ஞாயிறு மாலைகள்.

பல மருத்துவ சின்ரோம்கள் மாதிரி ஞாயிறு மாலை சின்ரோம்னு ஒன்னு இருக்கறதாகத்தான் தோனுது. அப்படி ஒரு வெறுமை ஞாயிறு மாலைகள்ல சில நேரம் இருக்கும். அதுவும் தனியா இருக்கும்போது அதிகமாயிருக்குமோ என்னவோ. இன்னிக்கு மாலைல அப்படி இருக்கும்போது அதுக்கு என்னதான் காரணமா இருக்கும்-னு யோசிக்கறேன். அடுத்தநாள் காலைல அலுவலகம் போகணுமே-ங்கற கவலையா? வீட்டையும் உறவுகளையும் விட்டு வெகுதூரம் வந்திருக்கோமே-ங்கற உணர்வா? சனி ஞாயிற்றுக்கிழமைகள்ல கடை கடையா ஏறி அலைஞ்ச களைப்பா? மனதளவுல மட்டும் இல்லை. உடலளவுலையும், தலைக்குள்ள [...]

Read Full Post »