. ரொம்ப ச்சீப்பா கொடுக்கறான்’. [...]

Read Full Post »

கள்ளும் காதலும்.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. பொருள் : மனதில் நினைக்கும்போதே சந்தோஷத்தையும், பார்த்த மாத்திரத்திலேயே மகிழ்ச்சியையும் தரும் சக்தி கள்ளுக்கு இல்லை. காதலுக்கு உள்ளது!! செலபேருக்கு பாட்டில பாத்தவொடனே கிக்கு வந்துடும். வள்ளுவர் அவங்களையெல்லாம் கணக்குல சேக்கலபோல!!

Read Full Post »

இந்திய அணிகலன்கள்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. பொருள் : நோயற்ற வாழ்வு கொண்ட மக்கள், நல்ல பொருளாதார வளர்ச்சி, நல்ல விளைச்சல், இன்பமான சூழல், சிறந்த பாதுகாப்பு. இவை ஐந்தும் ஒரு நாட்டின் அணிகலன்களாகப் போற்றப்படுகின்றன. நோயற்ற வாழ்வு-ன்னா தலைவலி, ஜலதோஷம் கூட இல்லாததுன்னு இல்ல. காலரா, அம்மை மாதிரி அலை அலையா மக்கள கொல்ற நோய்கள் இல்லாதது. எவ்ளோ பொருளாதார வளர்ச்சி இருந்தாலும், விளைச்சல் இருந்தாலும், மற்ற நாடுகளோட (தேவையில்லாம) போர் செய்யறதால [...]

Read Full Post »

தாய் மண்ணே வணக்கம்.

உங்க எல்லோருக்கும் என்னோட இனிய 59-வது சுதந்திர தின வாழ்த்துக்கள். சின்னச் சின்ன குழுக்களா, அரசர்கள் சிற்றரசர்களுக்கு கீழேயும், ஆங்கிலேயர்களுக்குக் கீழேயும் ஆயிரக்கணக்கான வருஷங்களா வாழ்ந்திருந்தாலும், இந்தியா-ங்கற குடைக்கு கீழ இந்தியன்-ங்கற உணர்வோட வாழ ஆரம்பிச்சு இன்னியோட 58 வருஷம் ஆகுது. மனிதர்களோட வரலாறுன்னு பாக்கும்போது 58 வருஷங்கள்-ங்கறது ஒரு பெரிய விஷயம் இல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்னாடி வரைக்கும் தொடர்ந்து நூறு வருஷங்களுக்கும் மேல வெறும் போர் மட்டுமே செஞ்சுட்டு இருந்த நாடுகள் பத்தில்லாம் வரலாற்றுல [...]

Read Full Post »

தனம் தினம்.

7:36 AM: “போய்ட்றேன்மா”. அவசரமாகப் புறப்பட்டாள். 10:03 AM: “ரகுவை விவாகரத்து செய்ய முழுமனதுடன் சம்மதிக்கிறேன்” ஜட்ஜிடம் சொன்னாள். 11:51 AM: “ரொம்ப நன்றி டாக்டர், நீங்க இல்லன்னா..” தழுதழுத்தவரின் கைகளைப் பிடித்து “கடவுளுக்கு சொல்லுங்க” என்றாள். 1:37 PM: “ஹலோ ஆனந்தியா, ஈவினிங் எனக்கொரு மீட்டிங் இருக்கு, என் மகள பிக்கப் பண்ணிக்கமுடியுமா?” கேட்டாள். 3:34 PM: மாடிப் படியில் இறங்கி வந்தாள். 5:18 PM: “சாரி ஸ்வீட்-ஹார்ட், ரொம்பநேரமா காத்திருக்கீங்களா?” படகுமறைவில் உட்கார்ந்தாள். 7:06 [...]

Read Full Post »