இது முதன் முதலா வரும் பாட்டு…

நாம் அமெரிக்கால இருந்த காலங்கள்ல ரொம்பவே மிஸ் பண்ணினது சென்னை டிசம்பர் சீசனை. எனக்குத் தெரிஞ்சவங்க யாரவது கச்சேரிக்குப் போய்ட்டு வந்தா அவங்களைத் தொலைபேசில கூப்டு, ‘என்னென்ன கீர்த்தனைகள் பாடினாங்க, புதுசா என்ன பாடினாங்க, எந்த ராகம் மெயின், எது சப் மெயின், ராகம் தானம் பல்லவியா, துக்கடா.. தில்லானா..’-னு கேள்வியா கேட்டுத் தொளைப்பேன். ஜெயா டிவி-ல ‘மார்கழி மகா உற்சவம்’ ஒளிபரப்ப ஆரம்பிச்சப்புறம், டிசம்பர் சீசன் சென்னையைத் தாண்டி தமிழ்நாடு முழுக்க பரவின மாதிரி இருந்துச்சு. [...]

Read Full Post »