Archive for September, 2005

ஒரு(புத்தகம்-கவிதை-குறள்-உரையாடல்)

போன சில வாரங்கள்ல “கற்பனைக்கும் அப்பால்…”-ங்கற புத்தகத்த படிச்சேன். இது சுஜாதா எழுதிய அறிவியல் தொடர்களோட ஒரு தொகுப்பு. இதுல மில்க்கி வே, காலக்ஸி, ப்ரபஞ்சம் பத்தியெல்லாம் அவர் படிச்ச புத்தகங்களோட சாரத்த எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதி.. நாம் இரவில் வானில் காணும் நட்சத்திரங்களில் பெரும்பாலானவை ‘மில்க்கி வே’ எனப்படும் நட்சத்திரக் குடும்பத்தை சேர்ந்தவை. இதில் சூரியனும் ஒரு நட்சத்திரம். இதற்கு மிக அருகாமையில் உள்ள நட்சத்திரமே சுமார் நான்கு ஒளி வருட தூரத்தில் [...]

Read Full Post »

என்ன படிச்சு.. என்ன பயன்?

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. பொருள்: நமக்கு தீமை செய்தவருக்கும்கூட நன்மையையே செய்யாவிட்டால், நாம் கற்ற கல்வியினால் அடையும் பயன்தான் என்ன? ஒடனே, கோவில் பக்கமா ரோட்ல நடந்து போயிட்டு இருக்கும்போது ‘சார்லி’யோ இல்ல வேற யாரோ மூஞ்சில எச்சி துப்பிட்டா பதிலுக்கு நாம பெப்ஸி வாங்கித் தரணுமா? அப்டின்னு கேக்கக்கூடாது!!. நம்மள சுத்தி இருக்கறவங்க, நண்பர்கள் இவங்கள்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ எதாவது தப்பு செய்யறாங்கன்னு வெச்சுக்கோங்க, அவங்ககிட்ட வறிஞ்சு கட்டிகிட்டு, போட்டி [...]

Read Full Post »

இன்ஃபீரியன் அந்நியன் 5.

நியூ ஜெர்சி-ல ஒரு ரேடியோ ஸ்டேஷன்ல, ஒரு நிகழ்ச்சி வருது. நம்ம ‘அபி பதில்கள்’, ‘செல்வி பதில்கள்’ மாதிரி. மக்கள் அவங்களோட ப்ரச்சனைகள எழுதிப் போடலாம் (அ) இ-மெயில் அனுப்பலாம். அந்த ப்ரச்சனை பத்தி ரேடியோல ஒரு மணிநேரம் பேசுவாங்க. மக்கள் ஃபோன் பண்ணி அவங்க பதில்கள சொல்லுவாங்க. அதேமாதிரி ப்ரச்சனை வந்தப்போ அவங்க எப்டி சமாளிச்சாங்க, என்ன பண்ணலாம் -ங்கற மாதிரி ஐடியாக்கள் தருவாங்க. அன்னிக்கு, அந்த நிகழ்ச்சில, ஒரு பொண்ணு எழுதின ப்ரச்சனையப் பத்தி [...]

Read Full Post »

இன்ஃபீரியன் அந்நியன் 4 a.

‘இன்ஃபீரியன் அந்நியன் 4′ ன் தொடர்ச்சி. இன்ஃபீரியர் மற்றும் இன்செக்யூர் அந்நியன்கள அடையாளம் கண்டுபிடிக்கறதுதான் கஷ்டம். வெரட்றது அவ்ளோ கஷ்டம் இல்லன்னுதான் தோனுது. அந்நியன்கள இப்டி வெரட்டணும், அப்டி வெரட்டணும்னு நெறைய அட்வஸ் பண்ணி நானும் அட்வைஸ் அஞ்சுகமா ஆக விரும்பல. அதே மாதிரி அந்நியன்கள வெரட்றதுக்கு இதெல்லாம் மட்டும்தான் வழிகள்-னும் இல்ல. ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொருமாதிரி அந்நியன்கள் இருக்கலாம். அத வெரட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்த கையாளலாம். எனக்கு தெரிஞ்ச செல வழிகள மட்டும் இங்க [...]

