கிராமம் இருந்த இடம்.

அடுத்ததா நான் படிச்சுகிட்டு இருக்கறது நவீன இலக்கியவாதி, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதின புத்தகங்களான, ‘துணையெழுத்து’ மற்றும் ‘கதாவிலாசம்’. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்குற புத்தகங்கள்.

இலக்கியவாதிகள்னாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜியா இருக்கும். சங்க இலக்கியங்கள பத்தி புரியாத பாஷைல பேசறவங்க-ங்கற நெனைப்புதான் வரும். ஆனா இலக்கியவாதி-ங்கறவங்க அந்தந்த கால கட்டங்கள்ல வாழற மக்கள, அவங்களோட வாழ்க்கைய பதிவு செய்யறவங்க-ன்னும், இந்த காலத்து இலக்கியவாதிகளையெல்லாம் நவீன இலக்கியவாதிகள்-ன்னு சொல்றாங்க-ன்னும் சொல்லி இந்தப் புத்தகங்கள படிக்க கொடுத்தான் என் தம்பி. (இதுக்கு முன்னாடி பா.ரா புத்தகங்கள அறிமுகம் செஞ்சதும் என் தம்பிதான்.)

எஸ்.ராவோட எழுத்துகள் எத்தனையோ வித்தியாசமான மக்கள, புதுப் புது இடங்கள, பண்டை காலத்து சிற்பங்கள, இமைய மலையோட குளிற-ன்னு நெறைய விஷயங்கள அறிமுகப்படுத்துது.

சேரனோட ‘ஆட்டோகிராஃப்’ படம், நம்ம வாழ்க்கையில நடந்த விஷயங்கள ஞாபகப்படித்தின மாதிரி, இவரோட எழுத்துகளும் சில நேரம் நம்ம வாழ்க்கையோட ‘ஃளாஷ்பேக்’ காட்சிகள திரும்பவும் திரையிடுது.

‘கதாவிலாசம்’-ங்கறது எஸ்.ரா-வோட வாழ்க்கைல நடந்த விஷயங்களையும் அவை ஞாபகப்படுத்தின கதைகளையும் பத்தின தொகுப்பு.
‘துணையெழுத்து’ புத்தகம் அவர் கடந்து வந்த(, நடந்து வந்த, தேடிப்போன, ஓடிப்போன, வாடிப்போன, காணாமல் போன… ) வாழ்க்கைப் பாதைல நடந்த நிகழ்வுகளோட பதிவுகள்.

ரெண்டு புத்தகத்துலயும் சில அத்தியாங்கள்ல, கிராமத்துல இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்து வர்ற குடும்பங்களைப் பத்தியும், அவங்களோட மனநிலைய பத்தியும் ரொம்ப உறுக்கமா சொல்றாரு. குடும்பமே இடம் பெயர்ந்து போனதுக்கப்புறமும் கிராமத்த விட்டு போகப் பிடிக்காம கிராமத்துலயே இருந்து இறந்து போனவங்களையும், விவசாயம் பொய்த்துப் போனதுனால, மக்கள் மனங்கள்ல வெறுமையும் வெறுப்பும் மட்டுமே மிஞ்சியிருந்ததையும் உறுக்கமா பதிவு செஞ்சிருக்காரு.

அதையெல்லாம் படிக்கும்போது எனக்கு இந்தப் பாட்டு ஞாபகம் வந்துச்சு. அமெரிக்க வந்த நாட்கள்ல ஒவ்வொரு முறை கேட்கும்போதும் கண்களை ஈரமாக்கின பாட்டு.

குடும்பதுல எல்லோரும் கிராமத்துல இருந்து இடம்பெயர்ந்துட்டாலும், எப்போவாவது அவங்க திரும்பி வந்துடுவாங்க-ன்னு உயிர கைல பிடிச்சிட்டு காத்துகிட்டு இருக்கற ஒரு பாட்டியோட கடைசி நம்பிக்கைய சொல்ற பாட்டு.

இந்தியால எத்தனையோ தடவ கேட்டிருந்தாலும் மனசுல நிக்காத, அமெரிக்கால வந்து மனச தெச்ச பாட்டு.

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்வார்க்கவா
வாசல் பார்த்து
கண்கள் பூத்து
காத்து நின்றேன் வா!!

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் சென்று பார்ப்பேன்.
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்.
கண்களும் ஓய்ந்தது
ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்; நீயும் நெய்யாக வந்தாய்
இந்தக் கண்ணீரில் சோகம் இல்லை; இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தியென்றாலும் நீயும் என் தாய்.

[audio:http://sarav.net/wp-content/PoovePoochudavaa.mp3]

பேத்தி வந்து இந்த ஒரு பாட்டியோட கண்ணீர்ல இருந்த சோகத்த போக்கிட்டாலும், ‘அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்’ இன்னமும் ஓடி வந்து ஏங்கற பாட்டிகள்/அம்மாக்கள் இருந்துகிட்டு தான இருக்காங்க??