ஹக்கூனா மட்டாட்டா.

Lion King படத்துல வர்ற ஒரு வசனம் இது, ஹக்கூனா மட்டாட்டா. ‘That means no worries’-ன்னு அந்த படத்துலயே சொல்லுவாங்க. ‘சிம்பா’ சிங்கக்குட்டியோட நண்பர்கள் சிம்பாக்கு சொல்லிக் கொடுத்து, ஹக்கூனா மட்டாட்டா-ன்னு ஒரு பாட்டே பாடுவாங்க.

அதே மாதிரி ‘No Worries’ வகை தமிழ் பாட்டு இது. ‘ஆறு’ படத்துல வர்ற இந்த ‘ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு மாமே’ பாட்டு. தேர்தல் அறிக்கைகள பாத்து டென்ஷன், கூட்டணி குழப்பங்கள பாத்து டென்ஷன், கட்சித்தாவல்கள பாத்து டென்ஷன்-னு ஓவர் டென்ஷனானவங்க இந்தப் பாட்ட கேட்டு கொஞ்சம் கூலாயிக்கங்க.

கேட்ட முதல் தடவைலயே இந்தப் பாட்டு பிடிச்சிருச்சு. இசை, பாட்டு பாடினவரு குரல்-னு எல்லாமே பிடிச்சிருச்சு. பாட்டு லிரிக்ஸ்ஸும்தான். முக்கியமா ‘லண்டன்ல Law’ வரிகள்.

கேட்டுப் பாருங்க

ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு மாமே!!
வாழ்க்கைக்கு இல்ல கேரண்டி!!
ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு மாமே!!
ஒன் கனவுக்கு இல்ல வாரண்டி!!

ஒன்னு ரெண்டு மூணுன்னு எண்ணுறதுகுள்ள
ஓன் நெத்தியில ஒத்தரூவா வெச்சிருவாம்மெல்ல!!
இன்னிக்குதான் என்ன வருமோ!!
அது மட்டுந்தாண்டா ஒனக்கு சொந்தம்!
நாளிக்குதான் என்ன வருமோ
அது யாருக்குத்தான் என்ன தெரியும்!!

வாணாண்டா வாணாண்டா வாணாண்டா வாணாண்டா
நாளைநம்பி வாழ வேணாண்டா!! ஹே தம்பேய்ய்!!

ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு மாமே!!
வாழ்க்க்கைக்கு இல்ல கேரண்டி!!
ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு மாமே!!
ஒன் கனவுக்கு இல்ல வாரண்டி!!


லண்டனுல ளா படிக்க நெனைச்சான்.
அவன் கண்டம் வுட்டு கண்டம் போவ துடிச்சான்!
கோயம்பேடு ரோடு வண்டி மேல ஏறுச்சாம்!
தக்க்காளியா நசுங்கிபுட்டான்!!
..
..

‘கனவு காணுங்க! கனவு காணுங்க!!’-ன்னு நம்ம குடியரசுத் தலைவர் சொல்ற கனவுக்கும், இந்தப் பாட்ல வர்ற ‘உன் கனவுக்கு இல்ல கேரண்ட்டி’ வகை கனவுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு.

பாட்ட கேட்டு ஜாலியா இருந்துட்டு ‘எழுச்சி தீபங்கள்’-ல நம்ம குடியரசுத் தலைவர் சொல்ற கனவ பத்தி பேச வந்துடறீங்களா!!!