A bigger picture..

குடியரசு தலைவர் சொல்ற இந்த விஷயம் நாம எல்லோரும் யோசிச்சுப் பாக்க வேண்டிய ஒன்னா பட்டுது.

‘மதிப்புக் கூட்டல்’ பத்தி சொல்லும் போது இந்த விஷயத்த சொல்றாரு. 1970கள்ல, ஏவு கலங்கள் தயாரிப்புப் பணில இருந்தப்போ, ஏவுகணைகளோட இயந்திற சுழற்சி நிலவரத்த அளவிடவும், ஏவுகணை போற பாதையோட நிலவரத்த ஆராயற சென்ஸர்கள்லயும் பயன்படுத்த, அவங்களுக்கு beryllium diaphragms-ங்கற பொருள் தேவப்பட்ருக்கு.

நம்ம நாட்ல அது கெடைக்காததால இன்டர்நேஷனல் மார்க்கெட்ல வாங்கலாம்-னு முடிவு பண்ணி, T.N.சேஷன், மாதவன் நாயர், S.C.குப்தா அவங்களோட அப்துல் கலாம் அவர்களும் சேர்ந்து நியூயார்க்-ல ஒரு கம்பெனிகூட 100 beryllium diaphragms வாங்க அக்ரிமெண்ட் போட்டுக்காங்க.

ஆர்டர் பண்ணிட்டு, வரும் வரும்-னு காத்திருந்தவங்களுக்கு மூணு மாசம் கழிச்சு ஒரு லெட்டர் வந்திருக்கு. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்ல இந்த beryllium diaphragms கள பயன்படுத்தலாம்-ங்கற காரணத்துனால அத இந்தியாவுக்கு விக்க அமெரிக்க அரசுகிட்ட இருந்து அனுமதி கெடைக்கல-ன்னு லெட்டர்ல சொல்லி இருக்காங்க.

மூணுமாசமா காத்திருந்தும் வேண்டியது கிடைக்காததால, அடுத்த கட்டமா அதை வாங்கறதுக்கான வழிகள தேட ஆரம்பிச்சிருக்காங்க. அமெரிக்கால கெடைக்காத beryllium diaphragms வேற எந்தெந்த நாடுகள்லல்லாம் கெடைக்குது-ன்னு ஆராச்சி செஞ்சப்போ அவங்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் கெடைச்சிருக்கு.

பெரிலியம் தாது அதிகமா கெடைக்கற நாடுகள்ல ஒரு நாடு நம்ம இந்தியா-ங்கறதுதான் அந்தத் தகவல். இந்தியால இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி ஆகி, அங்க அத சுத்தப்படுத்தி, பதப்படுத்தி கம்மிகளாவும், தகடுகளாகவும் மாத்தி அமெரிக்காவுக்கு அனுப்பறாங்க. அத அமெரிக்கா diaphragms போன்ற பெரிலியம் பொருட்களா மாத்தி உலகமெல்லாம் விக்கறாங்க. அததான், நமக்கு விக்கறதுக்கு தடை போட்ருக்காங்க.

திருப்பதி வெங்கடாஜலபதிக்கே லட்டு கெடையாது-ன்னு சொன்ன கதையால்ல இருக்கு!!

பெரிலியம் தாதுவ வாங்கி அத சுத்தம் செஞ்சாலே அதோட மதிப்பு பத்து மடங்கு அதிகமாயிடுமாம். அத பெரிலியம் பொருட்களா மாத்தினா நூறு மடங்கு அதிகமாயிடுமாம். அப்டி நூறு மடங்கு அதிகமான வெலைக்கும் நம்மளால வாங்க முடியல. தடை விதிக்கறாங்க.

அதுக்கப்புறம் இந்தியால இருந்து பெரிலியம் தாது ஏற்றுமதி செய்யறத நிறுத்திட்டாங்க.

இருந்தாலும், இந்த beryllium diaphragms, அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவைப்பட்டதால, அவங்க கண்டுபிடிச்சு சொன்னதுக்கு அப்புறம் பெரிலியம் ஏற்றுமதிய நிறுத்தினாங்க. O.K. பெரிலியம் தாது ஏற்றுமதிய நிறுத்தியாச்சு. மற்ற தாதுக்கள்? நம்ம நாட்ல இருந்து ஏற்றுமதி ஆகற பொருட்கள் என்னென்ன? அத மத்த நாடுகள் வாங்கி என்ன செய்யறாங்க, அத அவங்க என்னவா செஞ்சு யாருக்கு விக்கறாங்க? அதை ஏன் நம்ம நாட்லயே செய்யக்கூடாது? அப்டின்னெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா?