100 Not out.

‘Stephen Covey’ எழுதிய ’7 Habits of Highly Effective People’ ங்கற புத்தகத்த என்னோட தமிழ் நண்பர்கள் படிக்கறதுக்கு வசதியா ’7 நல்ல பழக்கங்கள்’-ன்னு தமிழ்ல எழுதலாமே-ன்னு ஆரம்பிச்சு, படிக்கற மத்த புத்தகங்கள் பத்தி, பிடித்த திருக்குறள்கள் பத்தியெல்லாம் எழுதி, போன பதிவோட நூறு பதிவுகள் ஆச்சு. நூறு நல்ல விஷயங்கள உங்களோட பகிர்ந்துகிட்ட நிறைவோட, முதல் முதலா சென்சுரி அடிச்சுட்டு, ஹெல்மெட்ட கழட்டிட்டு, வானத்த பாத்து நன்றி சொல்ற கிரிக்கெட் பேட்ஸ்மேன் மாதிரி நானும் நன்றி சொல்லலாமேன்னு இந்தப் பதிவ எழுதறேன்.

தமிழ்ல எழுதறத ரொம்ப சுலபமா ஆக்கின, TSC_Avarangal, TSC_AvarangalFxd, அஞ்சல் மாதிரி தமிழ் (Fonts) எழுத்துறுக்கள் உருவாக்கினவங்க, eKalappai Keyman உருவாக்கினவங்க, http://www.Thamizha.com, http://www.suratha.com, http://www.jaffnalibrary.com இவங்க எல்லோருக்கும் என்னோட முதல் நன்றிகள்.

சுலபமா Blog எழுத உதவுற WordPress-க்கும், சிறப்பா WordPress themes உருவாக்கற http://wpthemes.info -க்கும் என்னோட நன்றிகள்.

என் நண்பர்கள் மட்டுமே படிச்சுட்டு இருந்த என்னோட பதிவுகள மற்ற வலைப்பதிவு நண்பர்களுக்கு அறிமுகம் செஞ்ச தமிழ் மனத்துக்கு என்னோட நன்றிகள்.

நண்பனான என்ன அவங்க வலைப்பதிவு நண்பர்களுக்கு அறிமுகம் செய்யற முத்து மற்றும் ராஜ்-க்கு என்னோட நன்றிகள்.

என்னோட பதிவுகளப் படிச்சு, கமெண்ட் எழுதி, போன் பண்ணி, நேர்ல பேசி ஊக்கப் படுத்தற உங்க எல்லோருக்கும் என்னோட நன்றிகள்.

முக்கியமா,
sarav.net-அ பதிவு செஞ்சு, wordpress, Theme மற்றும் Comment filter எல்லாம் install பண்ணி கொடுத்து, Blogging உலகத்த எனக்கு அறிமுகம் செஞ்ச என்னோட தம்பி சதீஷ்க்கு என்னோட நன்றிகள். தம்பியுடையான் படைக்கஞ்சான்.

அப்புறம், இறைவன் கொடுத்த வரமான என் மனைவிக்கு. படிக்கற விஷயங்கள என்னோட பகிர்ந்துகிட்டு, என்னோட முதல் எழுத்துல இருந்து இந்த எழுத்து வரைக்கும் படிச்சு, எழுத்துப் பிழைகள திருத்தி, ஷாப்பிங் போகும்போது வரலன்னாலும் கோவப்படாம :) , இன்னும் பலவிதத்துல எனக்கு துணையா இருக்கற என் மனைவி சியாமளாவுக்கும் என்னோட நன்றிகள் (அப்பாடா!! இன்னும் ஒரு மாசத்துக்கு நிம்மதியா ப்ளாகளாம்!! :) ).