டாக்டர் M.S.உதயமூர்த்தி.

டாக்டர் M.S.உதயமூர்த்தி அமெரிக்கால டாக்கடரேட் பண்ணிட்டு ஒரு வெற்றிகரமான தொழில் செஞ்சுகிட்டு இருந்தவரு. ஒரு பெரிய அமெரிக்க தொழிலதிபரா ஆகியிருக்க வேண்டியவரு. நம்ம ஊருக்கு, நாட்டுக்கு நாலு நல்லது செய்யணும்ங்கறதுக்காக இந்தியா திரும்பி போயி, 1988-ல மக்கள் சக்தி இயக்கம்-ன்னு ஒன்ன ஆரம்பிச்சு, இன்னமும் நாலு நல்லது செஞ்சுகிட்டு இருக்காரு.

இவர் எழுதின வெற்றி மனோபாவம்(ஜப்பானிய அணுகுமுறை)-ங்கற புத்தகம் சமீபத்துல படிச்சேன்.

நம்ம ஊரு அரசியல்வாதிகள் மேல சுத்தமா நம்மிக்கை இழந்தவரா தெரியறாரு.
‘நம் நாடு என்றாவது மாறவேண்டும்! இப்படி எழுதி தெரிவித்தால் ஏதாவது எங்காவது ஒரு நல்ல மண்ணில் இந்த எண்ணம் விழாதா என்ற நல்லெண்ணத்தில் – ஆதங்கத்தில் – எழுதப்பட்டது இந்நூல்’-ன்னு முன்னுரைல எழுதறாரு.

ஜப்பானோட அருமை பெருமைகளையெல்லாம் சொல்றாரு. ஜப்பான்ல எப்டி தொழில் பண்றாங்க, அரசியல்வாதிங்க எப்டி இருக்காங்க-ங்கறதையெல்லாம் சொல்றாரு. ஜப்பானிய கார் கம்பெனிகள் அமெரிக்க கார் மார்க்கெட்ட ஆக்கிரமிச்சத பத்தி பெருமையா சொல்றாரு. ஜப்பான் டாக்ஸி ட்ரைவரையும், சென்னை ஆட்டோ ட்ரைவர்களையும்(இந்திய ஆட்டோ/டாக்ஸி ட்ரைவர்கள் இல்ல. Just சென்னை ட்ரைவர்கள்).

நெறைய விஷயங்கள்ல, கம்பேர் பண்ண, ஜப்பான் மக்களையும் சென்னை மக்களையும் எடுத்துகிட்டு இருக்காரு போல. நம்ம மக்களுக்கு உதவி செய்ற குணம் இல்ல, ஏமாத்தற குணம்தான் இருக்கு-ன்னெல்லாம் அவர் சொல்றது ஒரு சின்ன வட்டத்து மக்களுக்குதான் பொருந்துமே தவிர பொதுவா இந்தியால இருக்கற எல்லோருக்கும் பொருந்தும்-னு தோனல.

இந்தப் புத்தகத்த அவர் எழுதினது 1998-ல. இப்போ எழுதினா வேற மாதிரி எழுதியிருப்பாரோ என்னவோ.

அழுத்தம் திருத்தமா அவர் சொல்ற விஷயங்கள்.
1. Being honest never lets you down.
2. Think bigger/global.
3. Politicians should think for the best of the country & people not thier parties.

வேற ஊரையோ நாட்டையோ காட்டி அவங்கமாதிரி நம்ம ஊர்ல மக்கள் ஏன் இல்ல-ன்னு யாராவது சொன்னா, சொல்றவங்கமேல நான் டெப்பாசிட் பண்ணி வெச்சிருக்குற நல்ல மதிப்பையெல்லாம் உடனடியா வித்ட்ரா பண்ணிடுவேன். இருந்தாலும் டாக்டர்.MSU நம்ம ஊருக்காக நெறைய நல்லது பண்ணியிருக்காரு-ங்கறதுனால அவர் மேல வெச்சிருந்த மதிப்ப வித்ட்ரா பண்ல!!

நம்ம நாடு உயரணும்-ங்கற எண்ண விதைய விதைக்கறதுல அப்துல் கலாம் அவர்களுக்கும் இவருக்கும் நெறைய வித்தியாசங்கள்.