இவங்களைத் தெரியுமா? – இன்ஃபீரியர் அந்நியன்.

நம்மள சுத்தி இருக்கறவங்கள்ல நெறைய பேருக்கு இந்த இன்ஃபீரியர் குணம் இருக்கு. நெறைய பேர்ட்ட இந்த இன்ஃபீரியர் குணம் ஒரு அந்நியன் மாதிரி இருக்கான். அப்பப்போ வந்து போவான். இதுல நெறைய வகைகள் இருக்கறதாதான் தோணுது. எனக்கு தெரிஞ்ச சில வகைகள மட்டும் சொல்றேன்.

இன்ஃபீரியர் அந்நியன். நமக்குள்ளயே இருப்பான். ஒவ்வொரு காரியத்தப் பண்ண முதல் அடி எடுத்து வெக்கறதுக்கு முன்னாடியும், ‘இதெல்லாம் உன்னால முடியுமா? இதுக்கெல்லாம் ரொம்ப தெறம வேணும். நெறைய பணம் வேணும். உன்ட்ட இருக்கா?? நல்லா யோசிச்சுக்கோ!!’ அப்டீம்பான். பயந்துபோயி செலபேரு முதல் அடியே எடுத்து வெக்க மாட்டாங்க. அதையும் மீறி அடியெடுத்துவெச்சு வெற்றியடைறவங்களப் பாத்து பிரம்மிக்கத்தான் முடியுமே தவிர, அவங்களால முதல் அடி எடுத்து வெக்க முடியாது. அந்நியன் அமுக்கிடுவான்.

‘இசைப் பல்கலைக்கழகம் ‘இளையராஜா’ இருக்கும்போது நம்மல்லாம் எந்த மூளை’-ன்னு AR ரகுமானோ, சச்சின் மாதிரி ஒரு பேட்டிங் பல்கலைக்கழகம் இருக்கும்போது நாமெல்லாம் எங்க!!’-ன்னு ஷேவாக்கோ நெனைச்சிருந்தா இந்நேரம் அவங்க இருக்கற எடம் தெரிஞ்சிருக்காது!! இல்லயா??

இதுமாதிரி எதாவது படிக்கும்போது ஒரு வேகம் வர்ற மாதிரி இருக்கும். ஆனா, அடுத்த தடவ ‘முதல் அடி’ எடுத்து வெக்கணும்ன்னு வரும்போது அந்நியன் வந்துடுவான். ஹ்ஹ்ம்ம்ம்ப்ப்ப்ப்! ஒரே அமுக்கு!!

‘நல்லா மார்க் வாங்கறவங்களே சந்தேகம் கேட்காம சும்மா இருக்காங்க? உனக்கென்ன?? இங்லீஷ்ல உன்னால சந்தேகம் கேக்க முடியுமா?? சந்தேகத்த வெளக்கி சொல்ல முடியுமா??’ இது எனக்குள்ள இருந்த அந்நியன் நா காலேஜ்ல படிக்கும்போது கேட்டது. லெக்ச்சரர் கிட்ட கேக்க பயந்துகிட்டு பக்கத்துல ஒக்காந்திருந்த நல்ல மார்க் வாங்கற நண்பன் கிட்ட சந்தேகத்த கேட்டேன். ‘எனக்கும்தான் தெரியல, லெக்ச்சரர் சொல்றது புரியற மாதிரி தலயாட்ல??!! அதுமாதிரி ஆட்டு’ அப்டீன்னு சொன்னான். நான் பேசிட்டு இருக்கறதப் பாத்து லெக்ச்சரரா ‘என்ன’ன்னு கேட்டதுக்கப்புறம் சந்தேகத்த கேட்டேன். முதல் அடி எடுத்து வெச்சதுக்கப்புறம் பாதை ஈசியா இருந்தாகூட முதல் அடில அந்நியன் அமுக்குன அமுக்கு இன்னும் ஞாபகம் இருக்கு!!

இண்டர்வியூக்கு போகும்போது ஒரு அந்நியன் கூடவே வருவான். ‘ஒனக்கு C++ தெரியாதே, அதுல இருந்து கேள்வி கேட்டா என்ன பண்ணுவ? Java-ல இருந்து கேட்டா என்ன பண்ணுவ?’ இப்டி எது தெரியாதோ அத ஞாபகப்படுத்திட்டே இருப்பான். கூட்டமா நெறைய பேர் இண்டர்வியூக்கு வந்திருக்கறத பாத்தவொடனே, ‘இவ்ளோ பேர்ல உன்ன எங்க செலக்ட் பண்ணப்போறாங்க!!’. அப்டீம்பான்.
‘நமக்கு தெரிஞ்சத மட்டும் சொல்லப்போறோம். அவங்களுக்கு தேவை இருந்தா செலக்ட் பண்ணப்போறாங்க. இல்லன்னா வேற எடம் பாக்க வேண்டியதுதான்’-ன்னு சொல்லி அந்நியன அமுக்கப் பாக்கலாம்!!

‘என் பையன் Sceince-ல கொஞ்சம் வீக்கு. அவனுக்கு கணக்கு சரியா வராது. கேம்ஸ்லல்லாம் அவனுக்கு இண்ட்ரெஸ்டே இல்ல’ இப்டியெல்லாம் அவங்க பையனுக்கு முன்னாடியே சொல்லி அவனுக்குள்ளயும் ஒரு இன்ஃபீரியர் அந்நியன வளக்கற அப்பாக்களும் இருக்காங்க. செல நேரங்கள்ல பையனுக்கு நல்லது பண்றதா நெனைச்சு இப்படி பேசறாங்க.
இன்னொரு வகை இருக்கு. ‘பக்கத்து வீட்டு பாலாஜியப் பாரு, எதிர்த்த வீட்டு இளங்கோவப் பாரு, அவங்கள்லாம் எப்டி படிக்கறாங்க. எவ்ளோ மார்க் வாங்கறாங்க. நீயும்தான் இருக்கியே!!’ இன்ஃபீரியர் அந்நியனுக்கு விருந்து வெச்சு வளப்பாங்க.
நெறைய நடக்கற இன்னொன்னு, ‘உன் தம்பிய பாருடா, அண்ணனப் பாருடா. அவங்கள்லாம் எப்டி இருக்காங்க. நீ மட்டும் ஏன்டா இப்டியிருக்க!!’ இன்ஃபீரியர் அந்நியன வளக்கற ஈசியான வழிகள்ல இதுவும் ஒன்னு.

இன்னும் இருக்கு..