வருண பகவானுக்குத் தந்தி.

கடல் தண்ணி, மேல் மட்டத்துல இருக்கற காத்த சூடாக்கறதால, காத்துல சுழற்சி ஏற்பட்டு, சுழல் காத்து ஏற்பட்டு (அதுவே புயலா மாறி) மழைய கொண்டு வருதுன்னு சொல்றாங்க.

அதே காத்த நாமலே சூடாக்கினா??

எப்டின்னு பாக்கறீங்களா?

வருண யாகம் பண்ணி வருண பகவானுக்கு தந்தியடிச்சிதான்.

இப்படியும் காத்த சூடாக்கி மேல அனுப்பலாம். ஆனா இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்குமா??

இந்த சூட்டினால சுழற்காத்த ஏற்படுத்த முடியுமா?? அதுனால மழைய வரவழிக்க முடியுமா??

இதே மாதிரி இன்னொரு யோசனை.

கடல் தண்ணி சூடாகறதுதான சுழல் காத்து வர்றதுக்கு காரணம்ங்கறாங்க. சூடாக விடாம பாத்துகிட்டா??

இப்டி யோசிக்க ஆரம்பிச்ச ஒடனேயே என் மூளைல இருந்து ஐடியாவா வந்து கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. “தபாரு!! ரொம்ப யோசிச்சு ஸ்ட்ரெய்ண் பண்ணிக்காத, ரெஸ்ட்டு எடுத்துக்கோ” -ன்னு எவ்வளவோ எடுத்து சொன்னாலும் கேக்காம ஐடியாக்கள கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. என்ன பண்றது!! மூளை சொல்ல சொல்ல அப்டியே எழுதிடறேன்..

1. புயல் காத்து உருவாகற கடல் பகுதிகள்ல சூரிய சக்தியினால, சோலார் பவர்ல, இயங்கக்கூடிய ஃபேன்கள பொருத்தி சுத்தவிட்டு சூட்ட கொறைக்கலாம். (‘கரண்டு கம்பி எப்டி அவ்ளோ தூரம் வரும்?’-னு நான் கேட்றுவேனோ-ன்னு, சூரிய சக்தி சோலார் பவர்-ன்னு நல்லா அழுத்தமா சொல்லுது!!)

2. ரெப்ஃபிரிஜ்ரேட்டருக்கு பின்னாடி கம்பி மாதிரி குழாய்ல ஃப்ரியானோ என்னவோ ஒரு வாயுவ அனுப்பி குளிர வைக்கறாங்களே அந்த குழாய்கள கடலோட மேல் பரப்புல போட்டு தண்ணிய குளிரவைக்கலாம். (அவ்ளோ கொழாய்க்கும் ஃப்ரியானுக்கும் காசுக்கு எங்க போறது-ன்னு கேட்டா?, ‘ஒவ்வொரு வருஷமும் பல மி(பி)ல்லியன் டாலர்கள புயல் நிவாரணத்துக்காக செலவு பண்ற ‘புஷ்’ஷுகிட்ட போய் கேளு-ங்குது!!’)

3. திரிசங்கு சொர்க்கம் மாதிரி, கடலுக்கு நேர் மேல, மேகத்துக்கும் மேல, பெருஸ்சா, சூரிய சக்திய யூஸ் பண்ணி மிதக்கும் தீம் பார்க் ஒன்னு கட்ட சொல்லு!! வின்டர்லகூட மக்கள் சுற்றுலா மாதிரி போறதுக்கும் வசதியா இருக்கும். அந்த தி.சொ-வோட நெழல் கடல்ல விழறதால சூரிய ஒளி படாம தண்ணி சூடாகாம இருக்கும்-ல??
(மேகத்துக்கும் மேல தி.சொ கட்டினா, அங்க மழையே பெய்யாதே!! பாத்ரூம் போயிட்டு தண்ணிக்கு என்ன பண்ணுவ-ன்னு கேட்டா, அதெல்லாம் அவுட் ஆஃப் ஸ்கோப்-ங்குது!!)

4. ஊர்ல ஆகாயத் தாமரை இருக்குல்ல. அட, கொளத்துலயெல்லாம் மேல ஃபுல்லா பரவியிருக்குமே. கீழ இருக்கற தண்ணியே தெரியாத படி மூடியிருக்குமே. அதுமாதிரி கடல் தண்ணில வளர்ற ஆகாயத் தாமரைய உருவாக்கி, அத கொண்டுபோயி கடல்ல, சுழல் காத்து உருவாகற எடத்துல போட்டு, அந்தப் பகுதி ஃபுல்லா பரவவிட்டா, சூரிய வெளிச்சம் தண்ணிக்கு போகாம இருக்கும்ல??!! தண்ணி சூடாகாம இருக்கும்ல??!!
எப்டி இந்த ஐடியா??
‘கடல்ல ஆகாயத் தாமரை போட்டா வண்டு எப்டி வரும், தேனி எப்டி வரும்’-ன்னு ஏதாவது கேள்வி கேப்பியே!! கேக்கல??

ஹலோ..

ஹலோ..

டேய்.. இன்னும் நெறைய ஐடியா இருக்குடா!!

அடப்பாவி! தூங்கிட்டியா!!