இவங்களைத் தெரியுமா? – டாக்டர் ஆலினால்.

இவங்க MBBS, MD, BDS இதுமாதிரி எதுவும் படிக்காத டாக்டர்கள். இதெல்லாம் படிச்சிருந்தாதான் டாக்டரா ஆகமுடியுமா என்ன?
காயம் பட்டா கழுவி சுத்தம் பண்ணணும், இரும்புக் காயம்-ன்னா Anti spetic போடணும், டெட்டால் போடணும்-ங்கற முதலுதவிகள் செய்யத்தெரிஞ்சிருந்தா கொஞ்சம் டாக்டர். ஒரிஜினல் டாக்டர்கள் எழுதற மருந்துகளோட பேரு புரிஞ்சுதுன்னா பாதி டாக்டர். எந்த வலிக்கு என்ன மாத்திரை எழுதறார்ன்னு ஞாபகம் வெச்சுக்க முடிஞ்சா முக்கா டாக்டர். இவங்களே மருந்து சொல்லி நாலு பேரு குணமாயிட்டா (எத்தனபேரு ‘குணா’ வானாலும் பரவால்ல) முழு டாக்டர்.

‘தலவலிக்குதா, மைக்ரேனா இருக்கும். பார்மஸில போயி ‘**##**’-ன்னு கேளு. ரெண்டு மாத்தர வாங்கி போட்டுட்டு நல்லா தூங்கு சரியாயிடும்’
‘கொழந்தைக்கு வயிறுவலியா?, ‘**$$’ மாத்திரை ரெண்டும், ‘@@##&&’ மாத்திரை ரெண்டும் வாங்கி கொடு’.

இங்லீஸ் மாத்திரைங்க ‘உட்வர்ட்ஸ்’ க்ரைப் வாட்டர் நெலமைக்கு வந்துடுச்சு. ‘நீ கொழந்தையா இருக்கச்சே அதான் கொடுத்தேன்’ன்னு மட்டும்தான் சொல்லல.

‘ப்ரக்ணென்ட்டா இருக்கியா?? ‘அத’ சாப்டாத, ‘இத’ சாப்டாத, வாந்தி வரும், மயக்கம் வரும், அப்டியாகும், இப்டியாகும்’. இது ரெண்டு கொழந்தைகளுக்கு அம்மாவான ஆலினால் அக்காக்கள்.
‘ஒவ்வொரு ப்ரெக்ணன்ஸியும் ஒவ்வொரு மாதிரி-க்கா’-ன்னு இந்த அக்காக்கள்ட சொல்ல முடியாது!!

‘எனக்கு BP ஏறியிருக்கா டாக்டர்?? ஓகேவா இருக்கா!! எதுக்கும் நாளைக்கு வந்து ஒரு தடவ பாத்துக்கவா டாக்டர்.’ தனக்கு BP ஏறியிருக்குமோன்னு நெனைச்சு நெனைச்சே இந்த ஆலினால்களுக்கு BP ஏறிடும்.

சில ஆலினால்கள் டாக்டர்ட்ட போவாங்க. போயி, ‘டாக்டர் என் கொழந்தைக்கு லேசா ஃபீவர் மாதிரி இருக்கு. ‘**@@’ Tablet கொடுத்தேன். கொறையல. ‘&&$$’ கொடுத்தேன். அப்பவும் கொறையல. ரெண்டு ‘@#$&’ Tablet கொடுக்கலாமா டாக்டர்? அப்படியே, ஒரு ‘!!**’ injection போட்டுடுங்க டாக்டர். எவ்ளோ டாக்டர் ஃபீஸ்?’-ன்னு கேட்டு 200 ரூபா கொடுத்துட்டு போவாங்க.
இந்த மருந்து பெயர்கள்லாம் எனக்குத் தெரியும்-ன்னு காட்டிக்கறாங்களா? கொழந்தைமேல இருக்கற அக்கரைய காட்றாங்களா?? அவங்களோட ஞாபக சக்திய டெஸ்ட் பண்ணிக்கறாங்களா? டாக்டர் கிட்ட இப்டியெல்லாம் பேசறது பெருமையா?? இல்ல வேற ஏதாவது காரணம் இருக்குமா? ஒன்னும் புரியல!?!?.