Archive for October, 2006

கார குழம்பும் சர்க்கரைச் சத்தும்.

கார கொழம்போ, புளிப்பு மிட்டாயோ, இல்ல என்ன அறுசுவை விருந்தா இருந்தாலும் வாய் வரைக்கும்தான சுவை. தொண்டைய தாண்டி உள்ள போயிடுச்சுன்னா வெறும் சாப்பாடு. அவ்ளோதான். அது பீட்ஸாவா இருந்தாலும் சரி, பிரியாணியா இருந்தாலும் சரி. நாம சாப்டற சாப்பாடு, வயித்துல சுரக்கற அமிலங்களோட சேர்ந்து, கரைஞ்சு, சிறுகுடலுக்கு போகுது. சிறுகுடல் சாப்பாட்ல இருக்குற சத்துக்கள தனித்தனியா பிரிக்குது. அதுல முக்கியமான சத்துகள், சர்க்கரைச்சத்து (கார்போஹைட்ரேட்). புரதச்சத்து (புரோட்டீன்) கொழுப்புச்சத்து நார் சத்து (ஃபைபர்) அப்புறம் ரொம்ப [...]

Read Full Post »

நாக்குக்கு நான் அடிமை.

நாம சாப்டற சாப்பாடு பத்தியும், அத பண்ண நாம் பயன்படுத்தற பொருட்கள் பத்தியும், நாம சாப்டற சாப்பாடு உடம்புக்குள்ள போயி என்னென்ன செய்யுது-ங்கறத பத்தியும் நான் படிச்சு தெரிஞ்சுகிட்டத சில பதிவுகளா எழுதலாம் ஆரம்பிக்கறேன். உடல் எடைய பத்தியும், உள்ள போற ஓவர் சாப்பாடு எப்டி இடுப்புல சேர்ந்து மொதல்ல சைக்கிள் டயராகி, மெதுவா பைக் டயராகி, பஸ் டயராகி, அப்புறம் எப்படி ட்ராக்டர் டயராகுது-ன்னும் படிச்சு பதிவலாம்-ன்னு பாக்கறேன். சர்க்கரை நோய் ஏன், எப்டி வருது-ங்கறது [...]

Read Full Post »

தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்க எல்லோருக்கும் என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Read Full Post »

பாவம். கொடூரன். (U)

‘வணக்கம்-ங்க. நல்லா இருக்கீங்களா? ‘ ‘என் பேரு, ஹூவர்.(Hoover)!. நைஸ் டு மீட் யூ!!’ ‘இன்னிக்குதான் நான் விடுதலை அடைஞ்சேன். இவ்ளோ நாளா ஒரு கொடூர முதலாளி கிட்ட மாட்டிக்கிட்டு நான் பட்ட அவஸ்தைகள்ல இருந்தும், கொடுமைகள்ல இருந்தும் இன்னிக்குதான் விடுதலை. அந்த மகிழ்ச்சிய உங்க கிட்ட பகிர்ந்துக்கறதுல ரொம்ப சந்தோஷம்.’ ‘வண்டி வர்றதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. அதுக்குள்ள, என்னோட கதைய சுறுக்கமா சொல்றேன்.’ ‘என்னோட முழுப்பேரு ஹூவர் விண்ட்டணல்.(Hoover Windtunnel). பொறந்த ஊரு, [...]

Read Full Post »

குருஜி.(guruji.com)

ஐ ஐ டி மாணவர்கள் உருவாக்கியிருக்குற தேடுதளம். A nice Indian Search Engine from IITyans. http://www.guruji.com/ கூகுளோட தங்கச்சி மாதிரி இருக்கு. அவங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்.

Read Full Post »

விதை.

‘சன்னதி தெருல ஏதோ கூட்டம் நடக்கப்போறதா பேசிக்கறா, அந்த வழியா போகாத’ ‘வடக்கு வீதி வழியா சுத்தீண்டுபோயி, மேலவாசல் தேரடி வழியா உள்ள போ!!’ ‘பூஜைய முடிச்சுண்டு போன வழியாவே திரும்ப வந்துடு’ ‘வழில யார் என்ன கேட்டாலும் பதில் பேசாத’ ‘யாராவது எதாவது கோஷம் போட்டுண்டு போனான்னா, அந்தப் பக்கம் போகாத, திரும்பி ஆத்துக்கே வந்துடு’ ‘தலைய நன்னா சீவி முடிஞ்சுண்டு, நெத்திக்கு இட்டுண்டு போ!’ ‘போலீஸ்காராள பாத்தா நமஸ்காரம் சொல்லிட்டு போ. அவாள பாத்தா [...]

Read Full Post »

லட்டு பிரசாத யாதவ்.

உலகத்துல மிகப்பெரிய நிறுவனங்கள்ல ஒன்னு நம்ம இந்தியன் ரயில்வேஸ். கிட்டத்தட்ட 64,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தியாவ இருப்புப்பாதைகளால இணைக்கிற இந்த நிறுவனத்துல 16 லட்சம் பேர் வேலை செய்யறாங்க. வருஷத்துக்கு 500 கோடிக்கும் மேல மக்களையும் 35 கோடி டன் சரக்குகளையும் சுமக்குது இந்த இரயில்கள். ஆங்கிலேயர்களால துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தோட வயசு 150-க்கும் மேல. 1851-ல(டிசம்பர் 22, 1851) சரக்கு ரயில்களும் 1853-ல(ஏப்ரல் 16, 1953) பயணிகள் ரயில்களும் ஆரம்பிச்சிருக்காங்க. போக்குவரத்து வசதிதான் ஒரு [...]

Read Full Post »

காந்தி ஜெயந்தி.

போன வாரத்துல ஒரு நாள், தமிழ் சசி அவர்களோட வலைப்பதிவுல, அகிம்சை வழியைப் பின்பற்றி உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த இலங்கைத் தமிழர் திலீபன் அவர்களோட போராட்டத்த பத்தி சொல்லி, அகிம்சை ஒரு உளுத்துப்போன தத்துவம்-ன்னும், இந்தியா விடுதலை அடைஞ்சதுக்கு காந்தியடிகளோட அகிம்சைப் போராட்டத்தைவிட பொருளாதாரம்தான் முக்கிய காரணம் என்பதுபோல ஒரு பதிவைப் படிச்சேன். அகிம்சைப் போராட்டம் இன்றைய சூழல்ல வேலைக்காகாது-ன்னு இவரோட பதிவுல இவர் அடிக்கோடு போட்டு சொல்றாரு. இவரோட பதிவு நெறைய சிந்தனைகள [...]

Read Full Post »