Accidental Murder.

செலீனா அக்தல், அமெரிக்காவில் நேற்றுவரை சந்தோஷமாக வாழ்ந்த 28 வயது குடும்பத் தலைவி. பங்களாதேஷில் இருந்து அமெரிக்கா வந்து குடியேரி வாழ்ந்துகொண்டிருந்தவர். இரண்டு குழந்தைகளின் தாய். இன்னும் இரண்டு நாட்களில் 29வது பிறந்தநாளை கொண்டாட இருந்தவர்.

கார்பியோ நியூயார்க்கின் குவீன்ஸை சேர்ந்த 23 வயது இளைஞன். அமெரிக்க ராணுவத்தில் ஆறு மாதங்களுக்குமுன் சேர்ந்திருந்தவன். டெக்ஸாஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, விடுப்பில் நியூயார்க் வந்தவன்.

ஆறுமாதங்கள் ராணுவத்தில் வெற்றிகரமாக வேலை பார்த்த மகிழ்ச்சியை, நேற்று இரவு (12/29/2005) 11.30 மணியளவில், நண்பர்களோடு குடித்துக் கொண்டாடிக்கொண்டிருந்திருக்கிறான். போதையில் தன் ராணுவத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக மேல் நோக்கி சுட்டிருக்கிறான்.

இரவு உணவை முடித்துவிட்டு, குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு, ஐந்தாவது மாடியில், வீட்டின் ஜன்னலோரமாக நின்றுகொண்டு பங்களாதேஷில் உள்ள தன் உறவினர்களுடன் ஃபோனில் பேசிக்கொண்டிருந்த செலீனாவின் தலையில் அந்த குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்தக் குடும்பத்தின் எந்தனையோ கனவுகள், யாரோ ஒருவனின் குடிபோதையால் கலைந்துபோனது.

ABC News