செப்டம்பர் 11. 2

மகாகவி பாரதியாரோட நினைவுநாள். அவரோட நினைவா அவரோட பாடல்கள்ல ஒன்னு.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திடவேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
மண் பயனுறவேண்டும்
வானகமிங்கு தென்படவேண்டும்
உண்மை நின்றிடவேண்டும்
ஒம் ஒம் ஒம் ஓம்.

ம்ம்ம்.. தெரிஞ்ச பாட்டுதான். சிந்து பைரவில சிவக்குமார் பாடுவாரே.. அப்டீங்கறத தாண்டி, பாரதி கேட்டதுக்கெல்லாம் பின்னாடி இருக்கற அவரோட ஆழமான சிந்தனையப் பத்தி யோசிச்சுக்கிட்டே அவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.