Archive for September, 2006

தேவர் மகன்.

நான் மிகவும் ரசிச்சு பாத்த படங்கள்ல இருந்து ‘சூப்பர் சீன்’கள உங்களோட பகிர்ந்துகறேன். முதன் முதலா, படம் : தேவர் மகன். இந்தக் காட்சிய நான் ஒரு 100 தடவையாவது பாத்திருப்பேன். இன்னும் 100 தடவை பாத்தாலும் அலுக்காத காட்சி. பலவருஷங்களா இந்த விசிடிய தேடிட்டு இருந்தேன். சென்ற வாரம் பாஸ்டன் ல இருக்கற ஒரு நண்பன் வீட்டுக்கு போனப்போ அவன் வெச்சிருந்தான். சுட்டுட்டு வந்துட்டேன்!! (சிவாஜியும் கமலும் பேசற காட்சி. (Full Length video)) என்னோட [...]

Read Full Post »

பாரதி.

செப்டம்பர் 11-ம் நாள முக்கியப்படுத்தற இன்னொருத்தர் பாரதியார். அன்னிக்கு அவரோட நினைவுநாள். (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921). பாச்சிலரா இருந்த காலங்கள்ல, ‘நீ, நான், நம்ம ஸ்மிரின் ஆஃப் மூணு பேரும் சேர்ந்தா ஒரே ஜாலிதான்’-ன்னு நண்பர்கள் கூடவும், தம்பிகூடவும் சேர்ந்து பேசிட்டு இருந்த காலங்கள்ல அடிக்கடி பாடி ரசிச்ச பாட்டு. தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் [...]

Read Full Post »

09-11-06.

செப்டம்பர் பதினொன்னு அன்னிக்கு காலைல அலுவலகம் போறதுக்காக WTC ட்ரெயின் ஸ்டேஷன்ல வந்து எறங்கினப்பொவே கூட்டம் அதிகமா இருந்துச்சு. ஒவ்வொருத்தர் முகத்துலயும் ஒரு சோகம். நெறைய பேர் வந்து மலர்க் கொத்துகள் வந்து வெச்சுகிட்டு இருந்தாங்க. ஒரு சோகமான வயலின் ஸ்பீக்கர் வழியா சோகத்த ஒலிச்சுகிட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரம் அங்க நின்னுட்டு அப்புறமா அலுவலகம் போய்ட்டேன். என்னோட போன் காமரால எடுத்த சில படங்கள்!! (Click on the image to see it bigger!!)

Read Full Post »

மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் – தமிழில்

(http://thenkoodu.com போட்டிக்காக!!) நீண்ட நாட்களுக்குப் பிறகு பீட்டரும், ஜானத்தனும் சந்தித்துக்கொண்டார்கள். இருவர் முகத்திலும் ஆச்சரியம் கலந்த சந்தோஷ மின்னல்கள் தெரித்து அடங்கின. பீட்டர் பேச்சை தொடங்கினான். ‘ஹே மச்சான் எப்டி இருக்க? ரொம்ப நாளாச்சுடா உன்ன பாத்து!’ ஜானத்தன், ‘ஹேய், நீ எப்டி இருக்க பீட்? அப்பா!! உன்னப் பாத்து பல வருஷம் ஆயிருச்சில்ல?’ பீட்டர் கொஞ்சம் சோகமான குரலில், ‘போன வருஷம் உனக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்-ல சீரியஸா இருந்ததா கேள்விப்பட்டேன். அப்பவே வந்து [...]

Read Full Post »

அமெரிக்க பக்தி.

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு குருகுலத்துக்கு போயிருந்தேன். அமெரிக்கால நான் பாக்கற முதல் குருகுலம். நியூ ஜெர்சியோட பார்டர்ல, பென்சில்வேனியா மாகானத்துல இருக்கு. போற வழியெல்லாம் மலையும் மலைசார்ந்த எடங்களா, இயற்கை அழகு கொட்டிக்கிடந்துச்சு. குருகுலத்துக்குள்ள ஒரு சின்ன கோவில், ஒரு ப்ரேயர் ஹால், ஒரு கிச்சன், ப்ரேயர் ஹால் அளவுக்கு பெருசா ஒரு டைனிங் ஹால் அவ்ளோதான் முக்கிய கட்டிடம். அத சுத்திலும் நெறைய குடில்கள். குடில்கள்னா, குடும்பத்தோட தங்கற அளவுக்கு வசதியான வீடுகள். அந்த [...]

Read Full Post »

எடையும் நடையும்..

நம்ம ஊர்ல, பெரும்பாலான மக்கள்ட உடம்போட எடை பத்தின கான்ஷியஸ்னஸ் (தமிழ்ல எப்டி சொல்லணும்?) இல்லவே இல்லாததுபோல்தான் தெரியுது. உடம்பு நல்லா குண்டா இருந்தாதான் ஆரோக்கியமா இருக்கறதா ஒரு நம்பிக்கை (மூடநம்பிக்கை(?)) இருக்கு. எங்க பாட்டிகிட்டயும், அம்மாகிட்டயும் அடிக்கடி நான் விவாதம் பண்ணுகிட்டு இருப்பேன். கொஞ்சம் எடை கொறைஞ்சாலும், என்னப்பா இப்டி எளைச்சு போயிட்ட-ன்னு வருத்தப்படுவாங்க. நான் எப்போ ஊருக்கு போனாலும், ஒரு வாரத்துல 2 – 3 கிலோ ஏறிடுவேன். நாலுவாரம் ஊர்ல இருந்தா, 8 [...]

Read Full Post »

பசி என்றொரு உணர்வு.

வள்ளலார் (அ) இராமலிங்க அடிகளார் மேல எனக்கு எப்பவுமே ஒரு பெரிய மரியாதை உண்டு. எங்க பாட்டி அவர பத்தி அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’-னு மனப்பாடமா திருவருட்பா பாடல்கள்லாம் பாடுவாங்க. மாயவரத்துக்கு பக்கத்துல இருக்குற பெருஞ்சேரிதான் எங்க தாத்தா ஊரு. வள்ளலார் மேல ரொம்ப பக்தி கொண்டவங்க அந்த ஊர்க்காரங்க. எங்க தாத்தா பேருகூட இராமலிங்கம்தான். வள்ளலார் வாழ்ந்த ஊரான வடலூர் எங்க ஊர்ல இருந்து சென்னை [...]

Read Full Post »

கிராமம் இருந்த இடம்.

அடுத்ததா நான் படிச்சுகிட்டு இருக்கறது நவீன இலக்கியவாதி, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதின புத்தகங்களான, ‘துணையெழுத்து’ மற்றும் ‘கதாவிலாசம்’. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்குற புத்தகங்கள். இலக்கியவாதிகள்னாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜியா இருக்கும். சங்க இலக்கியங்கள பத்தி புரியாத பாஷைல பேசறவங்க-ங்கற நெனைப்புதான் வரும். ஆனா இலக்கியவாதி-ங்கறவங்க அந்தந்த கால கட்டங்கள்ல வாழற மக்கள, அவங்களோட வாழ்க்கைய பதிவு செய்யறவங்க-ன்னும், இந்த காலத்து இலக்கியவாதிகளையெல்லாம் நவீன இலக்கியவாதிகள்-ன்னு சொல்றாங்க-ன்னும் சொல்லி இந்தப் புத்தகங்கள படிக்க கொடுத்தான் என் தம்பி. (இதுக்கு [...]

Read Full Post »