ஜோசியம்.
msn.com-ல வந்த இந்த விளம்பரத்தப் பாத்தா.. கைரேகை ஜோசியம், நாடி ஜோசியம், கிளி ஜோசியம் பாக்கறவங்களுக்கெல்லாம் அமெரிக்கால டிமாண்டு அதிகமாயிடும் போலருக்கு!!

நம்ம வெப் சைட்டுக்கு நெறைய விசிட்டர்ஸ் வருவாங்களா, கமெண்ட் எழுதுவாங்களா-ன்னெல்லாம் கிளிஜோசியம்.காம் மற்றும் நாடிஜோசியம்.காம்-ல கேட்டு தெரிஞ்சுக்கலாம்!!
சோதிடம் சர்வரோக சஞ்சீவி இல்லை. மற்ற துறைகளைப் போல் இதற்கும் வரம்புகள் உண்டு. சோதிடருக்கும் வரம்புகள் உண்டு. சோதிடத்தின் அடிப்படை தெரியாதவர்கள், நேரிடை அனுபவம் இல்லாதவர்களும் அதை எள்ளலாம், அல்லது அவர்கள் மட்டும்தான் எள்ளுவார்கள்.
AskTheParrot.com வந்தா சீக்கிரமே பாப்புலர் ஆயிடும் போலருக்கே!!
எனக்கு சோதிடத்துல அவ்வளவா நம்பிக்கை இல்லன்னாலும், எள்ளணும்-ங்கற எண்ணத்துல எழுதலங்க முத்து.
சரவ்,
.
சோதிடம் என்னுடைய பொழுதுபோக்குகளில் ஒன்று. முழுமையாய் அதைச் சார்ந்திருப்பதோ, அல்லது அதை அப்படியே நம்புவதோ இல்லை. கோளென் செய்யும், நாளென் செய்யும் என்பது என்னுடைய எண்ணமாய் இருந்தாலும் பலமுறை அதன் வீச்சை, துல்லியத்தை அனுபவப்பூர்வமாய் பார்த்து நான் பிரமித்திருக்கிறேன், ஆனால் அவற்றை அறிவியல் பூர்வமாய் இன்றைக்கு விளக்குவது மிகக் கடினம். நான் சொல்வது பிறந்த நேரத்தைய கோள்களின் நிலை வைத்துச் சொல்லப்படும் சாதக சோதிடம். மற்றவை பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. இதற்காய் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் பணம் செலவழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.இதை பொழுதுபோக்காய் வைத்திருக்கும் நண்பர் யாராவது இருந்தால் பரீட்சித்துப்பாருங்கள்