அடுத்து..

தமிழக தேர்தல்ல வெற்றி பெற்ற திமுகவினருக்கும், புதிய அமைச்சர்களுக்கும், முதல் அமைச்சருக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

அனேகமான தொகுதிகள்ல அதிகமான வாக்குகள் வாங்கி மூன்றாவது அணியா வந்திருக்கிற விஜயகாந்த் அணிக்கும் என்னோட வாழ்த்துக்கள். மக்கள் மாற்றத்தை எதிர்பாக்கறதுக்கு நல்ல அடையாளம்.

இன்னொரு அடையாளம், லோக் பரித்ரன். IIT மாணவர்கள். அவங்களும் அதிகமான வாக்குகள் வாங்கியிருக்காங்க. அண்ணா நகர்ல போட்டியிட்ட ராஜாமணி 11,665 ஓட்டுகளையும் மைலாப்பூர் தொகுதில போட்டியிட்ட சந்தான கோபாலன் வாசுதேவ் 9,436 ஓட்டுகளையும் வாங்கியிருக்காங்க. சந்தான கோபாலன் வாசுதேவ் மயிலாப்பூர் தொகுதில 3 வது இடத்தைப் பிடிச்சிருக்காரு. (திமுகவோட ஸ்டார் வேட்பாளர் நெப்போலியன், இந்தத் தொகுதில நின்னு தொல்வியடைஞ்சாரு.)

மொத்தமா IIT மாணவர்கள் 34,000 வாக்குகள் வாங்கியிருக்காங்க.
அவங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

தேர்தல் ஃபீவர் ஓவர்ங்கறதால, Over to ரெகுலர் பதிவுகள்.

அடுத்ததா..
டாக்டர் M.S. உதயமூர்த்தி பத்தியும், அவர் எழுதின ‘வெற்றி மனோபாவம்’, ‘உலகால் அறியப்படாத ரகசியம்’ புத்தகங்கள் பத்தியும், அவர் தொடங்கின மக்கள் சக்தி இயக்கம் பத்தியும் சில பதிவுகளும், ராபர்ட் கியோஸ்க்கி எழுதின Rich Dad Pood Dad புத்தகம் பத்தி சில பதிவுகளும் எழுதலாம்-னு பாக்கறேன்.

நேத்து தங்க வேட்டைல ‘அருணாச்சலப் பிரதேசத்தோட தலைநகரம் என்ன?’ன்னு ரம்யா கிருஷ்ணன் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாம முழிச்சதுனாலயும், இந்தியால எந்தெந்த மாநிலங்கள்ல என்னென்ன வளங்கள் கொட்டிக்கிடக்குது-ன்னு தெரிஞ்சுகற ஒரு ஆவல்லயும், இந்தியாவோட எல்லா மாநிலங்களையும் ஒரு ரவுண்டு வரலாம்-னும் ஆசை.

ஆமா!! இந்தியால எத்தனை மாநிலங்கள்??

(சரியான பதில் சொல்லியிருந்தீங்கன்னா, வலது கைய மேல தூக்கி, இடது பக்கமா கொண்டுபோயி, முதுகில ரெண்டு மூனு தடவ தட்டிக்கொடுத்துக்கோங்க!
தப்பான பதில்னா, தூக்கின வலது கைய நேர தலைக்கு கொண்டு போயி ஒரு கொட்டு கொட்டிக்கோங்க!!
:) )