முதலாவதான எட்டாவது ஜனாதிபதி.

13 மாநிலங்கள் சேர்ந்து, United States of America-ன்னு ஒரு கூட்டணி அமைச்சு, மீட்டிங் போட்டு, கூட்டறிக்கை வெளியிட்டு, சுதந்திரத்துக்காக போராடி, வெற்றியடைஞ்சு, ஜான் ஹான்சன ஜனாதிபதியாகி அவருக்கப்புறம் வருஷத்துக்கு ஒருத்தர்-ன்னு ஏழுபேர் ஜனாதினதி ஆனாங்க.

ஆனா இந்தக் கூட்டணி-ல இருந்த மாநிலங்களுக்கெல்லாம் அந்தந்த மாநிலத்துக்கு எல்லா அதிகாரமும் வேணும்-னு நெனைச்சாங்களே தவிர, United States of America-ங்கற ஒரு தேசம் உருவாகறதுல அவ்ளோ ஈடுபாடு இல்ல. ஒரு தேசம்-னு உருவாக்கி எல்லா அதிகாரத்தையும் அதுகிட்ட கொடுத்துட்டா மாநிலங்கள் அனுபவிக்கற சொகுசு கொறைஞ்சுடுமோ-ன்னு நெனைச்சாங்க. உதாரணமா, மாநிலங்கள்ல வசூலிக்கற வரிய முழுமையா ‘அனுபவிக்க’ முடியாது. மாநிலத்துக்கு-ன்னு தன்னோட இஷ்டத்துக்கு சட்டங்கள் போட்டுக்க முடியாது. இதுமாதிரி.

மாநிலங்களுக்குள்ள இருந்த நட்பு வளையமும் சுறுங்க ஆரம்பிச்சிடுச்சு. மத்த மாநிலங்கள்ல எதிரிகள் ஊடுருவினா எனக்கென்ன-ங்கற மனப்பான்மை வர ஆரம்பிச்சிடுச்சு. சுறுக்கமா சொல்லப்போனா, தமக்குள்ள பிரச்சனைகள மட்டும் கூட்டணி நிர்வாகத்துக்கு தள்ளிவிட்டுட்டு சொகுசுகள மட்டும் தாம் அனுபவிக்கலாம்-ன்னு பார்த்தாங்க.

இங்கிலாந்தும் ஸ்பெயினும் இந்தக் குழம்பின குட்டைல மீன் பிடிக்கலாமே-ன்னு அங்கங்க ஆக்கிரமிப்புத் தூண்டில்கள போட ஆரம்பிச்சாங்க.

இதெல்லாம் சரிப்பட்டு வராது, United States of America-ங்கற நாடு உருவாகி ஒரு மத்திய அரசாங்கம் வந்தாதான் சமாளிக்க முடியும்-ங்கற முடிவுக்கு எல்லா மாநிலங்களும் தள்ளப்பட்டன. செலபேரு அந்த நாட்டுக்கு ஜார்ஜ் வாஷிங்டன அரசராக்கிடலாம்-னு சொன்னாங்க. ஆனா ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அரசராகரதுல உடன்பாடு இல்ல. அவர்தான், மத்திய அரசாங்கம்-ன்னு ஒன்னு இருக்கணும்-ன்னும், மக்களால தேர்ந்தெடுக்கப்படறவரு ஜனாதிபதியா இருக்கணும்-னு சொல்லி அதற்கான ஏற்பாடுகள கவனிச்சாரு. அதுதான் இன்னிக்கு வரைக்கும் இருக்கு.

United States of America-ங்கற நாடு உருவாச்சு. மத்திய அரசாங்கம்-னு ஒன்னு உருவாச்சு. ஜனாதிபதியா ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு மனதா தேர்ந்தெடுக்கப்பட்டாரு. அவருக்கு முன்னாடி, United States of America-ங்கற 13 மாநில கூட்டணிக்கு ஏழு பேரு ஜனாதிபதியா இருந்தாலும், United States of America-ங்கற நாட்டுக்கு, ஒரு மத்திய அரசாங்கத்துக்கு, ஜனாதிபதியா மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டவர்-ங்கறதுனால அவர் முதல் ஜனாதிபதியா அறிவிக்கப்பட்டாரு.

(எவ்ளோ நேரம் கைய இப்டியே வெச்சுகிட்டு போஸ் கொடுத்தாரோ தெரியல!! :) ) 1789-வது வருஷம் பிப்ரவரி மாசம் முதல் ஜனாதிபதியா ஜி.டபிள்யூ பதவி ஏத்துகிட்டாரு.

கோடு போட்டா ரோடு போடறவங்கள பாத்திருப்பீங்க. எழுத்தாளர் பா.ரா, ‘டாலர் தேசம்’ புத்தகத்துல போட்டிருக்கற ’4 lane highway’ ரோட்ட படிச்சு, அதுலருந்து ஒரு சின்ன கோடுதான் இங்க நான் போட்ருக்கேன். வரலாற்றோட ஒவ்வொரு நிகழ்வுகளையும், போர் காட்சிகளையும், போர் யுக்திகளையும், பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜிகளையும்-ன்னு ஒவ்வொன்னையும் அவ்ளோ சிறப்பா எழுதியிருக்காரு.

படிச்ச எல்லாத்தயும் இங்க எழுத முடியலன்னாலும், சாதா அமெரிக்கா ‘தாதா’ அமெரிக்காவான கதை, அமெரிக்காவோட தலையெழுத்த மாத்தி எழுதிய ஜனாதிபதிகள், 1929-ல தலகுப்புற விழுந்த ஸ்டாக் மார்க்கெட் இதுபத்தியெல்லாம் எழுதலாம்-னு இருக்கேன்.

அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிரேக். எங்க வீட்ல ‘ஒரு புதுவரவ’ ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருக்கோம். ‘புது வரவு’ வந்தப்புறம் எழுதறேன்.