மக்கள் தீர்ப்பு.

இந்தத் தேர்தல்ல யார் ஜெயிக்கப் போறாங்க? அடுத்து என்னென்ன நாடகங்கள் அரங்கேறப்போகுது? யார் யாரெல்லாம் எங்கெங்க தாவப்போறாங்க? பதவி போதைல யார்யாரெல்லாம் என்னென்ன ஆட்டம் போடப்போறாங்க? இந்த யோசனைல வேற சிந்தனைகள் இல்ல. So வேற பதிவுகள் எதுவும் போடல.

இந்தத் தேர்தல் எனக்கும் நல்ல பாடம்-ன்னு நெனைக்கறேன். நான் கவனிச்ச விஷயங்கள்..

1. திமுக. இலவச T.V, Gas stove கொடுக்கறதா சொன்ன இந்தக் கட்சி ஜெயிக்கக்கூடாது-ன்னு நெனைச்சேன்.
காரணம்,
a. அரசு பணம் அனாவசியத்துக்கு செலவு.
b. அந்த tvகளையும் அவங்க சீனால இருந்து இறக்குமதி செய்யறேங்கறாங்க (நம்ம நாட்டு தொழிற்சாலைகள் தலைல மண்ணள்ளி போட்டுட்டு).
c. பொதுவாவே இலவசம்-ங்கறது ஒரு ஏமாத்து வேலை-ன்னு நெனைக்கறதால.

2. இந்த அறிவிப்புகள் வந்தப்புறம் அந்தக் கட்சியோட செல்வாக்கு அதிகமானதுதான் ரொம்ப வருத்தப்பட வெச்சுது. எதிர் கட்சிகளும் போட்டிபோட்டுகிட்டு இலவச அறிவிப்புகள் விடற அளவுக்கு.

3. இந்த இலவச அறிவிப்புகள் நம்ம மாநிலத்தோட நிக்காது. இந்த தேர்தல உத்துப் பாத்துகிட்டு இருக்குற அண்டை மாநில கட்சிகள் அங்க நடக்கற அடுத்த தேர்தல்ல இதே மாதிரி இலவசங்கள் அறிவிக்கும். சீன இறக்குமதிகள் இன்னும் அதிகமாகும். நாட்டோட பொருளாதாரம் என்னவாகும்?

4.இவங்க ஜெயிச்சா என்னென்ன கூட்டணி குழப்பங்கள்-ன்னு வேற தெரியல. காங்கிரஸ் கொஞ்சம் நம்பிக்கை தந்தாலும், அவங்களோட உட்கட்சி பூசல்கள நெனைச்சா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

5. அடுத்ததா அதிமுக. வருமான வரி ஒழுங்கா கட்டாத தலைவர். நீதிமன்றத்த மதிக்காத ஒரு தலைவர். ஏகப்பட்ட வழக்குகள் நிலுவைல இருக்குற ஒரு தலைவர். அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் தன் இஷ்டத்துக்கு மாற்றி விளையாடும் ஒரு தலைவர். அவர் கட்சி ஜெயிக்கணுமா?

6. வைகோ. இவருக்குத்தான் இந்தத் தேர்தல் ஒரு சோதனையா போச்சு. இவர் சேர்ந்ததால அதிமுகவுக்கு பலமா பலவீனமா-ன்னு தெரியல. Very Instable.

7. அடுத்த அணியா நான் கவனிச்சது விஜயகாந்த். அவர் அரசியலுக்குப் புதுசுன்னாலும் அவர் மேல ஒரு மதிப்பு இருக்கு. ஆனா அவர் கட்சி சார்பா நிக்கறவங்க யாரு? அவங்கள்லாம் எப்படிப்பட்டவங்கன்னு தெரியல. இவர் கட்சி அதிக இடங்கள்ல ஜெயிக்கலன்னாலும், தேர்தலுக்கு அப்புறம் அவரோட நடவடிக்கைகள்லாம் கவனிக்கணும்-னு நெனைச்சுகிட்டு இருக்கேன். That will show his stability.

8. IIT மாணவர்கள். இவங்க ஜெயிக்கணும்-னு ஆசை. இவங்க எப்படி பிரச்சாரம் செஞ்சாங்கன்னு எந்த செய்தி ஊடகமும் சொல்லாதது கொஞ்சம் வருத்தம்.

9. கார்த்திக் வெளையாண்ட வெளையாட்டெல்லாம் ஊசிப் பட்டாசுகள். அவ்ளோ முக்கியமா எனக்குப் படல.

தேர்தல் முடிவுகள் நாளைக்கு சொல்லப் போறாங்க. நம்ம தேசம் போகும் பாதைய மக்கள் தேர்ந்தெடுத்திருக்காங்க. ஒரு சந்தோஷமான விஷயம் 70.22 % மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க. அந்த தீர்ப்பு என்னன்னு தெரிஞ்சுக்க ஆவலா, த்ரில்லிங்கா காத்துகிட்டு இருக்கேன்.