வள்ளுவரும் புயலும்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்: மழையை வாரி வாரி வழங்கக்கூடியது ‘புயல்’. அதனுடைய வளம் குன்றிப் போனால், உழவர்கள் ஏரைப் பிடித்து உழவுத் தொழில் செய்வது இய(ல்)லாமல் போய்விடும்.

வள்ளுவர் காலத்துல எத்தன பேரு உழவுத் தொழில் பண்ணியிருப்பாங்க, புயல்/மழைய எவ்ளோ முக்கியமா வள்ளுவர் எழுதியிருக்காரு. இப்போ எவ்ளோ பேரு உழவுத் தொழில் பண்றாங்க. இப்போ மழையோட முக்கியத்துவம் என்னன்னெல்லாம் யோசிச்சு பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு!!