Archive for April, 2008

ப்ராக்டிகல்.

1 ‘ப்ராக்டிக்கலா யோசிச்சுப்பாரு கலை. கல்யாணம் பண்ணிக்காம ஒரு பொண்ணால ஒரு லெவலுக்கு மேல வாழ்க்கை நடத்தறது ரொம்பக் கஷ்டம்’ என்று ஆரம்பித்தாள் சுபா. ‘கல்யாணத்தைத் தவிர வேற ஏதும் பேச மாட்டியா? வீட்லதான் இதையே பேசி தொல்ல பண்றாங்கன்னா நீயுமா?’ கலை என்கிற கலையரசியும் சுபா என்கிற சுபஸ்ரீயும் ஒரு இந்திய நிறுவனத்திற்காக, அமெரிக்காவில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். ஒரே நாளில் வேலையில் சேர்ந்து, ஒரே தொழில்நுட்பத்தில் வேலை செய்து, ஒரே நாளில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா [...]

Read Full Post »

காளை மனம்.

‘குமாரூ, வெளிய களம்பிடாதடா. கொஞ்சம் ரேசன் கடை வரைக்கும் போவணும்டா’ குமாரின் அம்மா கெஞ்சலாக சொன்னாள். ‘ஒனக்கு நேரங்காலமே தெரியாது, வெளில போகும்போதுதான் இங்க போவணும் அங்க போவணும்-ப. நாளைக்கு பாத்துக்கலாம் போ!’ ‘இல்லடா, இன்னிக்கு அரிசி போடறாங்கடா. செத்த போய்ட்டு வந்துருடா!!’ ‘காலைலயே சொல்றதுக்கு என்ன?’ ‘இப்பதாண்டா அப்பா வந்து இருவது ரூவா குடுத்துட்டுப் போனாரு.’ ‘ரேசன் கடை க்யூலல்லாம் போயி நிக்க முடியாதும்மா!! அவரயே போவ சொல்றதுததான?’ கரெக்ட்டா எதிர் வீட்டு சுஜாதா ட்யூஷனுக்கு [...]

Read Full Post »

தூக்கம்.

எனக்கு ஏதோ ப்ராப்ளம்-ன்னு நெனைக்கறேன். என்னவோ ஃபோபியா. தூக்கம் வராத ஃபோபியா. கடந்த ரெண்டு மூனு வாரமா இந்த ஃபோபியா இருக்கு. எப்பவுமே இரவு 12 மணி வரைக்கும் ஏதாவது வேலையிருக்கும். தூங்கறது அதுக்கப்புறம்தான். ஆனா 6 மணி 7 மணி வரைக்கும் நல்லா தூங்குவேன். சில நேரம் லேட் நைட் வரைக்கும் வேலை பார்த்துட்டு தூங்க இன்னும் லேட் ஆகற நாட்கள்ல காலைல 9 மணி வரைக்கும்கூட தூங்குவேன். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ‘தில்லை’ பதிவை [...]

Read Full Post »

தில்லை.

‘பீப் பீப், பீப் பீப், பீப் பீப், பீப் பீப், பீ….ப்’ என்று விசில் ஊதி தினமும் காரை சரியாக பார்க் பண்றதுக்கு உதவி செய்வாரு அந்த அலுவலக செக்யூரிட்டி. காரை சரியா நிறுத்திட்டு வெளியே வரும்போது, நேரா நின்னு சல்யூட் பண்ணி ‘வணக்கம் சார்’-ம்பாரு. பதில் வணக்கம் சொல்லிட்டு அலுவலகம் உள்ளே போவேன். சில மாதங்கள் இது தொடர்ந்தபின்னாடி, வெறும் ‘வணக்கம் சார்’ வளர்ந்து ‘நல்லா இருக்கீங்களா சார்?’, ‘என்னசார் இன்னிக்கு சீக்கிரமே ஆபீஸ் வந்துட்டீங்க?’, [...]

Read Full Post »

திருவிழா.

நம்ம ஊர்கள்ல முக்கியமா கிராமங்கள்ல திருவிழான்னா ஒரே கோலாகலமா இருக்கும். தஞ்சாவூர் மாவட்டத்துல இருக்குற ஒரே முருகன் படை வீடு எங்க ஊர்தான்ங்கறதுனால முருகன் திருவிழாக்கள்ல கூட்டம் அலைமோதும். ஒவ்வொரு மாசமும் கார்த்திகைக்கு நெறைய கூட்டம் வரும். திருக்கார்த்திகைக்கு கூட்டம் பல மடங்கு அதிகமா வரும். சூர சம்ஹாரம், பங்குனி உத்திரம், சித்திரைத் தேர், ஆடிப்பெருக்கு மாதிரி நாட்கள்லயும் நல்ல கூட்டமா இருக்கும். இந்தத் திருவிழாக்களுக்கும் மக்களோட வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கு-ன்னு சொல்லுவாங்க. எப்டின்னா, நாத்து நட்டு [...]

Read Full Post »

இ.கொ.வ.

“மொதல்ல காலைல வீட்டு வாசல்ல வர்ற வண்டிலயே காய்கறி வாங்கறதை நிறுத்துங்க. பக்கத்து தெருல ஒரு பெரிய காய்கறி கடை இருக்கு. தினமும் காலைல 7 மணிக்குள்ள போனா எல்லா காய்கறியும் ஃப்ரெஷ்ஷாவே கெடைக்குது. அங்கே போயி வாங்கினா என்ன? நாளைல இருந்து தினமும் அங்க போய் வாங்கிட்டு வாங்க! நடந்து போங்க!!” மருமகள் சொல்லிக்கொண்டிருந்தாள். “ஆமாம்மா, நாளைல இருந்து அங்கேயே வாங்கிட்டு வந்துடுங்கம்மா”. மகனும் ஆமோதித்துக்கொண்டிருந்தான். “நாளைல இருந்து காலைல காஃபியை நிறுத்தப்போறேன். கஞ்சி போட்டுத் [...]

Read Full Post »