சூயஸ் கால்வாய்.


1700 கள்லயே முயற்சி எடுக்கப்பட்டு, தவறான தகவல்களால கைவிடப்பட்டு, திரும்பவும் 1854 வது வருஷம் ப்ரெஞ்ச்-சோட முயற்சியால திரும்பவும் தூசுதட்டி எடுக்கப்பட்டு, எகிப்து அரசாங்கம் ஒத்துகிட்டு, 1859 வருஷம் ஏப்ரல் 25ம் தேதி வேலை ஆரம்பிச்சு, 1869 வது வருஷம் நவம்பர் மாசம் 17ம் கால்வாய் திறப்பு விழா பண்ணியிருக்காங்க. மத்தியத் தரைக்கடல கையப்பிடிச்சு கூட்டிட்டு வந்து செங்கடலோட சேர்த்துவிட்ருக்காங்க.

ப்ரெஞ்ச், எகிப்து ரெண்டு நாடுகளும் சேர்ந்து ஒரு கம்பெனிய ஆரம்பிச்சு அந்த கம்பெனி மூலமா கால்வாய் வேலை செஞ்சிருக்காங்க. இந்தக் கம்பெனியோட பங்குகள (Shares) இந்த ரெண்டு நாடுகளும் பகிர்ந்துகிட்டாங்க.

போற வழில மூனு ஏரிகள இணைக்கற இந்த கால்வாயோட நீளம் 163 கி.மீ. மேல் மட்ட அகலம் 70 மீட்டர். அடி மட்ட அகலம் 22 மீட்டர். ஆழம் 8 மீட்டர்.


இப்போ இருக்கற மாதிரி, Advanced Technology எதுவும் இல்லாத காலத்துல, மனித முயற்சியையும், உழைப்பையுமே மூலதனமா வெச்சு கட்டப்பட்ட கால்வாய்.

நாலு பேருக்கு நல்லது நடக்கணும்ங்கறதுக்காக ரெண்டு நாடுகள் சேர்ந்து இதப் பண்ணியிருக்காங்க. பக்கத்து மாநிலங்களுக்கு நல்லது நடக்கணும்ங்கறதுக்காக மாநிலங்கள் ஒன்னு சேரக்கூடாதா?? ஒரு கைல கொசு கடிச்சா இன்னொருகை வந்து கொசுவ அடிக்கறது இல்லையா?? ( இரவு 1.21 மணிக்கு வேற உதாரணம் தோனல!! :) )