இன்ஃபீரியன் அந்நியன் 4 a.

இன்ஃபீரியன் அந்நியன் 4′ ன் தொடர்ச்சி.

இன்ஃபீரியர் மற்றும் இன்செக்யூர் அந்நியன்கள அடையாளம் கண்டுபிடிக்கறதுதான் கஷ்டம். வெரட்றது அவ்ளோ கஷ்டம் இல்லன்னுதான் தோனுது.
அந்நியன்கள இப்டி வெரட்டணும், அப்டி வெரட்டணும்னு நெறைய அட்வஸ் பண்ணி நானும் அட்வைஸ் அஞ்சுகமா ஆக விரும்பல. அதே மாதிரி அந்நியன்கள வெரட்றதுக்கு இதெல்லாம் மட்டும்தான் வழிகள்-னும் இல்ல. ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொருமாதிரி அந்நியன்கள் இருக்கலாம். அத வெரட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்த கையாளலாம். எனக்கு தெரிஞ்ச செல வழிகள மட்டும் இங்க சொல்றேன். உங்களுக்குத் தெரிஞ்ச, நீங்க கையாண்ட வழிகள கமெண்ட்டுங்க.

அம்மாக்கள், அக்காக்கள், தங்கைகளுக்கு: உங்க மகனுக்கோ, சகோதரனுக்கோ உங்ககூட இருக்கற உறவு நீங்களோ அவனோ தேர்ந்தெடுத்தது இல்ல. இறைவன் கொடுத்தது. கல்யாணம் வரைக்கும் உங்கமேல அன்பா இருந்த ஒருத்தன் ஒரு புது உறவால மாறிடுவான்னு உங்க இன்ஃபீரியர் (அ) இன்செக்யூர் அந்நியன் சொன்னா கேக்காதீங்க. நீங்க உள்பட ஒவ்வொரு பொண்ணும் அவளோட கணவன் அவ மேல அன்பு செலுத்தணும்னுதான் விரும்புவாங்கன்னு புரிஞ்சுக்கோங்க. உங்க மகன் உங்க மருமகளோட சந்தோஷமா இருந்தாதான், அவனால வேற யார் மேலயும் அன்பு செலுத்தமுடியும்-ங்கறத உணர்ந்து நடந்துகிட்டீங்கன்னா அந்நியன் உங்கள அண்டவே மாட்டான்.

மனைவிகளுக்கு: கணவன் அவனோட அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள் மேலல்லாம் அன்பு செலுத்தறதுனால உங்கமேல வெச்சிருக்கற அன்பு கொறைஞ்சுடும்-னு அந்நியன் சொன்னா கேக்காதீங்க. கணவன் அன்பு செலுத்தறவங்க மேல நீங்களும் அன்பு செலுத்திப் பாருங்க. உங்க மேல இருக்கற அன்பு பல மடங்கா அதிகமாகறது புரியும். கணவனோட அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, நண்பர்கள் மேலல்லாம் ஒருவிதமான வெறுப்ப ஏற்படுத்தக்கூடிய அந்நியன அடையாளம் கண்டுக்கங்க. கணவன் ஒருநாள் கோவமா பேசினாலும் அன்பு கொறையாதுன்னு முழுமையா நம்புங்க.
கணவன், நண்பர்களா பலபேர தேர்ந்தெடுக்கறான். உற்ற நண்பர்களாகூட சிலபேர் இருப்பாங்க. ஆனா, மனைவியா தேர்ந்தெடுத்தது உங்கள, உங்கள, உங்கள மட்டும்தான். அதுனால, மற்ற நண்பர்கள விடவும் நீங்க ஸ்பெஷல் அப்டீங்கறத முழுமனசோட நம்புங்க.
உங்களோட பேச்சுக்கள், செயல்கள் எல்லாம் உங்களோட முழுமனசோட சொல்றதுதானா செய்யறதுதானா-ன்னு தெரிஞ்சுக்கோங்க. சிந்திக்கற, பேசற, செயல்படற அதிகாரங்கள உங்க அந்நியனுக்கு கொடுக்காதீங்க. எப்போ நீங்க உங்களயே முழுசா நம்ப ஆரம்பிக்கறீங்களோ, அந்நியனோட அதிகாரத்த கொறைச்சுட்டீங்களோ அப்பவே அந்நியன் உங்களவிட்டு ஓட தயாராயிருப்பான்.

கணவன்களுக்கு: குடும்பத்துல ப்ரச்சனை ஏற்படுத்தற இன்ஃபீரியர் அந்நியன்கள வெரட்றது முக்கியமா கணவர்கள்ட்ட தான் இருக்கு. ‘அன்பு’-ங்கறது பேங்க் அக்கவுண்ட் மாதிரி இல்ல. எடுக்க எடுக்க கொறஞ்சுடாது. எடுக்க எடுக்க இன்னும் அதிகமாத்தான் ஆகும்-ங்கறத புரிய வெச்சுட்டாப் போதும். அம்மாக்களுக்கு மகன்கள் எப்போதும்போல பேசினாலே போதும். கல்யாணம் ஆனதுனால அவங்க மேல இருக்கற பாசம் கொறஞ்சுடாதுங்கறத அவங்களுக்கு புரிய வெச்சுட்டாப் போதும். அவங்களோட நலன்கள்ல மகன்கள் அக்கறை காட்டினாலே போதும். அக்கா, தங்கைகளுக்கும் அப்டிதான்.
முக்கியமா, தன்னோட மனைவியோட முக்கியத்துவத்த அம்மா, அக்கா, தங்கைகளுக்கும், அவங்களோட முக்கியத்துவத்த மனைவிகளுக்கும் சமயம் கெடைக்கும்போதெல்லாம் உணர வெக்கறது அவங்களுக்குள்ள அந்நியன் உறுவாகாம இருக்க உதவும்-ன்னு நெனைக்கறேன்.

நெறைய நேரங்கள்ல, எனக்குள்ளயும், என்ன சுத்தி இருக்கறவங்கள்டயும் இருக்கற இன்ஃபீரியர் அந்நியன்கள எப்டி சமாளிக்கறதுன்னு தெரியாம முழிச்சாலும், எனக்குத் தெரிஞ்ச சில அந்நியன்களையும், அத வெரட்ட தோனற சில வழிகளையும் மட்டும் இங்க சொல்லியிருக்கேன். உங்க வாழ்க்கைல இன்னும் பல வழிகள கையாண்டு இந்த அந்நியன்கள வெரட்டியிருக்கலாம். அந்த வழிகள் மத்தவங்களுக்கும் உதவும்ன்னு நெனைச்சீங்கன்னா கமெண்டா எழுதுங்க.

‘இன்ஃபீரியர் அந்நியன் 4′ ஈசியா புரியற மாதிரி இல்ல-ன்னு செலபேர் சொன்னதுனால, போன மாசம் வானொலில கேட்ட, இந்த இன்ஃபீரியர் அந்நியன்கள் பத்தி எழுதத் தூண்டின, ஒரு விஷயத்தப்பத்தி மட்டும் அடுத்த போஸ்ட்ல சொல்லிட்டு அதோட இந்த ‘இன்ஃபீரியர் அந்நியன’ முடிச்சுக்கறேன்.