சுஜாதா & பா. ராகவன்.

நேத்து, ஞாயித்துக் கிழமைல, மனைவிகூட ஷாப்பிங் போகாம, திட்டு வாங்கிகிட்டு, வீட்லயே உக்காந்து, வலைப்பதிவுகள படிச்சுகிட்டு இருந்தேன். (ஷாப்பிங் போய்ட்டு வந்து ‘என்ன பண்ணீங்க?’-ன்னு கேட்ட மனைவிட்ட, ‘வாத்து’ படத்துக்கு ஓட்டு போட்டேன்னு சொல்லல!! :) )

வலைப்பதிவுகள்ல, சுஜாதா மேலயும், பா. ராகவன் மேலயும் நெறைய சர்ச்சைகள் ஏற்பட்ருக்கறத படிச்சேன். என்னோட பார்வைப் புள்ளிய (Point of view-வ) சொல்லலாமேன்னு இத எழுதறேன்.

சுஜாதா எழுதின ‘பதிமூவாயிரம் வைணவர்கள்’ விஷயமும், பா. ராகவனோட ‘ஆப்பிரிக்கா’ மற்றும் ‘கட்ரீனா’ கட்டுரைகளும் வலைப்பதிவர்கள் கிட்ட பெரும் எதிர்ப்பு அலைய உண்டாக்கியிருக்கறத படிச்சேன்.
ஆனா, இந்தக் கட்டுரைகள் முட்டாள்தனமானவை, அறிவற்ற கட்டுரைகள்-ன்னெல்லாம் வலைப்பதிவர்கள் எழுதியிருந்ததப் படிக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அவங்கல்லாம் நடந்த விஷயங்கள அவங்க பார்வைல எப்படிப் பாக்கறாங்களோ, அப்டி எழுதறாங்க. அதுல இருந்து எது உண்மை, எது இல்லன்னெல்லாம் பிரிச்சு தேவையான விஷயங்கள எடுத்துக்க வேண்டியது நம்ம கடமை இல்லயா? சில விஷயங்களோட முக்கியத்துவத்த சொல்றதுக்காக, அவைகள மிகைப்படுத்தி கூட எழுதியிருக்கலாம். அதுல இருக்கற உண்மைகள மட்டும் எடுத்துக்கறது நம்ம கடமை. அவங்க எழுதியிருக்கறதுல தவறுகள் இருந்தா சுட்டிக் காட்றதும் நம்ம வேலதான். அதுக்காக, ‘முட்டாள்’ தனமானது மாதிரி பெரிய வார்த்தைகள்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல??

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
உண்மையான விஷங்கள தேடி தெரிஞ்சுக்க வேண்டியது நம்ம அறிவு இல்லயா?!?

பா. ராகவன் எழுதின ‘பாக் ஒரு புதிரின் சரிதம்’ புத்தகத்துலயும், ‘நிலமெல்லாம் ரத்தம்’ தொடர்லயும் அவர் சொல்ற விஷயங்கள்ல சில ‘பயஸ்ட்’டா இருக்கற மாதிரிதான் எனக்கும் இருந்துது. ஆனாலும் அதுல இருந்து நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களும் நெறைய இருந்துச்சு. அதே மாதிரி சுஜாதாவோட ‘கற்றதும் பெற்றதும்’, ‘ஏன் எதற்கு எப்படி’ இதெலல்லாம் இருந்து தெரிஞ்சுகிட்ட விஷயங்கள் நெறைய.

எழுத்தாளர்கள் எழுதற எழுத்துமேல எதிர்ப்பு அலைகள் வர்றத நான் வேண்டாம்-ன்னு சொல்லல. ஆனா, எழுத்தாளர்கள் மேலயே ஒரு ‘வெறுப்பு அலை’ வேண்டாம்-ன்னுதான் சொல்றேன்.

கொன்றல்ல இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

இந்த எழுத்தாளர்கள் எழுதிய ‘நன்று’, ஒன்று இல்ல, நெறையவே இருக்கறதால, எனக்கு அவங்க எழுதினதுல எதிர்ப்பு அலைகள் எதுவும் இல்ல.

வலைப்பதிவுகள்ல இருந்து சுடப்பட்ட ஒரு ஒவியத்த பா. ராகவனோட புத்தகத்துல அட்டைப் படமா போட்டது இன்னொரு சர்ச்சை. அது தப்புன்னுதான் நானும் நெனைக்கறேன். ப்ராப்ளத்துல ஃபோக்கஸ் பண்ணாம சொல்யூஷன்ல ஃபோக்கஸ் பண்ணினா நல்லாயிருக்கும்னு நெனைக்கறேன்.

அதுக்கு இந்த ‘ஐடியா மணி’யின் ஐந்து யோசனைகள்.
5. இனிமே புதுசா போடற ப்ரிண்ட்டுகளுக்கு வேற படத்த பயன்படுத்த சொல்லலாம்.
4. அதே படத்த பயன்படுத்தினா, ஓவியருக்கு க்ரெடிட்டும், அவர் க்ரெடிட் கார்டுக்கு ப்பேமெண்ட்டும் கொடுக்க சொல்லலாம்.
3. இனிமே வலைப்பதிவுகள்ல இருந்து சுடாதீங்கன்னு வற்புறுத்தலாம்.
2. வலைப்பதிவுகள்ல ‘சுட்ட’ புண் ஆறாதுன்னு எடுத்துரைக்கலாம்.
1. சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா-ன்னு ஔவையார கேட்ட முருகன்கிட்ட, சுட்ட படத்துக்கு என்ன பண்றது-ன்னு கேக்கலாம்!!