இவங்களைத் தெரியுமா? – இன்ஃபீரியர் அந்நியன். 4.

இன்ஃபீரியர் அந்நியனும் இன்செக்யூர் (insecure) அந்நியனும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மாதிரி. மாமியார், மருமகள், நாத்தனார் இவங்களுக்குள்ளல்லாம் வர்ற பெரும்பாலான ப்ரச்சனைகள்ல (அ) சண்டைகள்ல இந்த அந்நியன்களோட பங்கு நெறைய இருக்கும்.

‘கல்யாணம் ஆய்டுச்சு, இனிமே உன் பையன் உன்ன எங்க கண்டுக்கப் போறான்’
‘கல்யாணம் ஆற வரைக்கும்தான் உன் பையன் நீ சொல்றத கேப்பான். ஆயிட்டா அவ்ளோதான்.’
‘உன் மருமக வெவரமானவளாதான் இருக்கா. உன் பையன உன்ட பேச கூட உடமாட்டா!!’

இப்டியெல்லாம் சொல்லி மாமியார் வயித்துல புளிய கறைப்பாங்க.

‘தங்கச்சி, தங்கச்சி-ன்னு உறுகறதெல்லாம் கல்யாணம் வரைக்கும்தான். அப்புறம் திரும்பிக்கூட பாக்கமாட்டான்’
‘இந்த ‘அக்கா’ பாசமெல்லாம் கல்யாணம் ஆனொன்ன, ‘போயோ போச்சு, போயுந்தி, இட்ஸ் கான்’

இப்டியெல்லாம் சொல்லி அக்கா தங்கச்சிங்க வயித்துல மிக்ஸிய ஓட்றதும் அவங்கதான்.

இதுனால மருமகள்மேல ஒருவிதமான நம்பிக்கையின்மைய (அ) அவநம்பிக்கைய ஏற்படுத்திடறாங்க இந்த அந்நியன்கள். காதல் திருமணங்கள்ல இது இன்னும் மோசமா இருக்கலாம்.

அதுனால மருமக பண்ற சின்னச் சின்ன தவறுகளக்கூட பெருசா தெரியும். சாம்பார்ல உப்பு அதிகமா போட்டதும், அடுப்புல ரசம் கொதிக்கும்போது அவங்க அம்மாகூட போன்ல பேசினதும் பெரிய பெரிய தப்புகளா தெரியும். உள்ளுக்குள்ள கோவமா வரும்

இதுக்கெல்லாம் மூலகாரணம் அந்நியன்கள்தான்-னு அவங்களுக்குத் தெரியறதில்ல.

மனைவிகள் வயித்துல இந்த அந்நியன்கள் பெரிய க்ரைண்டரையே ஓட்டுவாங்க.

‘உன் புருஷன், அவனோட அம்மா, அக்கா, தங்கச்சிமேல இருக்கற பாசத்துல ஒன்ன கண்டுக்காம விட்றுவான். ஜாக்றத!!’
‘தங்கச்சிக்கு தலவலின்னா இப்டி துடிக்கறானே, உனக்கு போனவாரம் வயித்துவலி வந்தப்போ மட்டும் எங்க போனான்??’

கணவனுக்கு பிடித்த மத்தவங்களையும் அந்நியன்கள் விட்டுவைக்க மாட்டாங்க.

‘A R ரகுமான் பாட்ட உருகி உருகி கேக்கறான். நீ படற ((அ) பாடற) பாட்டப் பத்தி எதாவது கேக்கறானா!!’
‘உன் புருஷனோட ஃப்ரெண்ஸ்-க்கு ரொம்ப எடம் கொடுக்காத, ஜாக்ரதையா இரு. அவன் தலைல மொளகா அறைக்கறது இல்லாம உன் தலைலயும் மொளகா அறைச்சுடுவாங்க.’

இதெல்லாம் சாம்பிள் அந்நியன் வசனங்கள்.

‘ஃப்ரெண்டுக்கு தலவலின்னா உன் புருஷன் ஆடறானே, உனக்கு தலவலின்னா ஆடுவானா?’

அப்டீன்னு அந்நியன் கேட்டத டெஸ்ட் பண்றதுக்காகவே மனைவிகளுக்கு தலவலி வரும்.

‘யார் முக்கியம், நீயா? இல்ல அவன் ஃப்ரெண்டா’

-ன்னு அந்நியன் கேட்ட கேள்விக்கு பதில் தெரிஞ்சுக்கறதுக்காகவே ஃப்ரெண்ட் வீட்ல ஒரு விஷெஷம் நடக்கும்போது மனைவிக்கு வயித்துவலி வரும்.
‘நா வரல டியர், நீங்க போய்ட்டு வாங்க’ அப்டீம்பாங்க.

புருஷனுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் (தோழிகள்) இருந்துட்டா அந்நியனோட ‘டெஸ்ட்’கள் இன்னும் அதிகமா இருக்கலாம்.

ஒரு ஆளு ஒரு அந்நியன சமாளிக்கறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவி இவங்க அத்தனபேரோட அந்நியன்களையும் சமாளிக்க வேண்டிய அவசியம் வந்துட்டா என்ன ஆகும்!!