Archive for November, 2005

கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்.

“கரண்ட்டு, லைட், ஃபேன் கண்டுபிடிச்சிட்டாங்க, பஸ் கார் ரயில் விமானம் எல்லாம் கண்டுபிடிச்சிட்டாங்க, ராக்கெட் கண்டுபிடிச்சிட்டாங்க, க்ரைண்டர், மிக்ஸி கண்டுபிடிச்சிட்டாங்க, கேஸ் ஸ்டவ், ஃப்ரிஜ் கண்டுபிடிச்சிட்டாங்க.
சே!! நாம கண்டுபிடிக்கறதுக்குன்னு எதையுமே விட்டுவைக்காம இப்டி எல்லாத்தையும் முன்னாடியே கண்டுபிடிச்சிட்டாங்களே!!”
இப்டி ஸ்கூல்ல படிக்கற காலங்கள்ல ரொம்பவே(!) வருத்தப்பட்ருக்கேன். அந்த சின்ன வயசுல, பிஞ்சு மூளைல கொஞ்சம் ஓஓஓவராவே வருந்தம்ஸ்!!!
மனுஷங்களோட கண்டுபிடிப்புகள்ல நெறைய கண்டுபிடிப்புகள் அவங்களோட தேவைகள்ல இருந்து உந்தப்பட்டவைன்னுதான் தோனுது. அப்படிப்பாத்தா இன்றைய தேவைகள் நாளைய கண்டுபிடிப்புகள் ஆகலாம் [...]

Read Full Post »

பச்சை நிறமே! பச்சை நிறமே!!

கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் நீலம் பாத்திருப்பீங்க. கடல்ல. பச்சை பாத்திருக்கீங்களா? தஞ்சாவூர் ஏரியா காரங்க பாத்திருப்பீங்க. கடந்த 10 வருஷங்களுக்கும் மேலா பாக்காத இந்த காட்சிகள இந்த வருஷம் பாக்க முடிஞ்சுது.
பச்சைலயே எந்தன விதமான பச்சைகள்.
இளம் பச்சை.
துளிர் பச்சை.
கரும் பச்சை. இன்னும் விவரிக்க முடியாத பல வித்தியாசமான பச்சை நிறங்கள். கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும்.
எங்க ஊர்ல இருந்து தஞ்சாவூர் போற சாலை ஓரத்துல நின்னு க்ளிக்கின காட்சிகள். Click on the Images for [...]

Read Full Post »

After a break.

ஹாய். எப்டி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு உங்களையெல்லாம் சந்திச்சு. அக்டோபர் மாசம் கஷ்டமான மாசமா போச்சு. அவசரமா இந்தியா போக வேண்டியிருந்துச்சு. போன வாரம்தான் திரும்பி வந்தேன். விவரங்கள் அப்புறமா சொல்றேன். இப்போதைக்கு, என்ன யோசிக்க வெச்ச ஒரு Fortune Cookie வாசகம் சொல்றேன்.
நேத்து மதியம் சைனீஸ் ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்ட போனப்போ வந்த Fortune Cookie-ல இருந்தது.

Read Full Post »