சுதந்திர தாகம்.

இந்தியால வெள்ளைக்காரங்க வந்து நம்மள அடிமைப்படுத்துனதால, நாம சோழ நாட்டு மக்கள், சேர நாட்டு மக்கள், மொகலாய மக்கள்ங்கற மாதிரி வேறுபாடுகள்லாம் போயி இந்திய மக்கள்-ங்கற உணர்வோட போராடினோம் இல்லயா??

அதுமாதிரி, ஆங்கிலேயர்கள் அமெரிக்கால குடியேறினதுக்கு முன்னாடி, அங்க மண்ணின் மைந்தர்களாக இருந்த செவ்விந்தியர்கள் எல்லோரும் ஒன்னா சேர்ந்து ஆங்கிலேயர்கள எதிர்த்து சுதந்திரத்துக்காகப் போராடியிருப்பாங்களோ-ன்னு நெனைச்சீங்கன்னா, அதுதான் இல்ல!!

1500கள்ல ஆரம்பிச்சு இங்கிலாந்து-ல இருந்து வந்து அமெரிக்க நிலப்பரப்புல குடியேறின மக்களுக்கெல்லாம் ஒரு ரெண்டு மூணு தலைமுறைக்கப்புறம் அவங்கள்லாம் இங்கிலாந்துல இருந்த வந்தவங்கங்கற நினைப்போ, இங்கிலாந்து மேல ஒரு தாய்நாட்டுப்பற்றோ இல்லாம போய்டுச்சு. தவிர இங்கிலாந்துல ஒக்காந்துகிட்டு சட்டம் போடறவங்க அமெரிக்க காலனிகள்ல இருக்கறவங்களுக்கு-ன்னு ஸ்பெஷல் வரிகளையும், சட்டங்களையும் போட ஆரம்பிச்சாங்க.

ஒரு சாம்பிள். இங்கிலாந்தோட காலனியா இருந்த இந்தியால கணக்கு வழக்கில்லாம வெளையற தேயிலைய மூட்டை மூட்டையா அமெரிக்காவுக்கு கொண்டு வந்து, அதுமூலமா தேயிலைக்கு வரிய வசூலிக்கலாம்-ங்கற திட்டங்களோட தேயிலை கப்பல்கள பாஸ்டன் துறைமுகத்துக்கு பக்கத்துல கொண்டுவந்து நிறுத்தியிருந்தாங்க. அமெரிக்க காலனி மக்களுக்கு இந்தத் திட்டம் தெரிஞ்சுபோயி செவ்விந்தியர்கள் மாதிரி வேஷம் போட்டுகிட்டு கப்பல்கள்ல ஏறி தேயிலை மூட்டைகள தூக்கி கடல்ல வீச ஆரம்பிச்சாங்க. இந்திய சுதந்திரப் போராட்டத்தப் பத்தி படிச்சப்போ இந்த நிகழ்ச்சியப் பத்தி படிச்சிருக்கலாம். இதுதான் பாஸ்டன் தேனீர் விருந்து அல்லது பாஸ்டன் கலகம்.

இதுமாதிரி இங்கிலாந்து அரச வெறுக்க ஆரம்பிச்ச மக்கள் 1775-ல முதன் முதலா இங்கிலாந்து படையோட மோத ஆரம்பிச்சாங்க.