ஜான் ஹான்சன் (John Hanson) – முதல் அமெரிக்க ஜனாதிபதி.

13 மாநிலங்கள் சேர்ந்து ‘United States of America’-ங்கற கூட்டணியை உறுவாக்கி, இந்த கூட்டணியின் வருடாந்திரக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி ஜார்ஜ் வாஷிங்டன் படைகளின் தளபதியாகி, தலைமைதாங்கி கூட்டணிப் படைகள் வெற்றி பெற்று 1781-ஆம் வருஷம் சுதந்திரம் வாங்கியாச்சு.

சுதந்திரம் வந்தப்புறம் யார் இந்த மாநிலக் கூட்டணிக்கு ஜனாதிபதியாகறது-ன்னு முடிவு பண்ண ஒரு மீட்டிங் போட்டாங்க. அதுல, சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த நிர்வாகத்திறமை உள்ளவருமான ‘ஜான் ஹான்சன்’-ங்கறவர ஜனாதிபதியா தேர்ந்தெடுத்தாங்க. மீட்டிங்குக்கு வந்திருந்த ‘ஜார்ஜ் வாஷிங்டனும்’ சந்தோஷமா ஜான் ஹான்சனுக்கு வாழ்த்துச் சொல்லி கை குலுக்கிட்டு ஊருக்கு போய்ட்டாரு.

‘United States of America’-ங்கற 13 மாநில கூட்டணிக்கு முதல் ஜனாதிபதியா ‘ஜான் ஹான்சன்’ 1781-ல பதவி ஏத்துகிட்டாரு. 13 சுதந்திரக் காலனிகள (அ) மாநிலங்கள சேர்த்து வழிநடத்தற வேலை. சுதந்திரம் அடையும் வரைக்கும் சுதந்திரத்தை எதிர்பார்த்து போரிட்ட போர் வீரர்கள் எல்லாம் இப்போ சம்பளத்தை எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்க. கூட்டணி ஜனாதிபதியானாரே தவிர உடனே வருமானத்துக்கு எங்க போவாரு? சம்பளம் கொடுக்க முடியலன்னு டென்ஷன் ஆன போர்வீரர்கள் எல்லாம் ஜான் ஹான்சன தூக்கிட்டு வாஷிங்டன ஜனாதிபதியாக்கணும்-னு மிரட்ட ஆரம்பிச்சாங்க. அப்போவெல்லாம் மக்களாட்சி அவ்ளோ பிரபலம் இல்ல. மன்னராட்சிதான் பேமஸ். அதுனால ஜார்ஜ் வாஷிங்டனயே மன்னராக்கிடலாமா-ன்னுகூட யோசிச்சாங்க. அவங்களயெல்லாம் சமாளிக்க முடியாம ஜான் ஹான்சன் ஓடியிருந்தார்னா ஜார்ஜ் வாஷிங்டன் இந்த மாநிலங்கள் கூட்டணிக்கு மன்னராகூட ஆயிருக்கலாம்!!

ஆனா, ஜான் ஒரு வருஷம் நல்லாதான் ஆட்சி செஞ்சிருக்காரு (அப்போவெல்லாம் வருஷத்துக்கு ஒரு ஜனாதிபதி). ஆட்சிக்கு வந்ததும், மாநிலங்கள்ல இருந்த மத்த நாட்டு ராணுவ வீரர்கள் எல்லோரயும் வெளியேற வெச்சாரு. அங்க இங்க பறந்துகிட்டு இருந்த மத்த நாட்டு கொடிகளையெல்லாம் தூக்கி வீசிட்டு எங்கப் பாத்தாலும் அமெரிக்க கொடி பறக்கும்படி செஞ்சாரு. கூட்டணி நிதிக்காக ஒரு கஜானாவை ஏற்படுத்தினாரு. மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்த வெளியுறவுத்துறை ஏற்படுத்தினாரு. அவருதான் மொதல் முதல்ல, ஒவ்வொரு வருஷமும் நவம்பர் மாசம் நாலாவது வியாழக்கிழமைய ‘Thanks Giving Day’-யா அறிவிச்சாரு. இன்றளவும் இது கடைபிடிக்கப்படுகிறது.

அவருக்கப்புறம் எலியாஸ் பௌடினாட் (1783), தாமஸ் மிஃப்லின் (1784), ரிச்சர்ட் ஹென்ரி லீ (1785), நேதன் கொர்மன் (1786), ஆர்தர் க்லெய்ர் (1787), சிரஸ் கிரிஃபின் (1788) -ன்னு ஆறுபேர் ஜனாதிபதியா இருந்தாங்க.

அதுக்கப்புறம் எட்டாவதா வந்து முதல் ஜனாதிபதியானவருதான் ஜார்ஜ் வாஷிங்டன்.