Archive for December, 2005

Accidental Murder.

செலீனா அக்தல், அமெரிக்காவில் நேற்றுவரை சந்தோஷமாக வாழ்ந்த 28 வயது குடும்பத் தலைவி. பங்களாதேஷில் இருந்து அமெரிக்கா வந்து குடியேரி வாழ்ந்துகொண்டிருந்தவர். இரண்டு குழந்தைகளின் தாய். இன்னும் இரண்டு நாட்களில் 29வது பிறந்தநாளை கொண்டாட இருந்தவர். கார்பியோ நியூயார்க்கின் குவீன்ஸை சேர்ந்த 23 வயது இளைஞன். அமெரிக்க ராணுவத்தில் ஆறு மாதங்களுக்குமுன் சேர்ந்திருந்தவன். டெக்ஸாஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, விடுப்பில் நியூயார்க் வந்தவன். ஆறுமாதங்கள் ராணுவத்தில் வெற்றிகரமாக வேலை பார்த்த மகிழ்ச்சியை, நேற்று இரவு (12/29/2005) 11.30 மணியளவில், [...]

Read Full Post »

பாஸ்போர்ட்.

‘ஹாப்பி பர்த்டே மது’ என்றேன். திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு ‘தேங்க்ஸ்’ என்றபடி அவசரமாகக் குளிக்கச் சென்றாள் மது என்கிற மதுவந்தி. என் மகள். காலை 5 மணிக்கு குளித்து முடித்துவிட்டு அவசரம் அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தவளிடம் ‘எல்லா டாக்குமெண்ட்ஸும் மறக்காக எடுத்துகிட்டியா?’ என்றேன். ‘யெஸ் டாட். ஹவ் மெனி டைம்ஸ் வில் யூ ஆஸ்க் த சேம் திங்?’ என்று கோபப்பட்டாள். ‘மோரோவர், இட்ஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் மிஸ்டேக். த ஒன் யூ டிட் [...]

Read Full Post »

விரும்பிச் செய்த பிழை.

வழக்கமாகவே தொண்டர்கள் கூட்டம் நிறம்பி வழியும் தலைவரின் வீடு அன்று சற்று பதட்டத்துடன் காணப்பட்டது. கூட்டம் குறைவாக இருந்தது. ஒரிரு தொண்டர்கள் இங்குமங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். முந்தைய தலைவர்களின் படங்கள் விஸ்தாரமான வரவேற்பறை முழுவதும் மாட்டப்பட்டு வாடா மல்லியான ப்ளாஸ்டிக் மல்லி மாலைகள் போடப்பட்டிருந்தன. வரவேற்பறையை தாண்டியதும், 100 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரிய ஹால். ஹாலின் மையமாக மாட்டப்பட்டிருந்த படத்தில், விபூதிப் பட்டை குங்குமம் சகிதமாக சிரித்துக் கொண்டிருந்தார் தலைவர். ஹாலில் [...]

Read Full Post »

வள்ளுவரும் புயலும்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். பொருள்: மழையை வாரி வாரி வழங்கக்கூடியது ‘புயல்’. அதனுடைய வளம் குன்றிப் போனால், உழவர்கள் ஏரைப் பிடித்து உழவுத் தொழில் செய்வது இய(ல்)லாமல் போய்விடும். வள்ளுவர் காலத்துல எத்தன பேரு உழவுத் தொழில் பண்ணியிருப்பாங்க, புயல்/மழைய எவ்ளோ முக்கியமா வள்ளுவர் எழுதியிருக்காரு. இப்போ எவ்ளோ பேரு உழவுத் தொழில் பண்றாங்க. இப்போ மழையோட முக்கியத்துவம் என்னன்னெல்லாம் யோசிச்சு பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு!!

Read Full Post »

வருண பகவானுக்குத் தந்தி.

கடல் தண்ணி, மேல் மட்டத்துல இருக்கற காத்த சூடாக்கறதால, காத்துல சுழற்சி ஏற்பட்டு, சுழல் காத்து ஏற்பட்டு (அதுவே புயலா மாறி) மழைய கொண்டு வருதுன்னு சொல்றாங்க. அதே காத்த நாமலே சூடாக்கினா?? எப்டின்னு பாக்கறீங்களா? வருண யாகம் பண்ணி வருண பகவானுக்கு தந்தியடிச்சிதான். இப்படியும் காத்த சூடாக்கி மேல அனுப்பலாம். ஆனா இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்குமா?? இந்த சூட்டினால சுழற்காத்த ஏற்படுத்த முடியுமா?? அதுனால மழைய வரவழிக்க முடியுமா?? இதே மாதிரி இன்னொரு யோசனை. [...]

Read Full Post »

ஓ!! ஒரு தென்றல் புயலாகி வருதே!!

தமிழ்நாட்டுல எங்கப் பார்த்தாலும் புயல், மழை, வெள்ளம். எல்லா அணைகளும் ஃபுல். ஏரிகளும் ஃபுல். சென்னைல இருந்து, பஸ்ல, எங்க ஊருக்கு போக வழக்கமா 6 மணி நேரம் ஆகும். இப்போ 12 (அ) 13 மணி நேரம் ஆகுது. அப்டியாவது ஊர் போய் சேருதே-ன்னு சந்தோஷப் படற நெலமைல இருக்கு. சென்னைல, கழிவு நீர் மட்டுமே ஓடிட்டு இருந்த, கூவம் ஆத்துலயும் அடையார் ஆத்துலயும் மழைநீர் ஃபுல்லா ஓடுது. புயல் மழை-ல்லாம் விட்றுச்சான்னா, இன்னும் வரலாம்-ன்னு [...]

Read Full Post »

Cartoon.

AMNewyork தினப் பத்திரிக்கைல நேத்து இந்தக் கார்ட்டூன் வந்திருந்துச்சு. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்-ன்னு வள்ளுவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு.

Read Full Post »