Archive for March, 2006

ஒரு எழுச்சி தீபம்.

இந்த அரசியல் விளையாட்டுகளயெல்லாம் பாத்து மனசு கேக்காமதான் காலைல இலவசம் பத்தி சொன்னேன். அதே மூடோடதான் சாயங்காலம் ‘எழுச்சி தீபங்கள’ பிரிச்சு, விட்ட பக்கத்துல இருந்து தொடர்ந்தேன். அடுத்த பக்கதுல கலாம் அவர்கள் சொன்ன விஷயமே ஒரு எழுச்சி தீபத்த ஏத்தி வெச்சமாதிரி இருந்தது. அது உங்களுக்காக… ஒரு சமயம், ஒரு குழந்தை என்னிடம் கேட்டது. நாம் மகாபாரதம் படித்திருக்கிறேனா என்றும் அப்படி படித்திருந்தால், அதில் என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் யார்? என்றும் அந்தக் குழந்தை கேட்டது. [...]

Read Full Post »

இலவசம்.

நான் படிக்கற புத்தகங்கள்ல சொல்ற நல்ல விஷயங்களையும், கத்துக்கற விஷயங்களையும் பத்தி மட்டும் எழுதலாம், நம்ம ஊர்ல நடக்கப்போற தேர்தல் பத்தி எழுத வேண்டாம்-ன்னுதான் நெனைச்சுகிட்டு இருந்தேன். நேத்து வெளியான தி.மு.க வோட தேர்தல் அறிக்கைய படிச்சப்புறம் இந்த பதிவ எழுதாம இருக்க முடியல. தேர்தல் அறிக்கைல முக்கியமான ஐட்டங்கள் சில. * மகளிர் மனம் மகிழ்ந்து பொது அறிவு பெற்றிட வீடுதோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி. * ஏழை எளிய தாய்மார்களுக்கு எரிவாயு அடுப்பு [...]

Read Full Post »

ப்ரமோஷன்.

காட்சி – 1: கார்த்திகேயன் வீடு / நள்ளிறவு. தூக்கிக்கொண்டிருந்த கார்த்திகேயன் அலறியடித்துக்கொண்டு எழுத்துகொள்கிறான். முகமெல்லாம் வியர்த்திருக்கிறது. அருகில் படுத்துறங்கிக்கொண்டிருந்த மனைவி மேகலா பதற்றம் சிறிதும் இல்லாமல் எழுந்து விளக்கை போடுகிறாள். அருகில் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்து அவனிடம் கொடுத்தபடி, மேகலா : என்ன திரும்பவும் அதே கனவா? கார்த்திகேயன் தண்ணீரை வாங்கி குடித்தபடி, கார்த்திகேயன் : ம்ம்ம்ம்ம் மேகலா : அதேமாதிரி பாலைவனமா? கார்த்திகேயன் : ம்ம்ம்ம்ம் கார்த்திகேயன் முகத்தில் இன்னும் பயத்தின் ரேகைகள் [...]

Read Full Post »

உயிரும் நீயே! உடலும் நீயே!!

டாலர் தேசம் பத்தி எழுதறதுக்கு முன்னாடியே எழுதணும்-னு நெனைச்ச சில விஷயங்கள இப்போ எழுதிடறேன். மொதல்ல இந்த பாட்டு. பவித்ரா படத்துல, உன்னிகிருஷ்ணன் பாடின பாட்டு. A.R.ரகுமான் இசை. உன்னிக்கு தேசிய விருது வாங்கித் தந்த ரெண்டு பாடல்கள்ல ஒன்னு. (இன்னொன்னு காதலன் படத்துல வந்த ‘என்னவளே அடி என்னவளே’!!). உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே! உன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே உன் கண்ணில் வழியும் ஒரு [...]

Read Full Post »

மதுவந்தி.

கடவுள் அருளால, மார்ச் 15, 2006 அன்னிக்கு எங்களுக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள். மதுவந்தி-ன்னு பேர் வெச்சிருக்கோம். (ஒரு ராகத்தோட பேரு.) ஒரு சுவையான கோயின்ஸிடன்ஸ் என்னன்னா, போன டிசம்பர்ல பாஸ்போர்ட்-ன்னு ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். அதுல வர்ற சில வரிகள். இன்று, மார்ச் 15, 2021 திங்கட்கிழமை, என் மகளுக்கு அப்பாய்ண்ட்மெண்ட். நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில். இன்றோடு பதினாறு வயது முடிவடைவதால், ‘பீப்புள் ஆஃப் இந்தியன் ஆரிஜின்’ என்ற வகையில் இந்தியன் சிட்டிசன் ஆகும் [...]

