நானே வருவேன்!!

‘நானே வருவேன்!!’-ன்னு பழைய பாட்டு ஒன்னு இருக்கு. காலேஜ்ல படிக்கற காலங்கள்ல, நான் தங்கியிருந்த வீட்டுக்கு பக்கதுல இருக்குற டீக்கடைகள்ல, நைட் பதினோரு மணிக்கு மேல இந்தப் பாட்ட போட்றுவாங்க. கேட்டாலே ஒரே திகிலா இருக்கும். தூக்கமே வராது. யாரோ வந்து கதவ தட்ற மாதிரியே இருக்கும்.

அதே மாதிரியான ஒரு திகில (அ) பயத்த கொடுக்குது எர்னெஸ்டோ (Ernesto)-ங்கற பேரு. இந்த வருஷ அமெரிக்க ஹரிக்கேன்களோட புள்ளையார் சுழி. E, F, G, H -ன்னு அகர வரிசைல ஆட்டம் போடப்போற சுழற்காற்றுகள் சீரீஸோட முதல் சுழி.

(படத்துல இருக்கறவரு போன வருஷம் வந்த ஐவன் (Ivan))
போன வருஷ சூறாவளிகள் படுத்தின பாடுகள்ல இருந்து இந்த வருஷம் எந்த விதத்துலயாவது வித்தியாசமா இருக்கப்போகுதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் / முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்-னு எதாவது பண்றாங்களா-ன்னு தெரிஞ்சுகலாம்-ன்னு போன வாரம் T V சானல்கள்ல தேடினேன். ஒன்னும் இல்ல.

இன்னிக்கு வானம் மூடியிருக்கு. எர்னெஸ்டோ எஃபெக்ட். பலம் அதிகமாகுது, கொறையுது-ன்னு எர்னெஸ்டோ-வோட ஜாதகம் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நேரத்துல இந்த ஏரியாவ கடக்கும், இத்தனை மணிக்கு இங்க மழை வரும்-ன்னு ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

நானே வருவேன்!!‘-ன்னு யாரோ பாடற மாதிரியே இருக்கு!!