கூட்டறிக்கை (The Articles of Confederation).

13 மாநிலங்கள் சேர்ந்து ஒரு விடுதலைக் கூட்டணி அமைச்சு அந்தக் கூட்டணி பத்தி ஒரு கூட்டறிக்கை வெளியிட்டாங்க. ஆழ்ந்த சிந்தனைக்கப்புறம் உருவான அந்தக் கூட்டறிக்கைல இருந்த சில முக்கிய விஷயங்கள் இங்க.

1. இந்த 13 மாநிலங்களின் கூட்டணி ‘United States of America’ என்று அழைக்கப்படும்.

2. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களுக்கான சட்டங்களை இயற்றிக்கொள்ளவும், சுதந்திரமாக செயல்படவும் முழு உரிமை உண்டு.

3. இந்தப் பதிமூணு மாநிலங்களும் நட்புறவோடு செயல்பட வேண்டும். இந்த நட்புறவு, மாநிலங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக அமைய வேண்டும். இந்தக் கூட்டணிக்கு அண்டை நாடுகளில் இருந்து வரும் போர் மற்றும் அனைத்து அச்சுறுத்தல்களையும் இந்தக் கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு முறியடிக்கவேண்டும்.

4. மாநிலங்களுக்கு இடையிலான உறவு வளர, ஒரு மாநிலத்து மக்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று வியாபாரம் செய்யத் தடையேதும் இல்லை.

ஒரு மாநிலத்தில் ஏதாவது குற்றம் செய்துவிட்டு வேறு மாநிலங்களுக்கு யாராவது செல்வாராயின், எந்த மாநிலத்தில் அவர் மீது வழக்கு இருக்கிறதோ அந்த மாநிலத்திடம் அவர் ஒப்படைக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்தின் விதிகளையும், சட்டங்களையும் மற்ற மாநிலங்கள் முழுமையாக மதிக்கவேண்டும்.

5. ஒவ்வொரு மாநிலமும், கூட்டணிக்கான அதன் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். கூட்டணியின் மீட்டிங்குகளில் அவர்கள் கலந்துகொள்ளவேண்டும். இந்தப் பிரதிநிதிகளில் யாரேனும் சரியாக செயல்படாத பட்சத்தில், அந்த மாநிலம் அவரை நீக்கிவிட்டு வேறொருவரை நியமிக்கலாம். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தபட்சம் இரண்டு பிரதிநிகளும் அதிகபட்சம் ஏழு பிரதிநிதிகளும் இருக்கலாம். இந்தப் பிரதிநிதிகள், ஒவ்வொரு வருடமும், நவம்பர் மாத முதல் திங்கட்கிழமை கூடிப்பேசுவார்கள்.

அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான விஷயத்தில், அதாவது யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கான விஷயத்தில் முடிவெடுக்க ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஓட்டு அளிக்கப்படும்.

இந்தக் கூட்டணிக்கான பிரதிநிதிகளின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தடைபடக் கூடாது.

6. யுனைட்டட் ஸ்டேட்ஸ் கூட்டணியின் அனுமதி இல்லாமல், எந்த ஒரு மாநிலமும் வேறு எந்த நாட்டின் தூதரகத்தையும் அனுமதிக்கக்கூடாது. வேறு தேசங்களில் தூதரகங்களும் அமைக்கக்கூடாது. மாநிலங்கள் அவைகளுக்குள்ளாகவோ அல்லது வேறு நாடுகளுடனோ எந்த விதமான உடன்படிக்கையும் செய்துகொள்ளக்கூடாது.

யுனைட்டட் ஸ்டேட்ஸ் கூட்டணி வேறு எந்த நாட்டுடனோ, அரசர்களுடனோ ஒப்பந்தங்கள் போட்டால், அதை மீறும் விதமாக மாநிலங்கள் நடந்துகொள்ளக்கூடாது.

கூட்டணியின் அனுமதியில்லாமல் எந்த ஒரு மாநிலமும் தனக்கென போர் கப்பல்களோ, ஆயுதங்களோ வைத்துக்கொள்ளக்கூடாது.

மற்ற நாடுகளில் இருந்து ஊடுருவினால் மட்டும் அல்லாது எந்த ஒரு மாநிலமும் வேறு நாடுகளுடன் போர் தொடங்கக்கூடாது.

7. வேறு நாட்டுடன் போர் செய்ய வேண்டிய நிலை வந்தால் அந்த செலவை அனைத்து மாநிலங்களும் கொடுக்கும் நிதியில் இருந்து தரவேண்டும். ஒவ்வொரு மாநிலமும் அதன் நிலப்பரப்பின் மதிப்பைப் பொறுத்து செலுத்தும் தொகை அமையும்.

இதுமாதிரி இன்னும் நெறைய இண்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் இருக்கு!! எத்தனை விஷயங்கள அந்தக் காலத்துல யோசிச்சு எழுதியிருக்காங்கன்னு யோசிக்க வெச்சுது.