Read Full Post »

இசையஞ்சலி.

பாரதியார் நினைவுநாளன்னைக்கு பாரதி பாட்ட என் மனைவிய பாடச்சொல்லி iTalk-ல ரெக்கார்ட் பண்ணது. Song Clip

Read Full Post »

சுஜாதா & பா. ராகவன்.

நேத்து, ஞாயித்துக் கிழமைல, மனைவிகூட ஷாப்பிங் போகாம, திட்டு வாங்கிகிட்டு, வீட்லயே உக்காந்து, வலைப்பதிவுகள படிச்சுகிட்டு இருந்தேன். (ஷாப்பிங் போய்ட்டு வந்து ‘என்ன பண்ணீங்க?’-ன்னு கேட்ட மனைவிட்ட, ‘வாத்து’ படத்துக்கு ஓட்டு போட்டேன்னு சொல்லல!! ) வலைப்பதிவுகள்ல, சுஜாதா மேலயும், பா. ராகவன் மேலயும் நெறைய சர்ச்சைகள் ஏற்பட்ருக்கறத படிச்சேன். என்னோட பார்வைப் புள்ளிய (Point of view-வ) சொல்லலாமேன்னு இத எழுதறேன். சுஜாதா எழுதின ‘பதிமூவாயிரம் வைணவர்கள்’ விஷயமும், பா. ராகவனோட ‘ஆப்பிரிக்கா’ மற்றும் ‘கட்ரீனா’ [...]

Read Full Post »

தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

நான், என் மனைவி, என் தம்பி, என்னோட நண்பர்கள், எல்லாரும் பேசிட்டு இருந்த சில உரையாடல்கள (அ) வாக்குவாதங்கள உங்களோட பகிர்ந்துக்கலாம் (அ) உங்களோட தொடரலாம்-ன்னு தோனுச்சு. அதுல ஒன்ன, அப்டியே இங்க எடுத்துவுடறேன். வலைப்பதிய ஆரம்பிக்கறதுக்கெல்லாம் முன்னாடி ஒருநாள், எதோ படிச்சுகிட்டு இருந்தப்போ, ‘பாரதி’ சொன்ன ‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!‘ ங்கற வரிய படிச்சேன். அது ஒரு கவிதைல வர்ற வரியா, இல்ல வேற எதுலயும் வர்றதான்னு தெரியல. அந்த ஒரு [...]

Read Full Post »

செப்டம்பர் 11. 2

மகாகவி பாரதியாரோட நினைவுநாள். அவரோட நினைவா அவரோட பாடல்கள்ல ஒன்னு. மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திடவேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்கவேண்டும் மண் பயனுறவேண்டும் வானகமிங்கு தென்படவேண்டும் உண்மை நின்றிடவேண்டும் ஒம் ஒம் ஒம் ஓம். ம்ம்ம்.. [...]

Read Full Post »

செப்டம்பர் 11.

World Trade Center (அ) Ground Zero வில் உள்ள ரயில் நிலையத்தின் வழியாக தினமும் பயணிக்கும் பயணி என்பதால், நேற்று, Ground Zero அருகில் நின்று, செப்டம்பர் 11, 2001-ல் உயிரிழந்த சுமார் மூவாயிரம் அப்பாவி மக்களுக்கும், அதன் பிறகு ஆப்கானிலும், ஈராக்கிலும் உயிரிழந்த ஒரு லட்சத்துக்கும் மேலான அப்பாவி மக்களுக்கும் என் இதய அஞ்சலியை செலுத்தினேன்.

Read Full Post »

என்ன ராகம் – 2?

இதுவும் என்ன ராகம்-னு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன். Song Clip

Read Full Post »