Read Full Post »

முதலாவதான எட்டாவது ஜனாதிபதி.

13 மாநிலங்கள் சேர்ந்து, United States of America-ன்னு ஒரு கூட்டணி அமைச்சு, மீட்டிங் போட்டு, கூட்டறிக்கை வெளியிட்டு, சுதந்திரத்துக்காக போராடி, வெற்றியடைஞ்சு, ஜான் ஹான்சன ஜனாதிபதியாகி அவருக்கப்புறம் வருஷத்துக்கு ஒருத்தர்-ன்னு ஏழுபேர் ஜனாதினதி ஆனாங்க. ஆனா இந்தக் கூட்டணி-ல இருந்த மாநிலங்களுக்கெல்லாம் அந்தந்த மாநிலத்துக்கு எல்லா அதிகாரமும் வேணும்-னு நெனைச்சாங்களே தவிர, United States of America-ங்கற ஒரு தேசம் உருவாகறதுல அவ்ளோ ஈடுபாடு இல்ல. ஒரு தேசம்-னு உருவாக்கி எல்லா அதிகாரத்தையும் அதுகிட்ட கொடுத்துட்டா [...]

Read Full Post »

தமிழில் எழுத..

தமிழில் எழுதும் ஆர்வம் உள்ள நண்பர்களுக்காக. எ களப்பையின்(eKalappai) உதவியுடன் ஈசியாக தமிழில் எழுத முடியும். எ களப்பைய install பண்ணினதுக்கு அப்புறம் ‘alt+1′ அடிச்சுட்டு English-லயும், ‘alt+2′ தமிழ் Unicode-லயும், ‘alt+3′ அடிச்சுட்டு தமிழ் அஞ்சல் font-லயும் அடிக்க முடியும். Install பண்ணிட்டு ஏதும் ப்ராப்ளம் இருந்துச்சுன்னா கமெண்ட்டுங்களேன்.

Read Full Post »

ஜான் ஹான்சன்.

United Stated of America-ங்கற 13 மாநிலக் கூட்டணியோட முதல் ஜனாதிபதி ஜான் ஹான்சன் இவர்தாங்க. ஜான் ஹான்சன் முகம் போட்ட டாலர் நோட்டு. ஆனா, அமெரிக்காவோட முதல் ஜனாதிபதி யாருன்னு கேட்டா, யாரும் இவர் பேர சொல்றதே இல்ல!!

Read Full Post »

ஜான் ஹான்சன் (John Hanson) – முதல் அமெரிக்க ஜனாதிபதி.

13 மாநிலங்கள் சேர்ந்து ‘United States of America’-ங்கற கூட்டணியை உறுவாக்கி, இந்த கூட்டணியின் வருடாந்திரக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி ஜார்ஜ் வாஷிங்டன் படைகளின் தளபதியாகி, தலைமைதாங்கி கூட்டணிப் படைகள் வெற்றி பெற்று 1781-ஆம் வருஷம் சுதந்திரம் வாங்கியாச்சு. சுதந்திரம் வந்தப்புறம் யார் இந்த மாநிலக் கூட்டணிக்கு ஜனாதிபதியாகறது-ன்னு முடிவு பண்ண ஒரு மீட்டிங் போட்டாங்க. அதுல, சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த நிர்வாகத்திறமை உள்ளவருமான ‘ஜான் ஹான்சன்’-ங்கறவர ஜனாதிபதியா தேர்ந்தெடுத்தாங்க. மீட்டிங்குக்கு வந்திருந்த ‘ஜார்ஜ் வாஷிங்டனும்’ [...]

Read Full Post »

கூட்டறிக்கை (The Articles of Confederation).

13 மாநிலங்கள் சேர்ந்து ஒரு விடுதலைக் கூட்டணி அமைச்சு அந்தக் கூட்டணி பத்தி ஒரு கூட்டறிக்கை வெளியிட்டாங்க. ஆழ்ந்த சிந்தனைக்கப்புறம் உருவான அந்தக் கூட்டறிக்கைல இருந்த சில முக்கிய விஷயங்கள் இங்க. 1. இந்த 13 மாநிலங்களின் கூட்டணி ‘United States of America’ என்று அழைக்கப்படும். 2. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களுக்கான சட்டங்களை இயற்றிக்கொள்ளவும், சுதந்திரமாக செயல்படவும் முழு உரிமை உண்டு. 3. இந்தப் பதிமூணு மாநிலங்களும் நட்புறவோடு செயல்பட வேண்டும். இந்த நட்புறவு, மாநிலங்களுக்கு [...]

Read Full Post »