இந்தியால வெள்ளைக்காரங்க வந்து நம்மள அடிமைப்படுத்துனதால, நாம சோழ நாட்டு மக்கள், சேர நாட்டு மக்கள், மொகலாய மக்கள்ங்கற மாதிரி வேறுபாடுகள்லாம் போயி இந்திய மக்கள்-ங்கற உணர்வோட போராடினோம் இல்லயா?? அதுமாதிரி, ஆங்கிலேயர்கள் அமெரிக்கால குடியேறினதுக்கு முன்னாடி, அங்க மண்ணின் மைந்தர்களாக இருந்த செவ்விந்தியர்கள் எல்லோரும் ஒன்னா சேர்ந்து ஆங்கிலேயர்கள எதிர்த்து சுதந்திரத்துக்காகப் போராடியிருப்பாங்களோ-ன்னு நெனைச்சீங்கன்னா, அதுதான் இல்ல!! 1500கள்ல ஆரம்பிச்சு இங்கிலாந்து-ல இருந்து வந்து அமெரிக்க நிலப்பரப்புல குடியேறின மக்களுக்கெல்லாம் ஒரு ரெண்டு மூணு தலைமுறைக்கப்புறம் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
February 26th 2006
அமெரிகோ வெஸ்புச்சி அமெரிக்காவ வந்து விசிட் பண்ணிட்டு போயி புதிய உலகம்-ன்னு புத்தகம் எழுதினாரு-ன்னும், போப்பாண்டவர் வரைபடத்துல கோடுபோட்டு போர்ச்சுகீசியர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் பாகப்பிரிவினை செஞ்சு கொடுத்தார்-ன்னும் படிச்சோம். அந்தகாலங்கள்ல உலக வரைபடம் எப்டி இருந்துச்சு-ன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?? புதிய உலகம்-னு வெஸ்புச்சி சொன்ன எடத்தோட வரைபடம். உள்ள நிக்கறது அவருதான். இந்த வரைபடம் வரையப்பட்ட வருஷம் 1507. 1507-ஆம் வருடத்துல வரையப்பட்ட உலக வரைபடம். (அப்புறமா கலரடிச்சிருப்பாங்க போலருக்கு!!) வெஸ்புச்சிதாத்தா பயணம் செஞ்ச வழி.
Read Full Post »
Filed under
General
Posted on
February 24th 2006
என்னோட உற்ற நண்பனோட அண்ணன் ஒருத்தர போன மாசம் சந்திச்சேன். அவருக்கு ஒரு அஞ்சு வயசு மகன். அமெரிக்கன் சிட்டிசன். ரொம்ப கஷ்டப்பட்டு அவன தமிழ்ல பேசவெக்கணும்-னு முயற்சி செஞ்சோம். முடியல. அவன் பேசின நாலு தமிழ் வார்த்தைகள் வடை, பொங்கல், கில்லி, விஜய். சக்கரப் பொங்கல some kind of பொங்கல்-ன்னான். தமிழ்ல பேசினா புரிஞ்சுக்கறான். ஆனா பேச முடியல. ஆங்கிலம் அவ்ளோ ஊறிடுச்சு அவனுக்குள்ள. ஆங்கிலம் அவ்ளோ ஊறிடுச்சு அமெரிக்கால. ஆமா, அமெரிக்காவுக்கு ஆங்கிலம் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
February 20th 2006
எனக்கும் வரலாற்றுக்கும் கொஞ்சம் நஞ்சம் இல்ல, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம். ஆறாவது படிச்ச காலத்துல இருந்தே வெறும் பாஸ்மார்க் மட்டுமே வாங்கி பாஸ் பண்ணிட்டுதான் வந்தேன். அசோகர் எந்த வருஷம் மரம் வெச்சாரு, எந்த வருஷம் ரோடு போட்டாரு-ன்னு ஞாபகம் வெச்சுக்கறதோ, ஔரங்கசீப், எத்தன சீப்பு வெச்சிருந்தார்னோ ஞாபகம் வெச்சுக்கறது ரொம்ப பேஜாரான விஷயம் எனக்கு. எப்டியாவது வரலாறு புவியியல்ல பாஸ்பண்ண வெச்சுடு, மறக்காம வந்து தேங்கா ஒடைக்கறேன்-னு புள்ளையார்கிட்ட வேண்டிக்கிட்டு, மறக்காம போயி பலதடவ தேங்கா ஒடைச்சிருக்கேன். [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த புத்தகங்கள்
Posted on
February 20th 2006
உலகப்புகழ்பெற்ற கணித மேதை, சீனிவாச இராமானுஜம் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) வசித்த வீட்ட இப்போ அவரோட நினைவகமா மாத்தியிருக்காங்க. கும்பகோணத்துல இருக்கற இந்த வீட்டுக்கு போயிருந்தேன். வீட்டுக்குள்ள புகைப்படம் எடுக்க இந்தியர்களா இருந்தா சிறப்பு அனுமதி வாங்கணுமாம். (வெளிநாட்டவர்களுக்கு இந்த அனுமதி தேவையில்லயாம்). அதுனால வெளிப்புறத்த மட்டும் புகைப்படம் எடுத்தேன். அடுத்தமுறை அனுமதி வாங்கி உள்ளயும் படம் எடுக்கறேன். Click on the image for a larger picture. இராமானுஜன் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
February 13th 2006
msn.com-ல வந்த இந்த விளம்பரத்தப் பாத்தா.. கைரேகை ஜோசியம், நாடி ஜோசியம், கிளி ஜோசியம் பாக்கறவங்களுக்கெல்லாம் அமெரிக்கால டிமாண்டு அதிகமாயிடும் போலருக்கு!! நம்ம வெப் சைட்டுக்கு நெறைய விசிட்டர்ஸ் வருவாங்களா, கமெண்ட் எழுதுவாங்களா-ன்னெல்லாம் கிளிஜோசியம்.காம் மற்றும் நாடிஜோசியம்.காம்-ல கேட்டு தெரிஞ்சுக்கலாம்!!
Read Full Post »
Filed under
General
Posted on
February 13th 2006
இந்த பொங்கலுக்கு ஊர்ல இருக்கற வாய்ப்பு கெடைச்சுது. காலைல எழுந்து எங்க வீட்டு வாசல்லயும் பக்கத்து வீட்டு வாசல்கள்லயும் போடப்பட்டிருந்த கோலங்கள படம் பிடிச்சேன். உங்க பார்வைக்காக. . . . . . .
Read Full Post »
Filed under
General
Posted on
February 11th 2006
‘கோகிலாட்ட சீக்கிரம் காஃபிய கொடுத்து அனுப்புங்க!!’ உரத்த குரலில் சொன்னார் கோகிலாவின் அப்பா. பெண் பார்க்க வந்த மனோகரும் அவனது மாமா மாயியும் சோபாவில் உட்கார்ந்திருந்தார்கள். உறவினர் பெருசுகள் சில தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் உட்கார்ந்திருந்தன. கோகிலாவின் உறவுக்காரச் சிறுவன் ஒருவன் ஓடிப்போய் மனோகரின் மடியில் ஏறிக்கொண்டான். வெட்கம், எதிர்பார்ப்பு, பதற்றம், அவசரம் என மாறுபட்ட உணர்ச்சிகள் மனோகரின் முகத்தில் வந்து வந்து போயின. முந்தின இரவு கண்ட கனவை ஒரு முறை அசைபோட்டுக்கொண்டான். அனைவருக்கும் காஃபி [...]
Read Full Post »
Filed under
General
சிறுகதை முயற்சிகள்
Posted on
February 2nd 2006