அறிவுரை.

ஒனக்கு கடவுள் மாதிரி பலபேரு பல நேரங்கள்ல பலமாதிரி அறிவுரைகள் சொன்னாலும் உன் மண்டைல ஏறவே ஏறாது. பட்டப்புறமாவது புத்தி வருதா?? அதுவும் கெடையாது!!

இப்டிதான் படிக்கற வயசுல புத்தகத்த எடுத்து வெச்சு படிடா படிடா-ன்னு அப்பா சொல்லிட்டே இருந்தாரு. கேக்காம ஊர சுத்துன. பத்தாவது ஃபெயில் ஆனப்புறமாவது புத்தி வந்துச்சா?? இல்ல!!

‘அட்டெம்ட்டு எழுதி பாஸ் பண்ணினா பாலிடெக்னிக்ல சீட்டு வாங்கித் தர்றேன்’-ன்னு கணக்கு வாத்தியார் சொன்னாரு!! கேட்டியா??

‘ரசிகர் மன்றம், சினிமா போஸ்டர் ஒட்றதுன்னு சுத்தாம எதாவது ஒரு ஒழுங்கான வேலையப்பாரு’-ன்னு அப்பா சொல்லிட்டே இருந்தாரு!! கேக்கல!!

‘நண்பர்கள்லாம் சரியில்ல, குடி சிகரெட்டுன்னு கெட்டப் பழக்கங்களயெல்லாம் பழகிக்காத’ன்னு அம்மா சொன்னாங்க. அதையாவது கேட்டியா!!

‘இது எதுவுமே செய்யலன்னாலும், பக்கத்து ஊர் ஃபாக்டரில வேலைய வாங்கிக்கொடுத்து, பைக்கயும் வாங்கிக் கொடுத்து வேலைக்கு அனுப்பி, இந்த வேலையாவது நல்லா பண்ணுப்பா’-ன்னு பெரியப்பா சொன்னாரு. அதையும் கேக்கல!!

இப்போகூட ஃபுல்லா குடிச்சிட்டு வண்டிய எடுத்துகிட்டு ஹோட்டல விட்டு வெளில வரும்போது, ஒருத்தன் ‘குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு போகாதறா மூதேவி’-ன்னு கத்தினான். கேட்டியா?? கேக்காம வண்டிய எடுத்துகிட்டு வந்து, மரத்துல மோதி, ஹாஸ்பிடல்ல கடக்க. இப்போகூட அடிபட்ட பின்னாடிதான் இவ்ளோத்தையும் யோசிக்க முடியுதே தவிர கையையோ காலையோ அசைக்க முடியல. கண்ண கூட தெறக்க முடியாம கடக்க!!

‘ஏய்.. யார்ரா அது?? ராஜா மாதிரி மேக்கப் போட்டுகிட்டு?? கைல என்ன கயிறு??’