நம்பிக்கையில்லாத் தீர்மானம்.

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைஞ்சுடுச்சு. காங்கிரஸ் 275 வாக்குகள் ‘வாங்கி’ (:))வெற்றியடைஞ்சிருக்காங்க. அரசுக்கு எதிரான வாக்குகள் 256. நம்ம நாட்டுக்கு மின்சார உற்பத்தி ஒரு பெரிய தேவை. இன்னும் வரப்போற வருடங்கள்ல மின்சாரத்தோட தேவை இன்னும் பல மடங்கு அதிகமாகப்போகுது. அணு மின் உற்பத்திங்கறது ரொம்ப அவசியமான ஒன்னுதான். அதுக்காக அமெரிக்காவோட ஒப்பந்தம் வெச்சுக்கறது தேவைதான்னுதான் எனக்கும் படுது. மக்களவைல நடந்த விவாதத்தை டிடில நேரடி ஒலிபரப்பு செஞ்சாங்க. ப.சிதம்பரம் பொருமையா விளக்கம் கொடுத்துகிட்டு இருந்தாரு. [...]

Read Full Post »