தேசிய நதி நீர்.

பொருளாதாரத்தில இந்தியா எவ்வளவு முன்னேறினாலும், விவசாயம் பண்ணாம 100 கோடிக்கும் அதிகமான உயிர்கள் உயிர் வாழ்ந்துட முடியுமா?

தண்ணி இல்லாம விவசாயம் எப்டிதான் பண்ணிட முடியும்.
‘மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடிச்ச’ ஊர்லயெல்லாம் தண்ணிப் பஞ்சம்.

இந்த வருஷம் நல்ல மழை. கர்னாடகால வெள்ளம் வருமோன்னு பயந்து தண்ணிய திறந்துவிடற நேரத்துல, நம்ம ஊர் அரசியல்வாதிங்க அவங்க போராடிதான் தண்ணிய திறந்துவிட சொன்ன மாதிரி ‘நாடகம்’ ஆடறாங்க.

இந்த வருஷம் சரி. அடுத்த வருஷம்?

முக்கிய நகரங்களோட தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகமாய்ட்டேதான் இருக்கு. நிலத்தடி நீர உரிஞ்சறாங்களே தவிர மழை நீர் சேமிக்கறதப் பத்தி யோசிக்கறது இல்ல. நிலத்தடி நீரோட முக்கியத்துவம் பத்தி அவ்ளோவா விழிப்புணர்வு இல்ல. இப்போ தண்ணி இருக்குன்னு தாம்பரத்துல வீடு வாங்கறாங்க. அடுத்த அஞ்சு வருஷத்துக்கப்புறம் இருக்குமான்னு யோசிக்கறது இல்ல.

இந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் தேசிய நதிகளை இணைக்கும் திட்டம்தான் ஒரே சொல்யூஷன், அதுவும் சீக்கிரமே நடந்துடும்ங்கற கனவோட இருந்தேன். அப்படி ஒரு திட்டம் உருவாகும் போது குறைந்தபட்சம் ஒரு கோடியாவது நிதி திரட்டித் தரணும்ன்னு திட்டம்லாம் வெச்சிருந்தேன் (சுனாமிநிதிக்காக ஒரு வாரத்துல 2 லட்சம் திரட்டின தைரியம்).

ஆனா போன மாசம் இந்த Article-ல படிச்சதுல இருந்து ‘தேசிய நதி’ திட்டம் நடக்காதோன்னு ஒரு கவலை வந்துடுச்சு. (பெரிய Article, கொஞ்சம் பொருமையா படிங்க.)

http://www.indiatogether.org/2005/may/env-kalamletr.htm

மனிதர்களால கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரையும் சூயஸ் கால்வாயையும் பத்தியெல்லாம் படிக்கும்போது நதிகளை இணைக்கறது முடியும்-ன்னுதான் தோனுச்சு. 23000 கோடி (230,00,00,00,000) செலவு பண்ணி இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலைகள நாலுவழிச் சாலைகளா மாத்த முடியற மத்திய அரசுக்கு பணம் ஒரு பிரச்சனையாவும் தெரியல.

மாநிலங்களுக்குள்ள ஒற்றுமை இல்லாதது ஒரு காரணமா??

இது பத்தி படிச்சு, உங்ககூட விரிவா விவாதிக்கலாமேன்னு எழுதறேன். உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்கள கமெண்ட்டா எழுதுங்க.

இதோட தொடர்புடைய, நான் படிச்ச வேற சில செய்திகள்.

http://www.rediff.com/news/2003/feb/10inter.htm

http://www.terradaily.com/news/water-earth-05ze.html

இதோட தொடர்புடைய, தெரிஞ்சுக்க விரும்பற மத்த விஷயங்கள்.

* UK, சிங்கப்பூர், நியூஸிலாந்து மாதிரி எடங்கள்ல இருந்து வலைப் பதியறவங்க, அந்த ஊர்லயெல்லாம் கழிவு நீர எப்டி சுத்தப் படுத்தி பயன்படுத்தறாங்கன்னு படிச்சு எழுதமுடியுமா?

* மற்ற நாடுகள்ல தண்ணிய வீணாக்காம, நதிகளோட கரைகள எப்படி பராமரிக்கறாங்க?

* பாசன முறைகள் (Latest Irrigation Systems) என்னென்னல்லாம் பயன் படுத்தறாங்க?