மீண்டும்..

ரெண்டு மாச இடைவெளிக்கப்புறம் மீண்டும் எழுதலாம்னு பாக்கறேன். இந்த ரெண்டு மாசமா மகாத்மா காந்தியடிகளோட ‘சத்திய சோதனை’ புத்தகம் படிச்சுகிட்டு இருக்கேன். காந்தியடிகளோட, அவர் காலத்துல, சேர்ந்து நடந்து வந்த மாதிரி ஒரு ஃபீலிங்.

ரொம்ப ரசிச்சு படிச்சுகிட்டு இருக்கேன். ரொம்ப சுவாரசியமா எழுதியிருக்காரு. தமிழ் மொழிபெயர்ப்பும் நல்லா பண்ணியிருக்காங்க. மொதல் ஒரு பத்து அத்தியாங்கள் ஆங்கிலத்துல http://www.nalanda.nitc.ac.in சைட்ல படிச்சேன். அப்புறம் 30 ரூபாய் கொடுத்து தமிழ்ல எழுதப்பட்ட புத்தகம் வாங்கி படிச்சுகிட்டு இருக்கேன். இந்தப் புத்தகம் பத்தியும் நான் கத்துகிட்ட விஷயங்கள பத்தியும் அடுத்து சொல்றேன்.

போன தடவை இந்தியா போயிருந்தப்போ ரெண்டு பேர சந்திக்க முயற்சி செஞ்சேன்.
1. டாக்டர் M.S.உதயமூர்த்தி.
2. கேப்டன் விஜயகாந்த்.

மக்கள் சக்தி இயக்கம் வெப் சைட்ல இருந்து அவங்க போன் நம்பர பிடிச்சு அவங்கள கால் பண்ண முயற்சி செஞ்சேன். ரெண்டு நாள் முயற்சி செஞ்சும் யாரும் எடுக்கல.

கேப்டன் விஜயகாந்தோட போன் நம்பர கூகுள் கிட்ட கேட்டேன். கூகுள் தந்த நம்பர்கள்லாம் தப்பான நம்பர்களா இருந்துது. சரி அடுத்தமுறை முயற்சி செய்யலாம்-னு விட்டுட்டேன். உங்க யார் கிட்டயாவது இவங்களோட சரியான முகவரி/போன் நம்பர் இருந்தா சொல்லுங்க.

இவ்ளோ நாளா நான் ஒன்னுமே எழுதலன்னாலும், sarav.net-க்கு வருகை தந்த நண்பர்கள் எல்லோருக்கும் என்னோட நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்.