இவங்களைத் தெரியுமா? – இன்ஃபீரியர் அந்நியன். 3.

கணவன் மனைவி சொத்தக்காரங்கள்ட இருக்கற இன்ஃபீரியர் அந்நியன எப்டியெல்லாம் கண்டுபிடிக்கலாம், வெரட்டலாம்-னு பாக்கறதுக்கு முன்னாடி இன்னும் எங்கல்லாம் இந்த அந்நியன் இருக்கான்னு பாத்துடுவோம்.

மாணவர்கள் கிட்ட.
மாணவர்கள்கிட்ட இருக்கற அந்நியன கண்டுபிடிச்சு வெரட்றது அவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் மட்டும் இல்ல. அந்த நாட்டுக்கே நல்ல விளைவுகள கொடுக்க வாய்ப்பு இருக்கு.

‘சத்தம் போட்டுப் படிக்காதடா. படிக்கறதுல தப்பு இருந்தா எல்லாருக்கும் தெரிஞ்சிடும்ல்ல!!’
‘மொதல் வரிசைலப் போயி ஒக்கார்றியே, வாத்தியார் ஏதாவது கேட்டா பதில் சொல்லுவியா?’
‘வாத்தியார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிடாத. நீ சொல்றது தப்பா இருந்தா கேர்ள்ஸ்-லாம் சிரிப்பாங்க!! அவமானமாய்டும்’
‘கட்டுரைப் போட்டியா? நீயா?? ஒனக்கே சிரிப்பா வரல???’
‘பாட்டுப் போட்டிக்கும் ஒனக்கும் என்ன சம்மந்தம்? சொரம் பாடத்தெரியுமா?’

இதெல்லாம் இன்ஃபீரியர் அந்நியனோட சாம்பிள் வசனங்கள். மாணவர்கள பாடாப் படுத்தி, ‘ஹார்டா’ அமுக்கற சக்தி அந்நியனுக்கு இருக்கு.

அதுக்கு என்ன பண்றது?
கண்டிப்பா அவங்ககிட்ட இருக்குற அந்நியன அவங்களாலயே அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. வெரட்டவும் முடியாது. அது அவங்க அம்மா அப்பாவாலயும், ஆசிரியர்களாலயும்தான் முடியும்.
இந்த அந்நியன ஒரு தடவ வெரட்டிட்டா அப்புறம் வரவே மாட்டான்னெல்லாம் இல்ல. எப்பவும் கவனிச்சுகிட்டே இருக்கணும். பிள்ளங்ககிட்ட இருக்கற மாற்றங்கள நல்லா கவனிக்கணும். எதாவது புதுசா இருந்தா கொஞ்சம் அதுக்கு அதிக அட்டென்ஷன் கொடுக்கணும்.

உதாரணமா ஒரு பையன், ஒருநாள் அவங்க அப்பாட்ட போயி,

‘அப்பா!! இன்னிக்கு ஸ்கூல்ல ஒருத்தன் க்ளாஸ கட் அடிச்சுட்டு சினிமாக்கு போய்ட்டாம்பா!!’

அப்படின்னு சொல்றான்னு வெச்சுக்கோங்க. அதுமூலமா அவன் அவங்க அப்பாக்கு எதாவது ‘மெஸேஜ்’ சொல்றான்னு நெனைக்கறீங்களா?!?

‘இல்ல’ன்னு சொன்னவங்க கைய மடக்கி தலைல ஒரு ‘கொட்டு’ கொட்டிக்கோங்க.

* ‘அப்பா!! இன்னிக்கு ஸ்கூல்ல ஒருத்தன் ….”

I. ஸ்கூல்ல நடந்த ஏதோ ஒன்னப் பத்தி (அப்பாட்ட) பேச நெனைக்கறான்.

** ‘……ஒருத்தன் க்ளாஸ கட் அடிச்சுட்டு சினிமாக்கு போய்ட்டாம்பா!!’

II. ‘ஒரு புது சினிமா வந்திருக்கு, கூடப் படிக்கறவங்கள்லாம் பாக்கறாங்க’-ன்னு ஞாபகப்படுத்தறான்.
முக்கியமா, III. கூடப் படிக்கறவங்க பண்ற தப்புகளுக்கு அப்பா எப்படி ரியாக்ட் பண்றார். அவன திட்றாரா, வாத்தியார்கிட்ட சொல்ல சொல்றாரா, அவரே வந்து வாத்தியார்ட சொல்றேங்கறாரா, இல்ல கண்டுக்காம இருக்காரா-ன்னு டெஸ்ட் வைக்கறான்.
IV. ‘நாளைக்கு அவனே க்ளாஸ கட் அடிச்சுட்டு சினிமாக்கு போனா என்ன சொல்வார்ன்னு பாக்கறான்.

இதுக்கு அப்பாவோட ரியாக்சன் எல்லாத்தையும் அந்நியன் நோட் பண்ணிவெச்சுப்பான். சரியான நேரத்துல பயன்படுத்துவான்.

உதாரணமா,
‘சினிமாக்கு போனானா?, யார் அந்தப் பையன், அவங்க அப்பாயாரு? எங்க இருக்காங்க? வாத்தியார்கிட்ட சொன்னியா?’-ன்னெல்லாம் அப்பா கேட்டார்-ன்னா, ‘கட் அடிச்சுட்டு சினிமாக்கு போறது தப்பு, அப்பா சீரியஸா எடுத்துக்கறாரு.’-ன்னு அந்நியன் நோட் பண்ணிப்பான்.

அது இல்லாம, ‘போடா அந்தப் பக்கம், நானே ஆயிரத்தெட்டு டென்ஷன்ல இருக்கேன். இப்போ வந்து அவன் அதப் பண்ணிட்டான், இவன் இதப் பண்ணிட்டான்னு கம்ப்ளைண்ட் பண்ணிகிட்டு!!, போ.., போ…., போடா…..’-ன்னு ஜெயம் சதா ஸ்டைல்ல கைய தூக்கிகிட்டு சொல்லிட்டார்ன்னா அதையும் அந்நியன் நோட் பண்ணிவெச்சுப்பான்.

நேரம் வரும்போது பயன்படுத்திடுவான்.
‘மதியம் க்ளாஸுக்குப் போனின்னா, வாத்தியார் எல்லார் முன்னாடியும் நிக்கவெச்சு கேள்வி கேப்பாரு, டெஸ்ட் வைப்பாரு. கட் அடிச்சுட்டு சினிமாக்குப் போற பசங்களோட சேந்து நீயும் மேட்னிக்குப் போய்டு. அப்பாவுக்கும் தெரியப்போறதில்ல. அவருக்கு ஏற்கனவே ஆயிரத்தெட்டு டென்ஷன்.’ -ன்னு ‘அட்வைஸ்’ பண்ணி சினிமாக்கு அனுப்பற வேலைய கச்சிதமா செய்வான் நம்ம இன்ஃபீரியர் அந்நியன்.

இப்படிப்பட்ட இன்ஃபீரியர் அந்நியன்கள் இல்லாத மாணவர்களால அந்த நாட்டுக்கே உயர்வுதான!!