தண்ணீர் தண்ணீர்.

1970-கள்ல சுஜாதா எழுதின ஒரு சிறுகதைய சில மாசம் முன்னாடி படிச்சேன். கதையோட பேரு தண்ணீர்-ன்னு நெனைக்கறேன். கதையோட கரு இதுதான். உலக வங்கியில இருந்து ஒரு ஆளு, தமிழன், சென்னைக்கு வருவாரு. தமிழ் நாட்ல தண்ணிப் பஞ்சம் இருக்கு. வரும் காலங்கள்ல இது இன்னும் மோசமா ஆகப் போகுது-ன்னு உலக வங்கி அறிக்கைகள் சொல்லுது. தமிழக அரசு அதப் பத்தி அவ்ளோவா அக்கரை காட்ற மாதிரி தெரியல. அதுனால, உலக வங்கில அவர் வேல செய்யறதால, உலக வங்கி உதவியோட தமிழ் நாட்டு தண்ணிர் பஞ்சத்த தடுக்க நெறைய திட்டங்களோட வருவாரு. தமிழக அரசாங்க அதிகாரிகள் அவர விமான நிலையத்துல இருந்து அழைச்சுகிட்டு போயி ஹோட்டல்ல தங்க வைப்பாங்க. மறுநாள் முதல்வர சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருப்பாங்க.

அன்னிக்கு ராத்திரி ஹோட்டல்ல இருந்து வெளில களம்பி தண்ணீர் தட்டுப்பாடு உள்ள எடங்கள பாக்கலாமே-ன்னு போவாரு. போற எடத்துல ஒரு கும்பல் லாரில தண்ணி கொண்டுவந்து குடம் ஒரு ரூபான்னு வித்துகிட்டு இருப்பாங்க. அங்க தண்ணீ வாங்கற மக்கள்ட்ட போயி, தான் உலக வங்கியில இருந்து வர்றதாகவும், சீக்கிரமே இந்தத் தண்ணீர் பஞ்சம் தீரும்-னும் சொல்லுவாரு.

அப்போ திடீர்னு ஒரு கும்பல் வந்து அவர அடிச்சு போட்டுடும். அந்த கும்பல்ல ஒருத்தன் சொல்லுவான், ‘நாமளே அங்க முட்டி இங்க மோதி, M.L.Aவ புடிச்சு, அமைச்சர புடிச்சு, இப்போதான் தண்ணீ விக்க ஆரம்பிச்சு நாலு காசு பாக்க ஆரம்பிச்சிருக்கோம். இப்ப வந்து உலக வங்கி, உதவி-ன்னு கழுத்தறுக்க வந்துட்டானுக!!

அந்த உலக வங்கி தமிழன் அடிபட்டு ‘தண்ணீ.. தண்ணீ’-ன்னு ஈனக்குரல்ல கத்துவாரு. அப்டின்னு கதை முடியும்.

இந்தக் கதை படிச்சிட்டு ரொம்ப சோகமா ஆயிட்டேன். கதை கற்பனைன்னாலும், 1970-கள்லயே தண்ணீர் பிரச்சனையும், உலக வங்கியோட எச்சரிக்கையும் உண்மைதான.

அதே மாதிரி டாக்டர் M.S.உதயமூர்த்தி 1980கள்ல எழுதின ஒரு புத்தகத்துலயும் தண்ணீர் பிரச்சனையையும், உலக வங்கியோட எச்சரிக்கையையும், நதிகள இணைக்கறதோட அவசியத்தையும் எழுதியிருக்காரு.

எழுபதுகள், எண்பதுகள்லயே எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பேசி, எழுதியிருக்கற ஒரு பிரச்சனை 2006 தேர்தல்லகூட முக்கியத்துவம் பெறலயே-ன்னு நெனைச்சா இன்னும் வருத்தமா இருக்கு.

இதுபத்தி நாம என்ன செய்யப்போறோம்??