இவங்களைத் தெரியுமா? – இன்ஃபீரியர் அந்நியன். 2.

கணவன் மனைவிக்குள்ளயும், நண்பர்களுக்குள்ளயும் இந்த இன்ஃபீரியர் அந்நியன் வந்துட்டா நிம்மதிய வெரட்டிடுவான்.

‘உன்னவிட உன் மனைவி ரொம்ப கலரா, அழகா இருக்கா’
‘உன் மனைவியோட கம்ப்பேர் பண்ணிப் பாத்தா, நீ ரொம்ப அழகு கம்மி, கலர் கம்மி. அவ ஃப்ரெண்ஸ்ஸல்லாம் பாரு எவ்ளோ பார்ஷ்ஷா இருக்காங்க’
‘நீயும் உன் மனைவியும் வெளில போனா தி.மு.க கட்சி ஊர்வலம் மாதிரி இருக்கு. நீ நல்ல கருப்பு, அவ சூப்பர் சேப்பு.’

இப்டின்னெல்லாம் கணவக்குள்ள இருக்கற இன்ஃபீரியர் அந்நியன் சொன்னான்-னு வெச்சுக்கோங்க, மனைவி யார்ட்ட பேசினாலும் அவனுக்கு சந்தேகமா வரும். மனைவி எது செஞ்சாலும் கோவமா வரும். மனைவி அவன் கிட்ட அன்பா பேசும்போதுகூட, ‘இதே மாதிரிதான் காய்கறிகாரன்கிட்டயும் பேசுவாளோ!!’ காய்கறிகாரன்கிட்ட பேசிட்டு இருந்தத ஞாபகப்படுத்துவான், அந்நியன். மனைவி ஒரு நல்ல விருந்து வெச்சாலும், உருளைக்கிழங்கு கறி-ல உப்பு அதிகமா இருந்தது மட்டும்தான் கணவனுக்கு ஞாபகத்துல இருக்குமே தவிர மத்ததெல்லாம் நல்லா இருந்தது ஞாபகத்துலயே இருக்காது.

அதே மாதிரிதான் மனைவிக்கும்.

‘அவகிட்ட என்ன அப்படி சிரிச்சு சிரிச்சு பேச்சு?.
‘நடுல என்னப் பாத்துவேற ஏதோ சொல்லி சிரிச்சாலே, என்ன சொன்னா??’
‘ஆபீஸ் பார்ட்டிக்கு அவ போட்டுட்டு வந்த ட்ரெஸ்-ம், அவ மேக்கப்பும், சகிக்கல. ஆனா அவகிட்டதான் நீங்க அடிக்கடி போயி பேசறீங்க.’
‘அவளும் மத்தவங்ககூடல்லாம் பேசாம உங்ககூட மட்டும் வந்து வந்து பேசறா’

இப்டியெல்லாம் பேசறதுக்கு மூல காரணமா ஒரு இன்ஃபீரியர் அந்நியன் உள்ள உக்காந்திருப்பான். அவன கண்டுபிடிச்சி வெரட்டிட்டா ‘நிம்மதி’ திரும்ப வந்துடுவான்.

அவங்களுக்குள்ள இன்ஃபீரியர் அந்நியன் இருக்கறது அவங்களுக்கே தெரியலன்னாலும், கணவர்ட்ட இருக்கற அந்நியன மனைவியும், மனைவிட்ட இருக்கற அந்நியன கணவனும் கண்டுபிடிச்சு வெரட்டிட்டு ‘நிம்மதி’ய திரும்ப கூட்டிட்டு வந்துட முடியும்.

நண்பர்கள், சொந்தக்காரங்க-ன்னு யார்கிட்ட இந்த இன்ஃபீரியர் அந்நியன் இருந்தாலும், அவங்க பேச்சுல, நடவடிக்கைகள்ல எதாவது ‘க்ளூ’ இருக்கும். அத கவனிச்சு, அந்நியன வெரட்டிட்டா உங்களுக்கும் நிம்மதி, அவங்களுக்கும் நிம்மதி.

அதுனால ‘நிம்மதி’ இப்போ ‘உங்கள் ச்சாய்ஸ்’.